Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௨௩

Qur'an Surah An-Nisa Verse 123

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَيْسَ بِاَمَانِيِّكُمْ وَلَآ اَمَانِيِّ اَهْلِ الْكِتٰبِ ۗ مَنْ يَّعْمَلْ سُوْۤءًا يُّجْزَ بِهٖۙ وَلَا يَجِدْ لَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا (النساء : ٤)

laysa bi-amāniyyikum
لَّيْسَ بِأَمَانِيِّكُمْ
Not by your desire
இல்லை/உங்கள் விருப்பங்களைக் கொண்டு
walā
وَلَآ
and not
இன்னும் இல்லை
amāniyyi
أَمَانِىِّ
(by the) desire
விருப்பங்கள்
ahli l-kitābi
أَهْلِ ٱلْكِتَٰبِۗ
(of the) People (of) the Book
வேதக்காரர்களின்
man
مَن
Whoever
எவன்
yaʿmal
يَعْمَلْ
does
செய்வான்
sūan
سُوٓءًا
evil
ஒரு தீமையை
yuj'za
يُجْزَ
will be recompensed
கூலி கொடுக்கப்படுவான்
bihi
بِهِۦ
for it
அதற்கு
walā yajid
وَلَا يَجِدْ
and not he will find
இன்னும் பெறமாட்டான்
lahu
لَهُۥ
for him
தனக்கு
min dūni
مِن دُونِ
from besides
அன்றி
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
waliyyan
وَلِيًّا
any protector
பாதுகாவலரை
walā naṣīran
وَلَا نَصِيرًا
and not any helper
இன்னும் உதவியாளரை

Transliteration:

Laisa bi amaaniyyikum wa laaa amaaniyyi Ahlil Kitaab; mai ya'mal sooo'ai yujza bihee wa laa yajid lahoo min doonil laahi waliyanw wa laa naseeraa (QS. an-Nisāʾ:123)

English Sahih International:

It [i.e., Paradise] is not [obtained] by your wishful thinking nor by that of the People of the Scripture. Whoever does a wrong will be recompensed for it, and he will not find besides Allah a protector or a helper. (QS. An-Nisa, Ayah ௧௨௩)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! மறுமையில்) உங்கள் விருப்பப் படியோ, வேதத்தையுடையோர் விருப்பப்படியோ (காரியம் நடப்பது) இல்லை. ஆயினும், எவன் பாவம் செய்கின்றானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். அவன் அல்லாஹ்வையன்றி தனக்கு உதவி செய்பவர்களையோ அல்லது துணை புரிபவர்களையோ (அங்கு) காணமாட்டான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௨௩)

Jan Trust Foundation

(முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நம்பிக்கையாளர்களே! வெற்றி) உங்கள் விருப்பங்களைக் கொண்டும் இல்லை, வேதக்காரர்களின் விருப்பங்களைக் கொண்டுமில்லை. எவன் ஒரு தீமையைச் செய்வானோ அவன் அதற்கு கூலி கொடுக்கப்படுவான். அல்லாஹ்வையன்றி தனக்கு ஒரு பாதுகாவலரையோ ஓர் உதவியாளரையோ பெறமாட்டான்.