Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௨௫

Qur'an Surah An-Nisa Verse 125

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ اَحْسَنُ دِيْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ۗوَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِيْمَ خَلِيْلًا (النساء : ٤)

waman
وَمَنْ
And who
யார்
aḥsanu
أَحْسَنُ
(is) better
மிக அழகானவர்
dīnan
دِينًا
(in) religion
மார்க்கத்தால்
mimman
مِّمَّنْ
than (one) who
எவரைவிட
aslama
أَسْلَمَ
submits
பணியவைத்தார்
wajhahu
وَجْهَهُۥ
his face
தன் முகத்தை
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்விற்கு
wahuwa
وَهُوَ
and he
அவர் இருக்க
muḥ'sinun
مُحْسِنٌ
(is) a good-doer
நற்குணமுடையவராக
wa-ittabaʿa
وَٱتَّبَعَ
and follows
இன்னும் பின்பற்றினார்
millata
مِلَّةَ
(the) religion
மார்க்கத்தை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(of) Ibrahim
இப்ராஹீமுடைய
ḥanīfan
حَنِيفًاۗ
(the) upright?
உறுதியுடையவராக
wa-ittakhadha
وَٱتَّخَذَ
And was taken
இன்னும் எடுத்துக்கொண்டான்
l-lahu ib'rāhīma khalīlan
ٱللَّهُ إِبْرَٰهِيمَ خَلِيلًا
(by) Allah Ibrahim (as) a friend
அல்லாஹ்/இப்ராஹீமை/நண்பராக

Transliteration:

Wa man ahsanu deenam mimmman aslama wajhahoo lillaahi wa huwa muhsinunw wattaba'a Millata Ibraaheema haneefaa; wattakhazal laahu Ibraaheema khaleelaa (QS. an-Nisāʾ:125)

English Sahih International:

And who is better in religion than one who submits himself to Allah while being a doer of good and follows the religion of Abraham, inclining toward truth? And Allah took Abraham as an intimate friend. (QS. An-Nisa, Ayah ௧௨௫)

Abdul Hameed Baqavi:

எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, நன்மையும் செய்து, இப்ராஹீமுடைய நேரான (இம்)மார்க்கத்தையும் பின்பற்று கின்றாரோ அவரை விட அழகான மார்க்கத்தை உடையவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை(த் தன்னுடைய) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௨௫)

Jan Trust Foundation

மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைத்து, அவர் நற்குணமுடையவராக இருக்க, இப்றாஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியுடையவராக பின்பற்றியவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? அல்லாஹ் இப்றாஹீமை நண்பராக எடுத்துக் கொண்டான்.