الۤمّۤ ١
- alif-lam-meem
- الٓمٓ
- அலிஃப், லாம், மீம்
அலிஃப்; லாம்; மீம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧)Tafseer
اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُۗ ٢
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lā
- لَآ
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- இறைவன்
- illā huwa
- إِلَّا هُوَ
- தவிர/அவன்
- l-ḥayu
- ٱلْحَىُّ
- என்றும் உயிருள்ளவன்
- l-qayūmu
- ٱلْقَيُّومُ
- நிலையானவன்
அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; என்றும் நிலையானவன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨)Tafseer
نَزَّلَ عَلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَۙ ٣
- nazzala
- نَزَّلَ
- இறக்கினான்
- ʿalayka
- عَلَيْكَ
- உம்மீது
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- சத்தியத்துடன்
- muṣaddiqan
- مُصَدِّقًا
- உண்மைப்படுத்தக் கூடியதாக
- limā bayna yadayhi
- لِّمَا بَيْنَ يَدَيْهِ
- தனக்கு முன்னுள்ளதை
- wa-anzala
- وَأَنزَلَ
- இன்னும் இறக்கினான்
- l-tawrāta
- ٱلتَّوْرَىٰةَ
- தவ்றாத்தை
- wal-injīla
- وَٱلْإِنجِيلَ
- இன்னும் இன்ஜீலை
(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உங்கள் மீது இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩)Tafseer
مِنْ قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ ەۗ اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ۗوَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍۗ ٤
- min qablu
- مِن قَبْلُ
- (இதற்கு) முன்னர்
- hudan
- هُدًى
- நேர்வழியாக
- lilnnāsi
- لِّلنَّاسِ
- மக்களுக்கு
- wa-anzala
- وَأَنزَلَ
- இன்னும் இறக்கினான்
- l-fur'qāna
- ٱلْفُرْقَانَۗ
- பிறித்தறிவிக்கக் கூடியதை
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- நிச்சயமாக எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- shadīdun
- شَدِيدٌۗ
- கடினமானது
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿazīzun
- عَزِيزٌ
- மிகைத்தவன்
- dhū intiqāmin
- ذُو ٱنتِقَامٍ
- தண்டிப்பவன்
(அன்றி, நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக் கூடிய (மற்ற)வைகளையும் அருள் புரிந்திருக்கின்றான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், (தீயவர்களைத்) தண்டிப்பவனுமாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪)Tafseer
اِنَّ اللّٰهَ لَا يَخْفٰى عَلَيْهِ شَيْءٌ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاۤءِ ٥
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yakhfā
- لَا يَخْفَىٰ
- மறையாது
- ʿalayhi
- عَلَيْهِ
- அவனுக்கு
- shayon
- شَىْءٌ
- எதுவும்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- walā fī l-samāi
- وَلَا فِى ٱلسَّمَآءِ
- இன்னும் வானத்தில்
நிச்சயமாக பூமியிலோ, வானத்திலோ (உள்ள) எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫)Tafseer
هُوَ الَّذِيْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَاۤءُ ۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٦
- huwa alladhī
- هُوَ ٱلَّذِى
- அவன்/எவன்
- yuṣawwirukum
- يُصَوِّرُكُمْ
- உங்களை உருவமைக்கிறான்
- fī l-arḥāmi
- فِى ٱلْأَرْحَامِ
- கர்ப்பப் பைகளில்
- kayfa
- كَيْفَ
- எவ்வாறு
- yashāu
- يَشَآءُۚ
- நாடுகிறான்
- lā
- لَآ
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- வணக்கத்திற்குரியவன்
- illā
- إِلَّا
- தவிர
- huwa
- هُوَ
- அவன்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- ஞானவான்
அவன்தான் கர்ப்பப் பைகளில் தான் விரும்பியவாறு (ஆணாகவோ, பெண்ணாகவோ) உருவம் அமைக்கின்றான். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬)Tafseer
هُوَ الَّذِيْٓ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ ۗ فَاَمَّا الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاۤءَ الْفِتْنَةِ وَابْتِغَاۤءَ تَأْوِيْلِهٖۚ وَمَا يَعْلَمُ تَأْوِيْلَهٗٓ اِلَّا اللّٰهُ ۘوَالرَّاسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ۚ وَمَا يَذَّكَّرُ اِلَّآ اُولُوا الْاَلْبَابِ ٧
- huwa
- هُوَ
- அவன்
- alladhī
- ٱلَّذِىٓ
- எப்படிப்பட்ட
- anzala
- أَنزَلَ
- இறக்கினான்
- ʿalayka
- عَلَيْكَ
- உம்மீது
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- min'hu āyātun
- مِنْهُ ءَايَٰتٌ
- அதில்/வசனங்கள்
- muḥ'kamātun hunna
- مُّحْكَمَٰتٌ هُنَّ
- பொருள் தெளிவானவை/அவை
- ummu l-kitābi
- أُمُّ ٱلْكِتَٰبِ
- அடிப்படை/வேதம்
- wa-ukharu
- وَأُخَرُ
- இன்னும் வேறு
- mutashābihātun
- مُتَشَٰبِهَٰتٌۖ
- பொருள் தெரியாதவை
- fa-ammā alladhīna
- فَأَمَّا ٱلَّذِينَ
- ஆகவே/எவர்கள்
- fī qulūbihim
- فِى قُلُوبِهِمْ
- தங்கள் உள்ளங்களில்
- zayghun
- زَيْغٌ
- கோணல்
- fayattabiʿūna
- فَيَتَّبِعُونَ
- பின்பற்றுகிறார்கள்
- mā
- مَا
- எதை
- tashābaha
- تَشَٰبَهَ
- பொருள் தெரிய முடி யாமல்ஆகிவிட்டது
- min'hu
- مِنْهُ
- அதில்
- ib'tighāa
- ٱبْتِغَآءَ
- தேடி
- l-fit'nati
- ٱلْفِتْنَةِ
- குழப்பத்தை
- wa-ib'tighāa
- وَٱبْتِغَآءَ
- இன்னும் தேடி
- tawīlihi
- تَأْوِيلِهِۦۗ
- அதன் விளக்கத்தை
- wamā yaʿlamu
- وَمَا يَعْلَمُ
- இன்னும் அறியமாட்டார்
- tawīlahu
- تَأْوِيلَهُۥٓ
- அதன் விளக்கத்தை
- illā
- إِلَّا
- தவிர
- l-lahu
- ٱللَّهُۗ
- அல்லாஹ்
- wal-rāsikhūna
- وَٱلرَّٰسِخُونَ
- தேர்ச்சி அடைந்தவர்கள்
- fī l-ʿil'mi
- فِى ٱلْعِلْمِ
- கல்வியில்
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுவார்கள்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- bihi
- بِهِۦ
- அதை
- kullun
- كُلٌّ
- எல்லாம்
- min
- مِّنْ
- இருந்து
- ʿindi
- عِندِ
- இடம்
- rabbinā
- رَبِّنَاۗ
- எங்கள் இறைவன்
- wamā yadhakkaru
- وَمَا يَذَّكَّرُ
- இன்னும் நல்லறிவுபெறமாட்டார்
- illā
- إِلَّآ
- தவிர
- ulū l-albābi
- أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
- அறிவுள்ளவர்கள்
(நபியே!) அவனே இவ்வேதத்தையும் உங்கள்மீது இறக்கி வைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரிய முடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திகேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களையன்றி மற்ற எவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசம் அடைய மாட்டார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭)Tafseer
رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚاِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ٨
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- lā tuzigh
- لَا تُزِغْ
- கோணலாக்கி விடாதே
- qulūbanā
- قُلُوبَنَا
- எங்கள் உள்ளங்களை
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- idh hadaytanā
- إِذْ هَدَيْتَنَا
- எங்களைநேர்வழியில்செலுத்தினாய்
- wahab
- وَهَبْ
- இன்னும் வழங்கு
- lanā
- لَنَا
- எங்களுக்கு
- min ladunka
- مِن لَّدُنكَ
- உன்னிடமிருந்து
- raḥmatan
- رَحْمَةًۚ
- கருணையை
- innaka anta
- إِنَّكَ أَنتَ
- நிச்சயமாக நீதான்
- l-wahābu
- ٱلْوَهَّابُ
- வாரி வழங்குபவன்
(அன்றி அவர்கள்) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!" ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮)Tafseer
رَبَّنَآ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ ۗاِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ ࣖ ٩
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- innaka
- إِنَّكَ
- நிச்சயமாக நீ
- jāmiʿu
- جَامِعُ
- ஒன்று சேர்ப்பவன்
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களை
- liyawmin
- لِيَوْمٍ
- ஒரு நாளில்
- lā
- لَّا
- அறவே இல்லை
- rayba
- رَيْبَ
- சந்தேகம்
- fīhi
- فِيهِۚ
- அதில்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yukh'lifu
- لَا يُخْلِفُ
- மாற்ற மாட்டான்
- l-mīʿāda
- ٱلْمِيعَادَ
- வாக்கை
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். அ(ந்நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல" (என்று கூறுவார்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯)Tafseer
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِيَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَآ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْـًٔا ۗوَاُولٰۤىِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِۗ ١٠
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- lan tugh'niya
- لَن تُغْنِىَ
- அறவே தடுக்காது
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களை விட்டும்
- amwāluhum
- أَمْوَٰلُهُمْ
- அவர்களுடைய செல்வங்கள்
- walā awlāduhum
- وَلَآ أَوْلَٰدُهُم
- இன்னும் அவர்களுடைய சந்ததிகள்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- shayan
- شَيْـًٔاۖ
- எதையும்
- wa-ulāika hum
- وَأُو۟لَٰٓئِكَ هُمْ
- இன்னும் அவர்கள்தான்
- waqūdu
- وَقُودُ
- எரிபொருள்கள்
- l-nāri
- ٱلنَّارِ
- நரகத்தின்
நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய பொருளும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி) லிருந்து எதையும் அறவே தவிர்த்து விடமுடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டையாக இருக்கின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦)Tafseer