Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௦

Qur'an Surah Ali 'Imran Verse 110

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۗ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَكَانَ خَيْرًا لَّهُمْ ۗ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ (آل عمران : ٣)

kuntum
كُنتُمْ
You are
இருக்கிறீர்கள்
khayra
خَيْرَ
(the) best
சிறந்த(வர்கள்)
ummatin
أُمَّةٍ
(of) people
சமுதாயம்
ukh'rijat
أُخْرِجَتْ
raised
வெளியாக்கப்பட்டது
lilnnāsi
لِلنَّاسِ
for the mankind -
மக்களுக்காக
tamurūna
تَأْمُرُونَ
enjoining
ஏவுகிறீர்கள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
the right
நன்மையைக்கொண்டு
watanhawna
وَتَنْهَوْنَ
and forbidding
இன்னும் தடுக்கிறீர்கள்
ʿani l-munkari
عَنِ ٱلْمُنكَرِ
[from] the wrong
தீமையை விட்டும்
watu'minūna
وَتُؤْمِنُونَ
and believing
இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
bil-lahi
بِٱللَّهِۗ
in Allah
அல்லாஹ்வை
walaw āmana
وَلَوْ ءَامَنَ
And if believed
நம்பிக்கைகொண்டால்
ahlu l-kitābi
أَهْلُ ٱلْكِتَٰبِ
(the) People (of) the Book
வேதக்காரர்கள்
lakāna
لَكَانَ
surely would have been
உறுதி ஆகிவிட்டது
khayran
خَيْرًا
good
சிறந்ததாக
lahum
لَّهُمۚ
for them
அவர்களுக்கு
min'humu
مِّنْهُمُ
Among them
அவர்களில்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
(are) the believers
நம்பிக்கையாளர்கள்
wa-aktharuhumu l-fāsiqūna
وَأَكْثَرُهُمُ ٱلْفَٰسِقُونَ
but most of them (are) defiantly disobedient
இன்னும் அதிகமானவர்கள் அவர்களில்/பாவிகள்

Transliteration:

Kuntum khaira ummatin ukhrijat linnaasi taamuroona bilma'roofi wa tanhawna 'anil munkari wa tu'minoona billaah; wa law aamana Ahlul Kitaabi lakaana khairal lahum minhumul mu'minoona wa aksaruhumul faasiqoon (QS. ʾĀl ʿImrān:110)

English Sahih International:

You are the best nation produced [as an example] for mankind. You enjoin what is right and forbid what is wrong and believe in Allah. If only the People of the Scripture had believed, it would have been better for them. Among them are believers, but most of them are defiantly disobedient. (QS. Ali 'Imran, Ayah ௧௧௦)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௧௦)

Jan Trust Foundation

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக வெளியாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக (நீங்கள்) இருக்கிறீர்கள். நன்மையைக் கொண்டு ஏவுகிறீர்கள்; தீமையை விட்டும் தடுக்கிறீர்கள்; அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்கு மிகச் சிறந்ததாக ஆகிவிடும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்கள் பாவிகள்தான்.