Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 11

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௦௧

وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ۗ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِيَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ࣖ ١٠١

wakayfa
وَكَيْفَ
எவ்வாறு
takfurūna
تَكْفُرُونَ
நிராகரிப்பீர்கள்
wa-antum
وَأَنتُمْ
நீங்களோ
tut'lā
تُتْلَىٰ
ஓதப்பட
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
āyātu l-lahi
ءَايَٰتُ ٱللَّهِ
வசனங்கள்/ அல்லாஹ்வின்
wafīkum
وَفِيكُمْ
உங்களுடன் இருக்க
rasūluhu
رَسُولُهُۥۗ
அவனுடைய தூதர்
waman
وَمَن
எவர்
yaʿtaṣim
يَعْتَصِم
பலமாகப் பற்றிக் கொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
faqad hudiya
فَقَدْ هُدِىَ
திட்டமாக நேர்வழி காட்டப்படுவார்
ilā
إِلَىٰ
பக்கம்
ṣirāṭin
صِرَٰطٍ
ஒரு பாதை
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரானது
நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பவராக ஆகிவிட முடியும்? அல்லாஹ்வுடைய தூதர் உங்கள் மத்தியில் இருந்து கொண்டு அவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்துக் கொண்டும் இருக்கின்றார். ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டு விட்டார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௧)
Tafseer
௧௦௨

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰىتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ١٠٢

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
ittaqū
ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ḥaqqa
حَقَّ
உண்மையான முறை
tuqātihi
تُقَاتِهِۦ
அவனைஅஞ்சுதல்
walā tamūtunna
وَلَا تَمُوتُنَّ
இன்னும் இறந்துவிடாதீர்கள்
illā wa-antum
إِلَّا وَأَنتُم
நீங்கள் இருந்தே தவிர
mus'limūna
مُّسْلِمُونَ
முஸ்லிம்கள்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௨)
Tafseer
௧௦௩

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا ۖوَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَاۤءً فَاَلَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖٓ اِخْوَانًاۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ١٠٣

wa-iʿ'taṣimū
وَٱعْتَصِمُوا۟
இன்னும் பற்றிப்பிடியுங்கள்
biḥabli
بِحَبْلِ
கயிற்றை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
jamīʿan
جَمِيعًا
அனைவரும்
walā tafarraqū
وَلَا تَفَرَّقُوا۟ۚ
இன்னும் பிரிந்து விடாதீர்கள்
wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
இன்னும் நினைவு கூருங்கள்
niʿ'mata
نِعْمَتَ
அருளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
idh kuntum
إِذْ كُنتُمْ
போது/இருந்தீர்கள்
aʿdāan
أَعْدَآءً
எதிரிகளாக
fa-allafa
فَأَلَّفَ
இணக்கத்தை ஏற்படுத்தினான்
bayna
بَيْنَ
மத்தியில்
qulūbikum
قُلُوبِكُمْ
உள்ளங்கள்/உங்கள்
fa-aṣbaḥtum
فَأَصْبَحْتُم
ஆகவே ஆகிவிட்டீர்கள்
biniʿ'matihi
بِنِعْمَتِهِۦٓ
அவனுடைய அருட் கொடையால்
ikh'wānan
إِخْوَٰنًا
சகோதரர்களாக
wakuntum
وَكُنتُمْ
இன்னும் இருந்தீர்கள்
ʿalā shafā
عَلَىٰ شَفَا
ஓரத்தில்
ḥuf'ratin
حُفْرَةٍ
ஒரு குழியின்
mina l-nāri
مِّنَ ٱلنَّارِ
நரகத்தின்
fa-anqadhakum
فَأَنقَذَكُم
காப்பாற்றினான் உங்களை
min'hā
مِّنْهَاۗ
அதிலிருந்து
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
yubayyinu
يُبَيِّنُ
தெளிவுப்படுத்துகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْ
உங்களுக்கு
āyātihi
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
laʿallakum tahtadūna
لَعَلَّكُمْ تَهْتَدُونَ
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்திக் காண்பிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௩)
Tafseer
௧௦௪

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ۗ وَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ١٠٤

waltakun
وَلْتَكُن
இருக்கட்டும்
minkum
مِّنكُمْ
உங்களில்
ummatun
أُمَّةٌ
ஒரு குழு
yadʿūna
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
ilā
إِلَى
பக்கம்
l-khayri
ٱلْخَيْرِ
சிறந்தது
wayamurūna
وَيَأْمُرُونَ
இன்னும் ஏவுகிறார்கள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
நன்மையை
wayanhawna
وَيَنْهَوْنَ
இன்னும் தடுக்கிறார்கள்
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِۚ
பாவத்திலிருந்து
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௪)
Tafseer
௧௦௫

وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَهُمُ الْبَيِّنٰتُ ۗ وَاُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌ ۙ ١٠٥

walā takūnū
وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
ka-alladhīna
كَٱلَّذِينَ
எவர்கள் போல்
tafarraqū
تَفَرَّقُوا۟
பிரிந்தார்கள்
wa-ikh'talafū
وَٱخْتَلَفُوا۟
இன்னும் முரண்பட்டார்கள்
min baʿdi mā
مِنۢ بَعْدِ مَا
வந்த பின்னர்
jāahumu
جَآءَهُمُ
தங்களிடம்
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُۚ
தெளிவான அத்தாட்சிகள்
wa-ulāika
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் அவர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
பெரியது
எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௫)
Tafseer
௧௦௬

يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ ۚ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْۗ اَ كَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ١٠٦

yawma
يَوْمَ
நாள்
tabyaḍḍu
تَبْيَضُّ
வெண்மையாகும்
wujūhun
وُجُوهٌ
(சில) முகங்கள்
wataswaddu
وَتَسْوَدُّ
இன்னும் கறுக்கும்
wujūhun
وُجُوهٌۚ
(சில) முகங்கள்
fa-ammā
فَأَمَّا
ஆக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
is'waddat
ٱسْوَدَّتْ
கறுத்தன
wujūhuhum
وُجُوهُهُمْ
அவர்களுடைய முகங்கள்
akafartum
أَكَفَرْتُم
நிராகரித்தீர்களா?
baʿda
بَعْدَ
பின்னர்
īmānikum
إِيمَٰنِكُمْ
நீங்கள் நம்பிக்கை கொள்ளுதல்
fadhūqū
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
bimā kuntum
بِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தால்
takfurūna
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்
ஒருநாளில் சில முகங்கள் (சந்தோஷத்தால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கறுத்து (வாடியு)மிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்து (வாடி) இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் நம்பிக்கை கொண்டபின் (அதனை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, உங்கள் நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள்" (என்று கூறப்படும்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௬)
Tafseer
௧௦௭

وَاَمَّا الَّذِيْنَ ابْيَضَّتْ وُجُوْهُهُمْ فَفِيْ رَحْمَةِ اللّٰهِ ۗ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ١٠٧

wa-ammā alladhīna
وَأَمَّا ٱلَّذِينَ
ஆக, எவர்கள்
ib'yaḍḍat
ٱبْيَضَّتْ
வெண்மையாகின
wujūhuhum
وُجُوهُهُمْ
அவர்களுடைய முகங்கள்
fafī raḥmati
فَفِى رَحْمَةِ
அருளில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
hum
هُمْ
அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
எவர்களுடைய முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ்வின் அருளில் தங்கிவிடுங்கள்" (என்று கூறப்படும்.) அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௭)
Tafseer
௧௦௮

تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَيْكَ بِالْحَقِّ ۗ وَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعٰلَمِيْنَ ١٠٨

til'ka
تِلْكَ
இவை
āyātu
ءَايَٰتُ
வசனங்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
natlūhā
نَتْلُوهَا
ஓதுகிறோம் அவற்றை
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
bil-ḥaqi
بِٱلْحَقِّۗ
உண்மையாகவே
wamā
وَمَا
இல்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yurīdu
يُرِيدُ
நாடுகிறான்
ẓul'man
ظُلْمًا
அநியாயத்தை
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு
(நபியே!) இவையனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். அவைகளை உண்மையாகவே நாம் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றோம். அன்றி, அல்லாஹ் உலகத்தாருக்கு சிறிதளவும் அநியாயம் (செய்ய) நாட மாட்டான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௮)
Tafseer
௧௦௯

وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ۗوَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ࣖ ١٠٩

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு
مَا
எவை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۚ
இன்னும் எவை/பூமியில்
wa-ilā
وَإِلَى
பக்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
tur'jaʿu
تُرْجَعُ
திருப்பப்படும்
l-umūru
ٱلْأُمُورُ
காரியங்கள்
வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியதே! (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௯)
Tafseer
௧௧௦

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۗ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَكَانَ خَيْرًا لَّهُمْ ۗ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ ١١٠

kuntum
كُنتُمْ
இருக்கிறீர்கள்
khayra
خَيْرَ
சிறந்த(வர்கள்)
ummatin
أُمَّةٍ
சமுதாயம்
ukh'rijat
أُخْرِجَتْ
வெளியாக்கப்பட்டது
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்காக
tamurūna
تَأْمُرُونَ
ஏவுகிறீர்கள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
நன்மையைக்கொண்டு
watanhawna
وَتَنْهَوْنَ
இன்னும் தடுக்கிறீர்கள்
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِ
தீமையை விட்டும்
watu'minūna
وَتُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
bil-lahi
بِٱللَّهِۗ
அல்லாஹ்வை
walaw āmana
وَلَوْ ءَامَنَ
நம்பிக்கைகொண்டால்
ahlu l-kitābi
أَهْلُ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்கள்
lakāna
لَكَانَ
உறுதி ஆகிவிட்டது
khayran
خَيْرًا
சிறந்ததாக
lahum
لَّهُمۚ
அவர்களுக்கு
min'humu
مِّنْهُمُ
அவர்களில்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
wa-aktharuhumu l-fāsiqūna
وَأَكْثَرُهُمُ ٱلْفَٰسِقُونَ
இன்னும் அதிகமானவர்கள் அவர்களில்/பாவிகள்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧௦)
Tafseer