Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௨௮

Qur'an Surah An-Nisa Verse 128

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْۢ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ اَنْ يُّصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ۗوَالصُّلْحُ خَيْرٌ ۗوَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّۗ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا (النساء : ٤)

wa-ini im'ra-atun khāfat
وَإِنِ ٱمْرَأَةٌ خَافَتْ
And if a woman fears
ஒரு பெண் பயந்தால்
min
مِنۢ
from
இருந்து
baʿlihā
بَعْلِهَا
her husband
தனது கணவன்
nushūzan aw
نُشُوزًا أَوْ
ill-conduct or
வெறுப்பை/அல்லது
iʿ'rāḍan
إِعْرَاضًا
desertion
புறக்கணிப்பை
falā junāḥa
فَلَا جُنَاحَ
then (there is) no sin
குற்றமே இல்லை
ʿalayhimā
عَلَيْهِمَآ
on both of them
அவ்விருவர் மீது
an yuṣ'liḥā
أَن يُصْلِحَا
that they make terms of peace
அவ்விருவரும் சமாதானம் செய்வது
baynahumā
بَيْنَهُمَا
between themselves -
அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில்
ṣul'ḥan
صُلْحًاۚ
a reconciliation
ஒரு சமாதான ஒப்பந்தத்தை
wal-ṣul'ḥu khayrun
وَٱلصُّلْحُ خَيْرٌۗ
and [the] reconciliation (is) best
சமாதானம்/சிறந்தது
wa-uḥ'ḍirati
وَأُحْضِرَتِ
And are swayed
அமைக்கப்பட்டுள்ளன
l-anfusu
ٱلْأَنفُسُ
the souls
ஆன்மாக்கள்
l-shuḥa
ٱلشُّحَّۚ
(by) greed
கஞ்சத்தனம் மீது
wa-in tuḥ'sinū
وَإِن تُحْسِنُوا۟
But if you do good
நீங்கள் நன்மைசெய்தால்
watattaqū
وَتَتَّقُوا۟
and fear (Allah)
இன்னும் நீங்கள் அஞ்சினால்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
then indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கிறான்
bimā
بِمَا
of what
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
you do
செய்கிறீர்கள்
khabīran
خَبِيرًا
All-Aware
ஆழ்ந்தறிந்தவனாக

Transliteration:

Wa inimra atun khaafat mim ba'lihaa nushoozan aw i'raadan falaa junaaha 'alaihi maaa ai yuslihaa bainahumaa sulhaa; wassulhu khair; wa uhdiratil anfusush shuhh; wa in tuhsinoo wa tattaqoo fa innal laaha kaana bimaa ta'maloona Khabeeraa (QS. an-Nisāʾ:128)

English Sahih International:

And if a woman fears from her husband contempt or evasion, there is no sin upon them if they make terms of settlement between them – and settlement is best. And present in [human] souls is stinginess. But if you do good and fear Allah – then indeed Allah is ever, of what you do, Aware. (QS. An-Nisa, Ayah ௧௨௮)

Abdul Hameed Baqavi:

எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் தன்னை (கடுமையாக இடையூறளிப்பான்) என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. (எவ்விதத்திலும் இருவரும் சம்மதித்த) சமாதானமே மிக மேலானது. (இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏதும் பொருள் கொடுக்கும்படி நேரிட்டால் பொதுவாக) ஒவ்வொரு ஆத்மாவும் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டு விடுகின்றது. ஆகவே, நீங்கள் (கஞ்சத்தனத்திற்கு உட்படாமல்) ஒவ்வொருவரும் மற்றவருக்கு உபகாரியாயிருந்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிந்து கொள்வான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௨௮)

Jan Trust Foundation

ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பை அல்லது புறக்கணிப்பை பயந்தால், அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை செய்வது அவ்விருவர் மீதும் குற்றமே இல்லை. சமாதான (ஒப்பந்த)ம் சிறந்ததாகும். ஆன்மாக்கள் கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் நன்மை செய்தால், அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.