Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 13

An-Nisa

(an-Nisāʾ)

௧௨௧

اُولٰۤىِٕكَ مَأْوٰىهُمْ جَهَنَّمُۖ وَلَا يَجِدُوْنَ عَنْهَا مَحِيْصًا ١٢١

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
mawāhum
مَأْوَىٰهُمْ
அவர்களுடைய ஒதுங்குமிடம்
jahannamu
جَهَنَّمُ
நரகம்
walā yajidūna
وَلَا يَجِدُونَ
பெறமாட்டார்கள்
ʿanhā
عَنْهَا
அதை விட்டு
maḥīṣan
مَحِيصًا
ஒரு மீளுமிடத்தை
இத்தகையவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து தப்ப யாதொரு வழியையும் காணமாட்டார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨௧)
Tafseer
௧௨௨

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۗ وَعْدَ اللّٰهِ حَقًّا ۗوَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِيْلًا ١٢٢

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
sanud'khiluhum
سَنُدْخِلُهُمْ
அவர்களை நுழைப்போம்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَآ
அவற்றில்
abadan
أَبَدًاۖ
என்றென்றும்
waʿda
وَعْدَ
வாக்குறுதி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ḥaqqan
حَقًّاۚ
உண்மையான
waman
وَمَنْ
யார்
aṣdaqu
أَصْدَقُ
மிக உண்மையானவன்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்வை விட
qīlan
قِيلًا
சொல்லில்
எவர்கள் (இத்தகைய ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின் றார்களோ அவர்களை (மறுமையில்) நாம் சுவனபதிகளில் புகுத்து வோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். அல்லாஹ் வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! அல்லாஹ்வை விட உண்மை சொல்பவர் யார்? ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨௨)
Tafseer
௧௨௩

لَيْسَ بِاَمَانِيِّكُمْ وَلَآ اَمَانِيِّ اَهْلِ الْكِتٰبِ ۗ مَنْ يَّعْمَلْ سُوْۤءًا يُّجْزَ بِهٖۙ وَلَا يَجِدْ لَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ١٢٣

laysa bi-amāniyyikum
لَّيْسَ بِأَمَانِيِّكُمْ
இல்லை/உங்கள் விருப்பங்களைக் கொண்டு
walā
وَلَآ
இன்னும் இல்லை
amāniyyi
أَمَانِىِّ
விருப்பங்கள்
ahli l-kitābi
أَهْلِ ٱلْكِتَٰبِۗ
வேதக்காரர்களின்
man
مَن
எவன்
yaʿmal
يَعْمَلْ
செய்வான்
sūan
سُوٓءًا
ஒரு தீமையை
yuj'za
يُجْزَ
கூலி கொடுக்கப்படுவான்
bihi
بِهِۦ
அதற்கு
walā yajid
وَلَا يَجِدْ
இன்னும் பெறமாட்டான்
lahu
لَهُۥ
தனக்கு
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
waliyyan
وَلِيًّا
பாதுகாவலரை
walā naṣīran
وَلَا نَصِيرًا
இன்னும் உதவியாளரை
(நம்பிக்கையாளர்களே! மறுமையில்) உங்கள் விருப்பப் படியோ, வேதத்தையுடையோர் விருப்பப்படியோ (காரியம் நடப்பது) இல்லை. ஆயினும், எவன் பாவம் செய்கின்றானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். அவன் அல்லாஹ்வையன்றி தனக்கு உதவி செய்பவர்களையோ அல்லது துணை புரிபவர்களையோ (அங்கு) காணமாட்டான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨௩)
Tafseer
௧௨௪

وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤىِٕكَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُوْنَ نَقِيْرًا ١٢٤

waman
وَمَن
இன்னும் எவர்
yaʿmal
يَعْمَلْ
செய்வார்
mina
مِنَ
இருந்து
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகள்
min
مِن
இருந்து
dhakarin
ذَكَرٍ
ஓர் ஆண்
aw
أَوْ
அல்லது
unthā
أُنثَىٰ
ஒரு பெண்
wahuwa
وَهُوَ
அவர் இருக்க
mu'minun
مُؤْمِنٌ
நம்பிக்கையாளராக
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
yadkhulūna
يَدْخُلُونَ
நுழைவார்கள்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
walā yuẓ'lamūna
وَلَا يُظْلَمُونَ
இன்னும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்
naqīran
نَقِيرًا
கீறல் அளவும்
ஆகவே, ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨௪)
Tafseer
௧௨௫

وَمَنْ اَحْسَنُ دِيْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ۗوَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِيْمَ خَلِيْلًا ١٢٥

waman
وَمَنْ
யார்
aḥsanu
أَحْسَنُ
மிக அழகானவர்
dīnan
دِينًا
மார்க்கத்தால்
mimman
مِّمَّنْ
எவரைவிட
aslama
أَسْلَمَ
பணியவைத்தார்
wajhahu
وَجْهَهُۥ
தன் முகத்தை
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
wahuwa
وَهُوَ
அவர் இருக்க
muḥ'sinun
مُحْسِنٌ
நற்குணமுடையவராக
wa-ittabaʿa
وَٱتَّبَعَ
இன்னும் பின்பற்றினார்
millata
مِلَّةَ
மார்க்கத்தை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுடைய
ḥanīfan
حَنِيفًاۗ
உறுதியுடையவராக
wa-ittakhadha
وَٱتَّخَذَ
இன்னும் எடுத்துக்கொண்டான்
l-lahu ib'rāhīma khalīlan
ٱللَّهُ إِبْرَٰهِيمَ خَلِيلًا
அல்லாஹ்/இப்ராஹீமை/நண்பராக
எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, நன்மையும் செய்து, இப்ராஹீமுடைய நேரான (இம்)மார்க்கத்தையும் பின்பற்று கின்றாரோ அவரை விட அழகான மார்க்கத்தை உடையவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை(த் தன்னுடைய) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨௫)
Tafseer
௧௨௬

وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَيْءٍ مُّحِيْطًا ࣖ ١٢٦

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கு
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۚ
இன்னும் பூமியிலுள்ளவை
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
muḥīṭan
مُّحِيطًا
சூழ்ந்தறிபவனாக
வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் அனைத்தையும் (தன் ஞானத்தைக் கொண்டு) சூழ்ந்த(றிப)வனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨௬)
Tafseer
௧௨௭

وَيَسْتَفْتُوْنَكَ فِى النِّسَاۤءِۗ قُلِ اللّٰهُ يُفْتِيْكُمْ فِيْهِنَّ ۙوَمَا يُتْلٰى عَلَيْكُمْ فِى الْكِتٰبِ فِيْ يَتٰمَى النِّسَاۤءِ الّٰتِيْ لَا تُؤْتُوْنَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُوْنَ اَنْ تَنْكِحُوْهُنَّ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الْوِلْدَانِۙ وَاَنْ تَقُوْمُوْا لِلْيَتٰمٰى بِالْقِسْطِ ۗوَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ كَانَ بِهٖ عَلِيْمًا ١٢٧

wayastaftūnaka
وَيَسْتَفْتُونَكَ
மார்க்கத் தீர்ப்பு கோருகின்றனர்/உம்மிடம்
fī l-nisāi
فِى ٱلنِّسَآءِۖ
பெண்களைப் பற்றி
quli l-lahu
قُلِ ٱللَّهُ
கூறுவீராக/அல்லாஹ்
yuf'tīkum
يُفْتِيكُمْ
தீர்ப்பளிக்கிறான்
fīhinna
فِيهِنَّ
அவர்களைப் பற்றி
wamā yut'lā
وَمَا يُتْلَىٰ
இன்னும் எது ஓதப்படுகிறதோ
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
வேதத்தில்
fī yatāmā
فِى يَتَٰمَى
அனாதைகளில்
l-nisāi
ٱلنِّسَآءِ
பெண்கள்
allātī
ٱلَّٰتِى
எவர்கள்
lā tu'tūnahunna
لَا تُؤْتُونَهُنَّ
நீங்கள் கொடுப்பதில்லை/அவர்களுக்கு
mā kutiba
مَا كُتِبَ
எது/விதிக்கப்பட்டது
lahunna
لَهُنَّ
அவர்களுக்கு
watarghabūna
وَتَرْغَبُونَ
விரும்புகிறீர்கள்
an
أَن
நீங்கள் மண முடிப்பது
tankiḥūhunna
تَنكِحُوهُنَّ
நீங்கள் மண முடிப்பது அவர்களை
wal-mus'taḍʿafīna
وَٱلْمُسْتَضْعَفِينَ
பலவீனர்கள்
mina
مِنَ
இருந்து
l-wil'dāni
ٱلْوِلْدَٰنِ
சிறுவர்கள்
wa-an taqūmū
وَأَن تَقُومُوا۟
இன்னும் நீங்கள் நிற்பது
lil'yatāmā
لِلْيَتَٰمَىٰ
அனாதைகளுக்கு
bil-qis'ṭi
بِٱلْقِسْطِۚ
நீதத்தைக் கொண்டு
wamā tafʿalū
وَمَا تَفْعَلُوا۟
எது/செய்வீர்கள்
min
مِنْ
இருந்து
khayrin
خَيْرٍ
நன்மை
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
bihi
بِهِۦ
அதை
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
(நபியே!) அவர்கள் உங்களிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு (அடுத்த வசனத்திலிருந்து) கட்டளையிடுகின்றான். இதற்கு முன்னர் (பெண்களைப் பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டது அநாதைப் பெண்களைப் பற்றியதாகும். அவர்களுக்குக் குறிப்பிட்டுள்ள மஹரை நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதைப் பற்றியும் (அவர்களிலுள்ள) விவரமறியா குழந்தைகளைப் பற்றியும் (அதில் கூறி) "அநாதைகள் விஷயத்தில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, (அவர்களுக்கு) நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்து கொள்வான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨௭)
Tafseer
௧௨௮

وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْۢ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ اَنْ يُّصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ۗوَالصُّلْحُ خَيْرٌ ۗوَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّۗ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ١٢٨

wa-ini im'ra-atun khāfat
وَإِنِ ٱمْرَأَةٌ خَافَتْ
ஒரு பெண் பயந்தால்
min
مِنۢ
இருந்து
baʿlihā
بَعْلِهَا
தனது கணவன்
nushūzan aw
نُشُوزًا أَوْ
வெறுப்பை/அல்லது
iʿ'rāḍan
إِعْرَاضًا
புறக்கணிப்பை
falā junāḥa
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
ʿalayhimā
عَلَيْهِمَآ
அவ்விருவர் மீது
an yuṣ'liḥā
أَن يُصْلِحَا
அவ்விருவரும் சமாதானம் செய்வது
baynahumā
بَيْنَهُمَا
அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில்
ṣul'ḥan
صُلْحًاۚ
ஒரு சமாதான ஒப்பந்தத்தை
wal-ṣul'ḥu khayrun
وَٱلصُّلْحُ خَيْرٌۗ
சமாதானம்/சிறந்தது
wa-uḥ'ḍirati
وَأُحْضِرَتِ
அமைக்கப்பட்டுள்ளன
l-anfusu
ٱلْأَنفُسُ
ஆன்மாக்கள்
l-shuḥa
ٱلشُّحَّۚ
கஞ்சத்தனம் மீது
wa-in tuḥ'sinū
وَإِن تُحْسِنُوا۟
நீங்கள் நன்மைசெய்தால்
watattaqū
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சினால்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
bimā
بِمَا
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
khabīran
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக
எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் தன்னை (கடுமையாக இடையூறளிப்பான்) என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. (எவ்விதத்திலும் இருவரும் சம்மதித்த) சமாதானமே மிக மேலானது. (இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏதும் பொருள் கொடுக்கும்படி நேரிட்டால் பொதுவாக) ஒவ்வொரு ஆத்மாவும் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டு விடுகின்றது. ஆகவே, நீங்கள் (கஞ்சத்தனத்திற்கு உட்படாமல்) ஒவ்வொருவரும் மற்றவருக்கு உபகாரியாயிருந்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிந்து கொள்வான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨௮)
Tafseer
௧௨௯

وَلَنْ تَسْتَطِيْعُوْٓا اَنْ تَعْدِلُوْا بَيْنَ النِّسَاۤءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِيْلُوْا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ ۗوَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ١٢٩

walan tastaṭīʿū
وَلَن تَسْتَطِيعُوٓا۟
அறவே இயலமாட்டீர்கள்
an taʿdilū
أَن تَعْدِلُوا۟
நீங்கள் நீதமாக நடப்பதற்கு
bayna
بَيْنَ
இடையில்
l-nisāi
ٱلنِّسَآءِ
பெண்கள்,மனைவிகள்
walaw ḥaraṣtum
وَلَوْ حَرَصْتُمْۖ
நீங்கள் ஆசைப்பட்டாலும்
falā tamīlū
فَلَا تَمِيلُوا۟
ஆகவே சாய்ந்து விடாதீர்கள்
kulla l-mayli
كُلَّ ٱلْمَيْلِ
முற்றிலும் சாய்தல்
fatadharūhā
فَتَذَرُوهَا
விட்டு விடுவீர்கள் அவளை
kal-muʿalaqati
كَٱلْمُعَلَّقَةِۚ
தொங்கவிடப்பட்டவளைப் போன்று
wa-in tuṣ'liḥū
وَإِن تُصْلِحُوا۟
நீங்கள் சமாதானம் செய்து கொண்டால்
watattaqū
وَتَتَّقُوا۟
இன்னும் அல்லாஹ்வை அஞ்சினால்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
(நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் (முற்றிலும்) நீதமாக நடக்க வேண்டுமென்று (எவ்வளவு) விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கினவளாக விட்டு விடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்துகொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கிருபை புரிபவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨௯)
Tafseer
௧௩௦

وَاِنْ يَّتَفَرَّقَا يُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖۗ وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِيْمًا ١٣٠

wa-in yatafarraqā
وَإِن يَتَفَرَّقَا
அவ்விருவரும் பிரிந்து விட்டால்
yugh'ni
يُغْنِ
நிறைவடையச் செய்வான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
kullan
كُلًّا
ஒவ்வொருவரையும்
min saʿatihi
مِّن سَعَتِهِۦۚ
தன் கொடையினால்
wakāna
وَكَانَ
இன்னும் இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
wāsiʿan
وَٰسِعًا
விசாலமானவனாக
ḥakīman
حَكِيمًا
ஞானவானாக
(சமாதானத்துடன் சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையைக் கொண்டு (ஒருவர் மற்றொருவருக்கு) முற்றிலும் தேவையற்றவராக ஆக்கி விடுவான். (வழங்குவதில்) அல்லாஹ் மிக விசாலமானவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩௦)
Tafseer