Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௨௮

Qur'an Surah Al-A'raf Verse 128

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْاۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۗيُوْرِثُهَا مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖۗ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ (الأعراف : ٧)

qāla
قَالَ
Said
கூறினார்
mūsā
مُوسَىٰ
Musa
மூஸா
liqawmihi
لِقَوْمِهِ
to his people
தன் சமுதாயத்திற்கு
is'taʿīnū
ٱسْتَعِينُوا۟
"Seek help
உதவி தேடுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடம்
wa-iṣ'birū
وَٱصْبِرُوٓا۟ۖ
and be patient
இன்னும் பொறுத்திருங்கள்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-arḍa
ٱلْأَرْضَ
the earth
பூமி
lillahi
لِلَّهِ
(belongs) to Allah
அல்லாஹ்வுக்குரியதே
yūrithuhā
يُورِثُهَا
He causes to inherit it
வாரிசாக்குவான்/அதற்கு
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
எவரை/நாடுகிறான்
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦۖ
of His servants
தன் அடியார்களில்
wal-ʿāqibatu
وَٱلْعَٰقِبَةُ
And the end
முடிவு
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
(is) for the righteous"
அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே

Transliteration:

Qaala Moosaa liqawmihis ta'eenoo billaahi wasbiroo innal arda lillaahi yoorisuhaa mai yashaaa'u min 'ibaadihee wal 'aaqibatu lilmuttaqeen (QS. al-ʾAʿrāf:128)

English Sahih International:

Said Moses to his people, "Seek help through Allah and be patient. Indeed, the earth belongs to Allah. He causes to inherit it whom He wills of His servants. And the [best] outcome is for the righteous." (QS. Al-A'raf, Ayah ௧௨௮)

Abdul Hameed Baqavi:

(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி "நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதனை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௨௮)

Jan Trust Foundation

மூஸா தம் சமூகத்தாரிடம்| “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூஸா தன் சமுதாயத்திற்கு “அல்லாஹ்விடம் உதவிதேடுங்கள், (உறுதியுடன்) பொறுத்திருங்கள். நிச்சயமாக பூமி அல்லாஹ்வுக்குரியதே! அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதற்கு வாரிசாக்குவான். (நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே” என்று கூறினார்.