Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௦௫

Qur'an Surah Ali 'Imran Verse 105

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَهُمُ الْبَيِّنٰتُ ۗ وَاُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌ ۙ (آل عمران : ٣)

walā takūnū
وَلَا تَكُونُوا۟
And (do) not be
ஆகிவிடாதீர்கள்
ka-alladhīna
كَٱلَّذِينَ
like those who
எவர்கள் போல்
tafarraqū
تَفَرَّقُوا۟
became divided
பிரிந்தார்கள்
wa-ikh'talafū
وَٱخْتَلَفُوا۟
and differed
இன்னும் முரண்பட்டார்கள்
min baʿdi mā
مِنۢ بَعْدِ مَا
from after what
வந்த பின்னர்
jāahumu
جَآءَهُمُ
came to them
தங்களிடம்
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُۚ
the clear proofs
தெளிவான அத்தாட்சிகள்
wa-ulāika
وَأُو۟لَٰٓئِكَ
And those
இன்னும் அவர்கள்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
great
பெரியது

Transliteration:

Wa laa takoonoo kallazeena tafarraqoo wakhtalafoo mim ba'di maa jaaa'ahumul baiyinaat; wa ulaaa'ika lahum 'azaabun 'azeem (QS. ʾĀl ʿImrān:105)

English Sahih International:

And do not be like the ones who became divided and differed after the clear proofs had come to them. And those will have a great punishment (QS. Ali 'Imran, Ayah ௧௦௫)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௦௫)

Jan Trust Foundation

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் (தங்களுக்குள்) பிரிந்து, (அவற்றுக்கு) முரண்பட்டவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள். (சில) முகங்கள் வெண்மையாகின்ற, (சில) முகங்கள் கருக்கின்ற நாளில் அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு. ஆக, முகங்கள் கருத்தவர்கள் (அவர்களை நோக்கி,) "நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்தீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை சுவையுங்கள் (என்று கூறப்படும்)."