قَالُوْٓا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَۙ ١٢١
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- birabbi
- بِرَبِّ
- இறைவனை
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களின்
"அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௧)Tafseer
رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ ١٢٢
- rabbi
- رَبِّ
- இறைவனான
- mūsā
- مُوسَىٰ
- மூஸா
- wahārūna
- وَهَٰرُونَ
- இன்னும் ஹாரூனுடைய
மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௨)Tafseer
قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْۚ اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِى الْمَدِيْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَآ اَهْلَهَاۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ ١٢٣
- qāla
- قَالَ
- கூறினான்.
- fir'ʿawnu
- فِرْعَوْنُ
- ஃபிர்அவ்ன்
- āmantum
- ءَامَنتُم
- நம்பிக்கை கொண்டீர்கள்
- bihi
- بِهِۦ
- அவரை
- qabla
- قَبْلَ
- முன்னர்
- an ādhana
- أَنْ ءَاذَنَ
- நான் அனுமதியளிப்பதற்கு
- lakum
- لَكُمْۖ
- உங்களுக்கு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- hādhā
- هَٰذَا
- இது
- lamakrun
- لَمَكْرٌ
- சூழ்ச்சிதான்
- makartumūhu
- مَّكَرْتُمُوهُ
- சூழ்ச்சிசெய்தீர்கள்/அதை
- fī l-madīnati
- فِى ٱلْمَدِينَةِ
- நகரத்தில்
- litukh'rijū
- لِتُخْرِجُوا۟
- நீங்கள் வெளியேற்றுவதற்காக
- min'hā
- مِنْهَآ
- அதிலிருந்து
- ahlahā
- أَهْلَهَاۖ
- அதில் வசிப்போரை
- fasawfa taʿlamūna
- فَسَوْفَ تَعْلَمُونَ
- அறிவீர்கள்
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௩)Tafseer
لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَ ١٢٤
- la-uqaṭṭiʿanna
- لَأُقَطِّعَنَّ
- நிச்சயமாக வெட்டுவேன்
- aydiyakum
- أَيْدِيَكُمْ
- உங்கள் கைகளை
- wa-arjulakum
- وَأَرْجُلَكُم
- இன்னும் உங்கள் கால்களை
- min khilāfin
- مِّنْ خِلَٰفٍ
- மாறாக
- thumma
- ثُمَّ
- பிறகு
- la-uṣallibannakum
- لَأُصَلِّبَنَّكُمْ
- நிச்சயமாக கழுமரத்தில் அறைவேன்/உங்களை
- ajmaʿīna
- أَجْمَعِينَ
- அனைவரையும்
நிச்சயமாக நான் உங்களுடைய மாறு கை, மாறு கால்களை வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௪)Tafseer
قَالُوْٓا اِنَّآ اِلٰى رَبِّنَا مُنْقَلِبُوْنَۙ ١٢٥
- qālū innā
- قَالُوٓا۟ إِنَّآ
- கூறினர்/நிச்சயமாக நாங்கள்
- ilā rabbinā
- إِلَىٰ رَبِّنَا
- எங்கள் இறைவனிடம்
- munqalibūna
- مُنقَلِبُونَ
- திரும்பக்கூடியவர்கள்
அதற்கவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௫)Tafseer
وَمَا تَنْقِمُ مِنَّآ اِلَّآ اَنْ اٰمَنَّا بِاٰيٰتِ رَبِّنَا لَمَّا جَاۤءَتْنَا ۗرَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ ࣖ ١٢٦
- wamā tanqimu
- وَمَا تَنقِمُ
- நீ பழிக்கவில்லை
- minnā
- مِنَّآ
- எங்களை
- illā
- إِلَّآ
- தவிர
- an āmannā
- أَنْ ءَامَنَّا
- என்பதற்காக/நம்பிக்கை கொண்டோம்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- அத்தாட்சிகளை
- rabbinā
- رَبِّنَا
- எங்கள் இறைவனின்
- lammā
- لَمَّا
- போது
- jāatnā
- جَآءَتْنَاۚ
- வந்தன/எங்களிடம்
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- afrigh
- أَفْرِغْ
- இறக்கு
- ʿalaynā
- عَلَيْنَا
- எங்கள் மீது
- ṣabran
- صَبْرًا
- பொறுமையை
- watawaffanā
- وَتَوَفَّنَا
- கைப்பற்று/எங்களை
- mus'limīna
- مُسْلِمِينَ
- முஸ்லிம்களாக
(அன்றி) "எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை" (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!" (என்று பிரார்த்தித்தார்கள்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௬)Tafseer
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰى وَقَوْمَهٗ لِيُفْسِدُوْا فِى الْاَرْضِ وَيَذَرَكَ وَاٰلِهَتَكَۗ قَالَ سَنُقَتِّلُ اَبْنَاۤءَهُمْ وَنَسْتَحْيٖ نِسَاۤءَهُمْۚ وَاِنَّا فَوْقَهُمْ قَاهِرُوْنَ ١٢٧
- waqāla
- وَقَالَ
- கூறினார்(கள்)
- l-mala-u
- ٱلْمَلَأُ
- தலைவர்கள்
- min qawmi
- مِن قَوْمِ
- சமுதாயத்திலிருந்து
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- ஃபிர்அவ்னுடைய
- atadharu mūsā
- أَتَذَرُ مُوسَىٰ
- நீ விட்டுவிடப்போகிறாயா? / மூஸாவை
- waqawmahu
- وَقَوْمَهُۥ
- இன்னும் அவருடைய சமுதாயத்தை
- liyuf'sidū
- لِيُفْسِدُوا۟
- அவர்கள் விஷமம் செய்வதற்கு
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- wayadharaka
- وَيَذَرَكَ
- இன்னும் விட்டுவிடுவதற்கு/உன்னை
- waālihataka
- وَءَالِهَتَكَۚ
- இன்னும் உன் தெய்வங்களை
- qāla
- قَالَ
- கூறினான்
- sanuqattilu
- سَنُقَتِّلُ
- கொன்று குவிப்போம்
- abnāahum
- أَبْنَآءَهُمْ
- ஆண் பிள்ளைகளை அவர்களுடைய
- wanastaḥyī
- وَنَسْتَحْىِۦ
- இன்னும் வாழவிடுவோம்
- nisāahum
- نِسَآءَهُمْ
- அவர்களுடைய பெண் (பிள்ளை)களை
- wa-innā
- وَإِنَّا
- நிச்சயமாக நாம்
- fawqahum
- فَوْقَهُمْ
- அவர்களுக்கு மேல்
- qāhirūna
- قَٰهِرُونَ
- ஆதிக்கம் வகிப்பவர்கள்
அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?" என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கின்றோம். (ஆகவே நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௭)Tafseer
قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْاۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۗيُوْرِثُهَا مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖۗ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ ١٢٨
- qāla
- قَالَ
- கூறினார்
- mūsā
- مُوسَىٰ
- மூஸா
- liqawmihi
- لِقَوْمِهِ
- தன் சமுதாயத்திற்கு
- is'taʿīnū
- ٱسْتَعِينُوا۟
- உதவி தேடுங்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- wa-iṣ'birū
- وَٱصْبِرُوٓا۟ۖ
- இன்னும் பொறுத்திருங்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமி
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்குரியதே
- yūrithuhā
- يُورِثُهَا
- வாரிசாக்குவான்/அதற்கு
- man yashāu
- مَن يَشَآءُ
- எவரை/நாடுகிறான்
- min ʿibādihi
- مِنْ عِبَادِهِۦۖ
- தன் அடியார்களில்
- wal-ʿāqibatu
- وَٱلْعَٰقِبَةُ
- முடிவு
- lil'muttaqīna
- لِلْمُتَّقِينَ
- அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே
(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி "நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதனை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௮)Tafseer
قَالُوْٓا اُوْذِيْنَا مِنْ قَبْلِ اَنْ تَأْتِيَنَا وَمِنْۢ بَعْدِ مَا جِئْتَنَا ۗقَالَ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى الْاَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُوْنَ ࣖ ١٢٩
- qālū
- قَالُوٓا۟
- கூறினர்
- ūdhīnā
- أُوذِينَا
- துன்புறுத்தப்பட்டோம்
- min qabli
- مِن قَبْلِ
- முன்னர்
- an tatiyanā
- أَن تَأْتِيَنَا
- நீர் வருவதற்கு/எங்களிடம்
- wamin baʿdi
- وَمِنۢ بَعْدِ
- இன்னும் பின்னர்
- mā ji'tanā
- مَا جِئْتَنَاۚ
- நீர்வந்தது/எங்களிடம்
- qāla
- قَالَ
- கூறினார்
- ʿasā rabbukum
- عَسَىٰ رَبُّكُمْ
- கூடும்/உங்கள் இறைவன்
- an yuh'lika
- أَن يُهْلِكَ
- அவன் அழித்து
- ʿaduwwakum
- عَدُوَّكُمْ
- எதிரிகளை/உங்கள்
- wayastakhlifakum
- وَيَسْتَخْلِفَكُمْ
- இன்னும் அதிபதிகளாக்க/உங்களை
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- fayanẓura
- فَيَنظُرَ
- கவனிப்பான்
- kayfa
- كَيْفَ
- எவ்வாறு
- taʿmalūna
- تَعْمَلُونَ
- செய்கிறீர்கள்
(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகின்றோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) "உங்களுடைய இறைவன் உங்களுடைய எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௯)Tafseer
وَلَقَدْ اَخَذْنَآ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِيْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ ١٣٠
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- akhadhnā
- أَخَذْنَآ
- பிடித்தோம், சோதித்தோம், தண்டித்தோம்,
- āla
- ءَالَ
- குடும்பத்தாரை
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- ஃபிர்அவ்னுடைய
- bil-sinīna
- بِٱلسِّنِينَ
- பஞ்சங்களாலும்
- wanaqṣin
- وَنَقْصٍ
- இன்னும் குறைத்து
- mina l-thamarāti
- مِّنَ ٱلثَّمَرَٰتِ
- கனிகளை
- laʿallahum yadhakkarūna
- لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
- அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
பின்னர், ஃபிர்அவ்னுடைய மக்களைப் பஞ்சம் பீடிக்கச் செய்து (அவர்களுடைய விவசாய) பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம். (இதனால்) அவர்கள் நல்லுணர்ச்சிப் பெற்றிருக்கலாம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௦)Tafseer