Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 12

Al-A'raf

(al-ʾAʿrāf)

௧௧௧

قَالُوْآ اَرْجِهْ وَاَخَاهُ وَاَرْسِلْ فِى الْمَدَاۤىِٕنِ حٰشِرِيْنَۙ ١١١

qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
arjih
أَرْجِهْ
தவணை கொடு/அவருக்கு
wa-akhāhu
وَأَخَاهُ
இன்னும் அவருடைய சகோதரருக்கு
wa-arsil
وَأَرْسِلْ
இன்னும் அனுப்பு
فِى
நகரங்களில்
l-madāini
ٱلْمَدَآئِنِ
நகரங்களில் ஒன்றுதிரட்டுபவர்களை
ḥāshirīna
حَٰشِرِينَ
Err
அதற்கவர்கள் "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டினங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பி வையுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧௧)
Tafseer
௧௧௨

يَأْتُوْكَ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ ١١٢

yatūka
يَأْتُوكَ
உம்மிடம் வருவார்கள்
bikulli
بِكُلِّ
எல்லோரையும் கொண்டு
sāḥirin
سَٰحِرٍ
சூனியக்காரர்
ʿalīmin
عَلِيمٍ
கற்றறிந்தவர்
அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உங்களிடம் அழைத்து வருவார்கள்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧௨)
Tafseer
௧௧௩

وَجَاۤءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْٓا اِنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ ١١٣

wajāa
وَجَآءَ
வந்தார்(கள்)
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
qālū
قَالُوٓا۟
கூறினர்
inna
إِنَّ
நிச்சயமாக
lanā
لَنَا
எங்களுக்கு
la-ajran
لَأَجْرًا
திட்டமாக கூலி
in kunnā
إِن كُنَّا
நாங்கள் ஆகிவிட்டால்
naḥnu
نَحْنُ
நாங்கள்
l-ghālibīna
ٱلْغَٰلِبِينَ
மிகைத்தவர்களாக
(அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் "(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா?)" என்று கேட்டனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧௩)
Tafseer
௧௧௪

قَالَ نَعَمْ وَاِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِيْنَ ١١٤

qāla
قَالَ
கூறினான்
naʿam
نَعَمْ
ஆம்!
wa-innakum
وَإِنَّكُمْ
இன்னும் நிச்சயமாக நீங்கள்
lamina l-muqarabīna
لَمِنَ ٱلْمُقَرَّبِينَ
நெருக்கமானவர்களில்
அதற்கவன் "ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு.) அன்றி, நிச்சயமாக நீங்கள் (நம் அரசவையிலும் எனக்கு) மிக்க நெருங்கியவர் களாக இருப்பீர்கள்" என்றும் கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧௪)
Tafseer
௧௧௫

قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّآ اَنْ تُلْقِيَ وَاِمَّآ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِيْنَ ١١٥

qālū
قَالُوا۟
கூறினார்கள்
yāmūsā
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
immā an tul'qiya
إِمَّآ أَن تُلْقِىَ
நீர் எறிகிறீரா?
wa-immā an nakūna
وَإِمَّآ أَن نَّكُونَ
அவர்கள் நாங்கள் இருக்கவா?
naḥnu
نَحْنُ
நாங்களே
l-mul'qīna
ٱلْمُلْقِينَ
எறிபவர்களாக
(பின்னர், அச்சூனியக்காரர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! (முதலில் உங்களுடைய தடியை) நீங்கள் எறிகிறீரா? அல்லது நாம் எறிவதா?" என்று கேட்டனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧௫)
Tafseer
௧௧௬

قَالَ اَلْقُوْاۚ فَلَمَّآ اَلْقَوْا سَحَرُوْٓا اَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَاۤءُوْ بِسِحْرٍ عَظِيْمٍ ١١٦

qāla
قَالَ
கூறினார்
alqū
أَلْقُوا۟ۖ
எறியுங்கள்
falammā alqaw
فَلَمَّآ أَلْقَوْا۟
அவர்கள் எறிந்தபோது
saḥarū
سَحَرُوٓا۟
மயக்கினார்கள்
aʿyuna
أَعْيُنَ
கண்களை
l-nāsi
ٱلنَّاسِ
மக்களுடைய
wa-is'tarhabūhum
وَٱسْتَرْهَبُوهُمْ
இன்னும் திடுக்கிடச் செய்தனர் அவர்களை
wajāū
وَجَآءُو
இன்னும் வந்தனர்
bisiḥ'rin
بِسِحْرٍ
ஒரு சூனியத்தைக்கொண்டு
ʿaẓīmin
عَظِيمٍ
பெரியது
அதற்கு மூஸா "நீங்களே (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧௬)
Tafseer
௧௧௭

۞ وَاَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اَنْ اَلْقِ عَصَاكَۚ فَاِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُوْنَۚ ١١٧

wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
ilā mūsā
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
an alqi
أَنْ أَلْقِ
எறிவீராக என்று
ʿaṣāka
عَصَاكَۖ
உம் தடியை
fa-idhā hiya talqafu
فَإِذَا هِىَ تَلْقَفُ
அப்போது அது விழுங்கிவிட்டது
mā yafikūna
مَا يَأْفِكُونَ
எவற்றை/போலியாக செய்வார்கள்
அதுசமயம் நாம் "மூஸாவே! நீங்கள் உங்களுடைய தடியை எறியுங்கள்" என்று அவருக்கு வஹீ அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧௭)
Tafseer
௧௧௮

فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوْا يَعْمَلُوْنَۚ ١١٨

fawaqaʿa l-ḥaqu
فَوَقَعَ ٱلْحَقُّ
நிகழ்ந்தது/உண்மை
wabaṭala
وَبَطَلَ
பொய்ப்பித்தது
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தது
இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧௮)
Tafseer
௧௧௯

فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِيْنَۚ ١١٩

faghulibū hunālika
فَغُلِبُوا۟ هُنَالِكَ
ஆகவே தோற்கடிக்கப்பட்டனர்/அங்கே
wa-inqalabū
وَٱنقَلَبُوا۟
இன்னும் திரும்பினர்
ṣāghirīna
صَٰغِرِينَ
இழிவானவர்களாக
ஆகவே (கர்வம் கொண்டிருந்த) அவர்கள் தோல்வியுற்று, சிறுமைப்பட்டவர்களாக மாறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧௯)
Tafseer
௧௨௦

وَاُلْقِيَ السَّحَرَةُ سٰجِدِيْنَۙ ١٢٠

wa-ul'qiya
وَأُلْقِىَ
தள்ளப்பட்டனர்
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
sājidīna
سَٰجِدِينَ
சிரம் பணிந்தவர்களாக
அன்றி, அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து, ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨௦)
Tafseer