Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௦௧

Qur'an Surah Ali 'Imran Verse 101

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ۗ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِيَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ࣖ (آل عمران : ٣)

wakayfa
وَكَيْفَ
And how (could)
எவ்வாறு
takfurūna
تَكْفُرُونَ
you disbelieve
நிராகரிப்பீர்கள்
wa-antum
وَأَنتُمْ
while [you]
நீங்களோ
tut'lā
تُتْلَىٰ
is recited
ஓதப்பட
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
āyātu l-lahi
ءَايَٰتُ ٱللَّهِ
(the) Verses (of) Allah
வசனங்கள்/ அல்லாஹ்வின்
wafīkum
وَفِيكُمْ
and among you
உங்களுடன் இருக்க
rasūluhu
رَسُولُهُۥۗ
(is) His Messenger?
அவனுடைய தூதர்
waman
وَمَن
And whoever
எவர்
yaʿtaṣim
يَعْتَصِم
holds firmly
பலமாகப் பற்றிக் கொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
to Allah
அல்லாஹ்வை
faqad hudiya
فَقَدْ هُدِىَ
then surely he is guided
திட்டமாக நேர்வழி காட்டப்படுவார்
ilā
إِلَىٰ
to
பக்கம்
ṣirāṭin
صِرَٰطٍ
a path
ஒரு பாதை
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
straight
நேரானது

Transliteration:

Wa kaifa takfuroona wa antum tutlaa 'alaikum Aayaatul laahi wa feekum Rasooluh; wa mai ya'tasim baillaahi faqad hudiya ilaa Siraatim Mustaqeem (QS. ʾĀl ʿImrān:101)

English Sahih International:

And how could you disbelieve while to you are being recited the verses of Allah and among you is His Messenger? And whoever holds firmly to Allah has [indeed] been guided to a straight path. (QS. Ali 'Imran, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பவராக ஆகிவிட முடியும்? அல்லாஹ்வுடைய தூதர் உங்கள் மத்தியில் இருந்து கொண்டு அவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்துக் கொண்டும் இருக்கின்றார். ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டு விட்டார். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

அவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்களோ உங்கள் மீது அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்பட, உங்களுடன் அவனுடைய தூதரும் இருக்க, நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பீர்கள்? எவர் அல்லாஹ்வைப் பலமாகப் பற்றிக்கொள்கிறாரோ (அவர்) திட்டமாக நேரான ஒரு பாதையின் பக்கம் நேர்வழி காட்டப்படுவார்.