Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௮௪

Qur'an Surah An-Nisa Verse 84

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَاتِلْ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۚ لَا تُكَلَّفُ اِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِيْنَ ۚ عَسَى اللّٰهُ اَنْ يَّكُفَّ بَأْسَ الَّذِيْنَ كَفَرُوْا ۗوَاللّٰهُ اَشَدُّ بَأْسًا وَّاَشَدُّ تَنْكِيْلًا (النساء : ٤)

faqātil
فَقَٰتِلْ
So fight
ஆகவே போரிடுவீராக
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
lā tukallafu
لَا تُكَلَّفُ
not are you responsible
பணிக்கப்பட மாட்டீர்
illā nafsaka
إِلَّا نَفْسَكَۚ
except (for) yourself
உம்மைத் தவிர
waḥarriḍi
وَحَرِّضِ
And encourage
இன்னும் தூண்டுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَۖ
the believers
நம்பிக்கையாளர்களை
ʿasā
عَسَى
perhaps
கூடும்/அல்லாஹ்
l-lahu an
ٱللَّهُ أَن
Allah will
அவன் தடுக்க
yakuffa
يَكُفَّ
restrain
ஆற்றலை
basa alladhīna
بَأْسَ ٱلَّذِينَ
(the) might (of) those who
நிராகரிப்பாளர்களின்
kafarū
كَفَرُوا۟ۚ
disbelieved
அல்லாஹ்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
மிக கடுமையானவன்
ashaddu
أَشَدُّ
(is) Stronger
ஆற்றலால்
basan
بَأْسًا
(in) Might
இன்னும் கடுமையானவன்
wa-ashaddu
وَأَشَدُّ
and Stronger
தண்டிப்பதால்
tankīlan
تَنكِيلًا
(in) punishment
Err

Transliteration:

Faqaatil fee sabeelil laahi laa tukallafu illa nafsaka wa harridil mu'mineena 'asallaahu ai yakuffa baasallazeena kafaroo; wallaahu ashaddu baasanw wa ashaaddu tanakeelaa (QS. an-Nisāʾ:84)

English Sahih International:

So fight, [O Muhammad], in the cause of Allah; you are not held responsible except for yourself. And encourage the believers [to join you] that perhaps Allah will restrain the [military] might of those who disbelieve. And Allah is greater in might and stronger in [exemplary] punishment. (QS. An-Nisa, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் உங்களைத் தவிர (மற்றெவரையும் போருக்குச் செல்லும்படி) நிர்ப்பந்திப்பதற்கில்லை. (ஆயினும்,) நம்பிக்கையாளர்களை (போருக்குச் செல்ல) தூண்டுங்கள். நிராகரிப்பவர்களின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான். (ஏனென்றால்) அல்லாஹ் போர்செய்வதில் மிக வல்லவனாகவும், தண்டிப்பதில் மிகக் கடுமையானவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௮௪)

Jan Trust Foundation

எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை; எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக; நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக! உம்மைத் தவிர நீர் பணிக்கப்படமாட்டீர். (இறைகட்டளையை நீர் ஏற்று நடப்பீராக. பிறரை ஏற்று நடக்க வைப்பது உமது கடமையல்ல). நம்பிக்கையாளர்களை (போருக்கு) தூண்டுங்கள். நிராகரிப்பாளர்களின் ஆற்றலை அல்லாஹ் தடுக்கக்கூடும். அல்லாஹ் ஆற்றலால் மிகக் கடுமையானவன், தண்டிப்பதாலும் மிகக் கடுமையானவன்.