Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 9

An-Nisa

(an-Nisāʾ)

௮௧

وَيَقُوْلُوْنَ طَاعَةٌ ۖ فَاِذَا بَرَزُوْا مِنْ عِنْدِكَ بَيَّتَ طَاۤىِٕفَةٌ مِّنْهُمْ غَيْرَ الَّذِيْ تَقُوْلُ ۗ وَاللّٰهُ يَكْتُبُ مَا يُبَيِّتُوْنَ ۚ فَاَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا ٨١

wayaqūlūna
وَيَقُولُونَ
கூறுகின்றனர்
ṭāʿatun
طَاعَةٌ
கீழ்ப்படிதல்
fa-idhā barazū
فَإِذَا بَرَزُوا۟
அவர்கள் வெளியேறினால்
min
مِنْ
இருந்து
ʿindika
عِندِكَ
உம்மிடம்
bayyata
بَيَّتَ
சதி செய்கின்றனர்
ṭāifatun
طَآئِفَةٌ
ஒரு கூட்டம்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
ghayra alladhī
غَيْرَ ٱلَّذِى
மாறாக/எது
taqūlu
تَقُولُۖ
கூறுகிறீர்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaktubu
يَكْتُبُ
பதிவு செய்கிறான்
mā yubayyitūna
مَا يُبَيِّتُونَۖ
எதை/சதிசெய்கிறார்கள்
fa-aʿriḍ
فَأَعْرِضْ
ஆகவே புறக்கணிப்பீராக
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
watawakkal
وَتَوَكَّلْ
இன்னும் நம்பிக்கை வைப்பீராக
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வின் மீது
wakafā
وَكَفَىٰ
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளனாக
(நபியே! "உங்களுக்கு நாம் முற்றிலும்) கட்டுப்பட்டோம்" என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர். (எனினும்,) அவர்கள் உங்களது சமூகத்திலிருந்து சென்றுவிட்டாலோ அவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் வாயால்) கூறியதற்கு மாறாக இரவெல்லாம் சதி ஆலோசனை செய்துகொண்டே இருக்கின்றனர். அவர்கள் இரவெல்லாம் சதி ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ் பதிவு செய்து கொள்கின்றான். ஆதலால், நீங்கள் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வையே நம்புங்கள். (உங்களுக்கு) பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮௧)
Tafseer
௮௨

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ ۗ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا ٨٢

afalā yatadabbarūna
أَفَلَا يَتَدَبَّرُونَ
அவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா?
l-qur'āna
ٱلْقُرْءَانَۚ
குர்ஆனை
walaw kāna
وَلَوْ كَانَ
இருந்திருந்தால்
min
مِنْ
இருந்து
ʿindi
عِندِ
இடம்
ghayri
غَيْرِ
அல்லாதவர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
lawajadū
لَوَجَدُوا۟
கண்டிருப்பார்கள்
fīhi
فِيهِ
இதில்
ikh'tilāfan
ٱخْتِلَٰفًا
முரண்பாட்டை
kathīran
كَثِيرًا
பல
இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் காண்பார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮௨)
Tafseer
௮௩

وَاِذَا جَاۤءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَوْفِ اَذَاعُوْا بِهٖ ۗ وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا ٨٣

wa-idhā
وَإِذَا
வந்தால்
jāahum
جَآءَهُمْ
அவர்களிடம்
amrun
أَمْرٌ
ஒரு செய்தி
mina
مِّنَ
பற்றி
l-amni
ٱلْأَمْنِ
பாதுகாப்பு
awi
أَوِ
அல்லது
l-khawfi
ٱلْخَوْفِ
பயம்
adhāʿū
أَذَاعُوا۟
பரப்புகின்றனர்
bihi
بِهِۦۖ
அதை
walaw raddūhu
وَلَوْ رَدُّوهُ
அவர்கள் கொண்டு சென்றால்/அதை
ilā l-rasūli
إِلَى ٱلرَّسُولِ
தூதரிடம்
wa-ilā ulī l-amri
وَإِلَىٰٓ أُو۟لِى ٱلْأَمْرِ
இன்னும் அதிகாரிகளிடம்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
laʿalimahu
لَعَلِمَهُ
அதை நன்கறிந்து கொள்வார்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yastanbiṭūnahu
يَسْتَنۢبِطُونَهُۥ
யூகிப்பார்கள்/அதை
min'hum
مِنْهُمْۗ
அவர்களில்
walawlā
وَلَوْلَا
இல்லையென்றால்
faḍlu
فَضْلُ
அருள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
waraḥmatuhu
وَرَحْمَتُهُۥ
இன்னும் அவனுடைய கருணை
la-ittabaʿtumu
لَٱتَّبَعْتُمُ
பின்பற்றி இருப்பீர்கள்
l-shayṭāna
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தானை
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًا
சிலரை
பயத்தையோ (பொது மக்கள்) பாதுகாப்பையோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதனை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களுடைய அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால் அதிலிருந்து ஊகிக்கக்கூடிய அவர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கிருபையும் உங்கள்மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮௩)
Tafseer
௮௪

فَقَاتِلْ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۚ لَا تُكَلَّفُ اِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِيْنَ ۚ عَسَى اللّٰهُ اَنْ يَّكُفَّ بَأْسَ الَّذِيْنَ كَفَرُوْا ۗوَاللّٰهُ اَشَدُّ بَأْسًا وَّاَشَدُّ تَنْكِيْلًا ٨٤

faqātil
فَقَٰتِلْ
ஆகவே போரிடுவீராக
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lā tukallafu
لَا تُكَلَّفُ
பணிக்கப்பட மாட்டீர்
illā nafsaka
إِلَّا نَفْسَكَۚ
உம்மைத் தவிர
waḥarriḍi
وَحَرِّضِ
இன்னும் தூண்டுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَۖ
நம்பிக்கையாளர்களை
ʿasā
عَسَى
கூடும்/அல்லாஹ்
l-lahu an
ٱللَّهُ أَن
அவன் தடுக்க
yakuffa
يَكُفَّ
ஆற்றலை
basa alladhīna
بَأْسَ ٱلَّذِينَ
நிராகரிப்பாளர்களின்
kafarū
كَفَرُوا۟ۚ
அல்லாஹ்
wal-lahu
وَٱللَّهُ
மிக கடுமையானவன்
ashaddu
أَشَدُّ
ஆற்றலால்
basan
بَأْسًا
இன்னும் கடுமையானவன்
wa-ashaddu
وَأَشَدُّ
தண்டிப்பதால்
tankīlan
تَنكِيلًا
Err
(நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் உங்களைத் தவிர (மற்றெவரையும் போருக்குச் செல்லும்படி) நிர்ப்பந்திப்பதற்கில்லை. (ஆயினும்,) நம்பிக்கையாளர்களை (போருக்குச் செல்ல) தூண்டுங்கள். நிராகரிப்பவர்களின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான். (ஏனென்றால்) அல்லாஹ் போர்செய்வதில் மிக வல்லவனாகவும், தண்டிப்பதில் மிகக் கடுமையானவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮௪)
Tafseer
௮௫

مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهٗ نَصِيْبٌ مِّنْهَا ۚ وَمَنْ يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ مُّقِيْتًا ٨٥

man
مَّن
எவர்
yashfaʿ
يَشْفَعْ
சிபாரிசு செய்வார்
shafāʿatan
شَفَٰعَةً
சிபாரிசு
ḥasanatan
حَسَنَةً
நல்ல
yakun
يَكُن
இருக்கும்
lahu
لَّهُۥ
அவருக்கு
naṣībun
نَصِيبٌ
ஒரு பங்கு
min'hā
مِّنْهَاۖ
அதிலிருந்து
waman
وَمَن
இன்னும் எவர்
yashfaʿ
يَشْفَعْ
சிபாரிசு செய்வார்
shafāʿatan
شَفَٰعَةً
சிபாரிசு
sayyi-atan
سَيِّئَةً
தீயது
yakun
يَكُن
இருக்கும்
lahu
لَّهُۥ
அவருக்கு
kif'lun
كِفْلٌ
குற்றம்
min'hā
مِّنْهَاۗ
அதிலிருந்து
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீது
muqītan
مُّقِيتًا
கண்காணிப்பவனாக
எவரேனும் யாதொரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில் இருந்தும் அவருக்கொரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮௫)
Tafseer
௮௬

وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَآ اَوْ رُدُّوْهَا ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ حَسِيْبًا ٨٦

wa-idhā ḥuyyītum
وَإِذَا حُيِّيتُم
உங்களுக்கு முகமன் கூறப்பட்டால்
bitaḥiyyatin
بِتَحِيَّةٍ
ஒரு முகமனைக் கொண்டு
faḥayyū
فَحَيُّوا۟
முகமன் கூறுங்கள்
bi-aḥsana
بِأَحْسَنَ
மிக அழகியதைக்கொண்டு
min'hā
مِنْهَآ
அதைவிட
aw
أَوْ
அல்லது
ruddūhā
رُدُّوهَآۗ
திரும்பக் கூறுங்கள்/அதையே
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீது
ḥasīban
حَسِيبًا
பாதுகாவலனாக
(எவரேனும்) உங்களுக்கு "ஸலாம்" கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮௬)
Tafseer
௮௭

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ ۗ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا ࣖ ٨٧

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
huwa layajmaʿannakum
هُوَۚ لَيَجْمَعَنَّكُمْ
அவன்/நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை
ilā yawmi l-qiyāmati
إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
lā rayba
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
fīhi
فِيهِۗ
அதில்
waman
وَمَنْ
யார்
aṣdaqu
أَصْدَقُ
மிக உண்மையானவன்
mina
مِنَ
விட
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
ḥadīthan
حَدِيثًا
பேச்சால்
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்? ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮௭)
Tafseer
௮௮

۞ فَمَا لَكُمْ فِى الْمُنٰفِقِيْنَ فِئَتَيْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْا ۗ اَتُرِيْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ ۗوَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا ٨٨

famā lakum
فَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன?
fī l-munāfiqīna
فِى ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களில்
fi-atayni
فِئَتَيْنِ
இரு பிரிவினராக
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
arkasahum
أَرْكَسَهُم
தாழ்த்தினான்/அவர்களை
bimā
بِمَا
எதன் காரணமாக
kasabū
كَسَبُوٓا۟ۚ
செய்தார்கள்
aturīdūna
أَتُرِيدُونَ
நாடுகிறீர்களா?
an tahdū
أَن تَهْدُوا۟
நீங்கள் நேர்வழிப்படுத்த
man
مَنْ
எவரை
aḍalla
أَضَلَّ
வழிகெடுத்தான்
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
waman
وَمَن
இன்னும் எவரை
yuḍ'lili
يُضْلِلِ
வழிகெடுப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
falan tajida
فَلَن تَجِدَ
அறவே காணமாட்டீர்
lahu
لَهُۥ
அவருக்கு
sabīlan
سَبِيلًا
ஒரு வழியை
(நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் ஏன் இருவகை கருத்துக் கொள்கின்றீர்கள்? அவர்கள் செய்த தீங்கின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை குனியும்படி செய்தான். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டு விட்டானோ அவர்களை நீங்கள் நேரான வழியில் செலுத்த விரும்புகின்றீர்களோ? (அது முடியாத காரியம்! ஏனென்றால் நபியே!) எவர்களை அல்லாஹ் தவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு (மீட்சி பெற்றுத் தர) யாதொரு வழியையும் நீங்கள் காணமாட்டீர்கள்! ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮௮)
Tafseer
௮௯

وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَاۤءً فَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ اَوْلِيَاۤءَ حَتّٰى يُهَاجِرُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ ۗ فَاِنْ تَوَلَّوْا فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَيْثُ وَجَدْتُّمُوْهُمْ ۖ وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ وَلِيًّا وَّلَا نَصِيْرًاۙ ٨٩

waddū
وَدُّوا۟
விரும்புகிறார்கள்
law takfurūna
لَوْ تَكْفُرُونَ
நீங்கள் நிராகரிப்பதை
kamā
كَمَا
போன்று
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
fatakūnūna
فَتَكُونُونَ
ஆகிவிடுவீர்கள்
sawāan falā tattakhidhū
سَوَآءًۖ فَلَا تَتَّخِذُوا۟
சமமாக/ ஆகவே எடுத்துக் கொள்ளாதீர்கள்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
awliyāa
أَوْلِيَآءَ
பொறுப்பாளர்களை
ḥattā
حَتَّىٰ
வரை
yuhājirū
يُهَاجِرُوا۟
ஹிஜ்ரா செல்வார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகினால்
fakhudhūhum
فَخُذُوهُمْ
பிடியுங்கள் அவர்களை
wa-uq'tulūhum ḥaythu
وَٱقْتُلُوهُمْ حَيْثُ
இன்னும் கொல்லுங்கள் அவர்களை/இடம்
wajadttumūhum
وَجَدتُّمُوهُمْۖ
கண்டீர்கள் அவர்களை
walā tattakhidhū min'hum
وَلَا تَتَّخِذُوا۟ مِنْهُمْ
இன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள்/அவர்களில்
waliyyan
وَلِيًّا
பொறுப்பாளரை
walā naṣīran
وَلَا نَصِيرًا
இன்னும் உதவியாளரை
(நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகிவிட்ட படியே நீங்களும் நிராகரிப்பவராகி அவர்களுக்கு சமமாகி விடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய பாதையில் அவர்கள் புறப்படும் வரையில் நீங்கள் அவர்களை நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (இல்லங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் கண்டவிடமெல்லாம் அவர்களை(க் கைதியாக)ப் பிடித்துக் கொள்ளுங்கள்; (கைதியாகாது தப்ப முயற்சிப்பவரை) கொல்லுங்கள். தவிர, அவர்களில் எவரையுமே (உங்களுக்கு) நண்பர்களாகவும், உதவியாளர்களாகவும் எடுத்துக் கொள்ளாதீர்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮௯)
Tafseer
௯௦

اِلَّا الَّذِيْنَ يَصِلُوْنَ اِلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ اَوْ جَاۤءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ يُّقَاتِلُوْكُمْ اَوْ يُقَاتِلُوْا قَوْمَهُمْ ۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقَاتَلُوْكُمْ ۚ فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ يُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَيْكُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيْلًا ٩٠

illā
إِلَّا
தவிர
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaṣilūna
يَصِلُونَ
சேருகிறார்கள்
ilā qawmin
إِلَىٰ قَوْمٍۭ
சமுதாயத்திடம்
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
wabaynahum
وَبَيْنَهُم
இன்னும் அவர்களுக்கு இடையில்
mīthāqun
مِّيثَٰقٌ
உடன்படிக்கை
aw
أَوْ
அல்லது
jāūkum
جَآءُوكُمْ
உங்களிடம் வந்தனர்
ḥaṣirat
حَصِرَتْ
நெருக்கடிக்குள்ளாகின
ṣudūruhum
صُدُورُهُمْ
நெஞ்சங்கள் அவர்களுடைய
an
أَن
அவர்கள் போரிடுவது
yuqātilūkum aw
يُقَٰتِلُوكُمْ أَوْ
அவர்கள் போரிடுவது உங்களிடம்/அல்லது
yuqātilū
يُقَٰتِلُوا۟
அவர்கள் போரிடுவது
qawmahum
قَوْمَهُمْۚ
தங்கள் சமுதாயத்திடம்
walaw shāa
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lasallaṭahum ʿalaykum
لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ
சாட்டியிருப்பான்/அவர்களை/உங்கள் மீது
falaqātalūkum
فَلَقَٰتَلُوكُمْۚ
போரிட்டிருப்பார்கள் உங்களிடம்
fa-ini
فَإِنِ
அவர்கள் விலகினால்
iʿ'tazalūkum
ٱعْتَزَلُوكُمْ
அவர்கள் விலகினால் உங்களை
falam
فَلَمْ
அவர்கள் போரிடவில்லை
yuqātilūkum
يُقَٰتِلُوكُمْ
அவர்கள் போரிடவில்லை உங்களிடம்
wa-alqaw
وَأَلْقَوْا۟
இன்னும் சமர்ப்பித்தார்கள்
ilaykumu
إِلَيْكُمُ
உங்கள் முன்
l-salama
ٱلسَّلَمَ
சமாதானத்தை
famā jaʿala
فَمَا جَعَلَ
ஆக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
sabīlan
سَبِيلًا
ஒரு வழியை
(ஆயினும்) உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்து கொண்டவர்களிடம் சென்று விட்டவர்களையும், உங்களை எதிர்த்து போர்புரிய மனம் ஒப்பாது (உங்கள் எதிரிகளை விட்டுப் பிரிந்து) உங்களிடம் வந்தவர்களையும், தங்கள் இனத்தாரை எதிர்த்துச் சண்டை செய்(ய மனம் ஒப்பாது உங்களிடமிருந்து பிரிந்) தவர்களையும் (வெட்டாதீர்கள்; சிறை பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடினால் உங்களை அவர்கள் வெற்றி கொண்டு (அவர்கள்) உங்களை வெட்டும்படிச் செய்திருப்பான். ஆகவே, (இத்தகையவர்கள்) உங்களுடன் போர்புரியாது விலகியிருந்து சமாதானத்தைக் கோரினால் (அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,) இத்தகையவர்கள் மீது (போர்புரிய) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு வழியும் வைக்கவில்லை. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௦)
Tafseer