بَلْ اِيَّاهُ تَدْعُوْنَ فَيَكْشِفُ مَا تَدْعُوْنَ اِلَيْهِ اِنْ شَاۤءَ وَتَنْسَوْنَ مَا تُشْرِكُوْنَ ࣖ ٤١
- bal
- بَلْ
- மாறாக
- iyyāhu
- إِيَّاهُ
- அவனையே
- tadʿūna
- تَدْعُونَ
- அழைப்பீர்கள்
- fayakshifu
- فَيَكْشِفُ
- அகற்றுவான்
- mā
- مَا
- எதை
- tadʿūna
- تَدْعُونَ
- அழைக்கிறீர்கள்
- ilayhi
- إِلَيْهِ
- அதன் பக்கம்
- in shāa
- إِن شَآءَ
- அவன் நாடினால்
- watansawna
- وَتَنسَوْنَ
- இன்னும் மறந்து விடுவீர்கள்
- mā tush'rikūna
- مَا تُشْرِكُونَ
- எவற்றை/இணைவைக்கிறீர்கள்
அவ்வாறன்று! நீங்கள் இணைவைத்தவைகளை எல்லாம் மறந்துவிட்டு அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எ(வ்வேதனையை நீக்குவ)தற்காக அவனை அழைப்பீர்களோ அதனை அவன் விரும்பினால் நீக்கியும் விடுவான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௧)Tafseer
وَلَقَدْ اَرْسَلْنَآ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَأْسَاۤءِ وَالضَّرَّاۤءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ ٤٢
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَآ
- அனுப்பினோம்
- ilā
- إِلَىٰٓ
- பக்கம்
- umamin
- أُمَمٍ
- (பல) சமுதாயங்கள்
- min qablika
- مِّن قَبْلِكَ
- உமக்கு முன்னர்
- fa-akhadhnāhum
- فَأَخَذْنَٰهُم
- பிடித்தோம்/அவர்களை
- bil-basāi
- بِٱلْبَأْسَآءِ
- வறுமையைக் கொண்டு
- wal-ḍarāi
- وَٱلضَّرَّآءِ
- இன்னும் நோய்
- laʿallahum yataḍarraʿūna
- لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ
- அவர்கள் பணிவதற்காக
(நபியே!) உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம்முடைய தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௨)Tafseer
فَلَوْلَآ اِذْ جَاۤءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوْا وَلٰكِنْ قَسَتْ قُلُوْبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ٤٣
- falawlā idh
- فَلَوْلَآ إِذْ
- வேண்டாமா?/போது
- jāahum
- جَآءَهُم
- வந்தது/அவர்களுக்கு
- basunā
- بَأْسُنَا
- நம் வேதனை
- taḍarraʿū
- تَضَرَّعُوا۟
- பணிந்தனர்
- walākin qasat
- وَلَٰكِن قَسَتْ
- எனினும்/இறுகின
- qulūbuhum
- قُلُوبُهُمْ
- உள்ளங்கள்/அவர்களுடைய
- wazayyana
- وَزَيَّنَ
- இன்னும் அலங்கரித்தான்
- lahumu
- لَهُمُ
- அவர்களுக்கு
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- mā kānū yaʿmalūna
- مَا كَانُوا۟ يَعْمَلُونَ
- எதை/இருந்தனர்/செய்கின்றனர்
நம்முடைய வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா? ஆனால் அவர்களுடைய உள்ளங்கள் இறுகி விட்டன. அன்றி, அவர்கள் செய்து கொண்டிருந்ததையே ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௩)Tafseer
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَيْءٍۗ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَآ اُوْتُوْٓا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ ٤٤
- falammā nasū
- فَلَمَّا نَسُوا۟
- போது/மறந்தனர்
- mā dhukkirū
- مَا ذُكِّرُوا۟
- எதை/உபதேசிக்கப் பட்டனர்
- bihi
- بِهِۦ
- அதைக் கொண்டு
- fataḥnā
- فَتَحْنَا
- திறந்தோம்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்களுக்கு
- abwāba
- أَبْوَٰبَ
- வாசல்களை
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின்
- ḥattā
- حَتَّىٰٓ
- முடிவாக
- idhā fariḥū
- إِذَا فَرِحُوا۟
- மகிழ்ச்சியடைந்த போது
- bimā
- بِمَآ
- எதைக் கொண்டு
- ūtū
- أُوتُوٓا۟
- கொடுக்கப்பட்டனர்
- akhadhnāhum
- أَخَذْنَٰهُم
- பிடித்தோம்/அவர்களை
- baghtatan
- بَغْتَةً
- திடீரென
- fa-idhā hum
- فَإِذَا هُم
- அப்போது அவர்கள்
- mub'lisūna
- مُّبْلِسُونَ
- நம்பிக்கை இழந்து விடுகிறார்கள்
அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்துவிடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௪)Tafseer
فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِيْنَ ظَلَمُوْاۗ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ٤٥
- faquṭiʿa
- فَقُطِعَ
- ஆகவே அறுக்கப்பட்டது
- dābiru l-qawmi
- دَابِرُ ٱلْقَوْمِ
- வேர்/கூட்டம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ẓalamū
- ظَلَمُوا۟ۚ
- அநியாயமிழைத்தனர்
- wal-ḥamdu
- وَٱلْحَمْدُ
- புகழ்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கே
- rabbi
- رَبِّ
- இறைவன்
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களின்
ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த அந்த மக்களின் வேர் அறுபட்டு விட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே உலகத்தாரின் இறைவன். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௫)Tafseer
قُلْ اَرَاَيْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَاَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰى قُلُوْبِكُمْ مَّنْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ يَأْتِيْكُمْ بِهٖۗ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُوْنَ ٤٦
- qul
- قُلْ
- கூறுவீராக
- ara-aytum
- أَرَءَيْتُمْ
- அறிவியுங்கள்
- in akhadha
- إِنْ أَخَذَ
- எடுத்தால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- samʿakum
- سَمْعَكُمْ
- கேள்விப்புலனை/உங்கள்
- wa-abṣārakum
- وَأَبْصَٰرَكُمْ
- இன்னும் பார்வைகள்/உங்கள்
- wakhatama
- وَخَتَمَ
- இன்னும் முத்திரையிட்டால்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- qulūbikum
- قُلُوبِكُم
- உங்கள் உள்ளங்கள்
- man
- مَّنْ
- யார்?
- ilāhun
- إِلَٰهٌ
- வணங்கப்படும்கடவுள்
- ghayru
- غَيْرُ
- அல்லாத
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- yatīkum
- يَأْتِيكُم
- வருவார்/உங்களுக்கு
- bihi
- بِهِۗ
- அதைக் கொண்டு
- unẓur
- ٱنظُرْ
- கவனிப்பீராக
- kayfa
- كَيْفَ
- எவ்வாறு
- nuṣarrifu
- نُصَرِّفُ
- விவரிக்கிறோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- அத்தாட்சிகளை
- thumma
- ثُمَّ
- பிறகு
- hum
- هُمْ
- அவர்கள்
- yaṣdifūna
- يَصْدِفُونَ
- புறக்கணிக்கின்றனர்
"அல்லாஹ், உங்களுடைய கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவைகளை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேளுங்கள். (நம்முடைய ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கின்றோம் என்பதை நீங்கள் கவனியுங்கள். (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௬)Tafseer
قُلْ اَرَاَيْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ بَغْتَةً اَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الظّٰلِمُوْنَ ٤٧
- qul
- قُلْ
- கூறுவீராக
- ara-aytakum
- أَرَءَيْتَكُمْ
- அறிவியுங்கள்
- in atākum
- إِنْ أَتَىٰكُمْ
- வந்தால்/உங்களிடம்
- ʿadhābu
- عَذَابُ
- வேதனை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- baghtatan
- بَغْتَةً
- திடீரென
- aw
- أَوْ
- அல்லது
- jahratan
- جَهْرَةً
- வெளிப்படையாக
- hal yuh'laku
- هَلْ يُهْلَكُ
- அழிக்கப்படுவார்களா?
- illā
- إِلَّا
- தவிர
- l-qawmu
- ٱلْقَوْمُ
- மக்களை
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "திடீரெனவோ அல்லது முன்னெச்சரிக்கையுடனோ அல்லாஹ் வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்னாகும் என்பதை) நீங்கள் சிந்தித்தீர்களா? (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப் படுவார்களா?" ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௭)Tafseer
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَۚ فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٤٨
- wamā nur'silu
- وَمَا نُرْسِلُ
- நாம் அனுப்புவதில்லை
- l-mur'salīna
- ٱلْمُرْسَلِينَ
- தூதர்களை
- illā
- إِلَّا
- தவிர
- mubashirīna
- مُبَشِّرِينَ
- நற்செய்தியாளர்களாக
- wamundhirīna
- وَمُنذِرِينَۖ
- இன்னும் எச்சரிப்பவர்களாக
- faman
- فَمَنْ
- ஆகவே, எவர்(கள்)
- āmana
- ءَامَنَ
- நம்பிக்கை கொண்டார்(கள்)
- wa-aṣlaḥa
- وَأَصْلَحَ
- சீர்திருத்தினார்(கள்)
- falā khawfun
- فَلَا خَوْفٌ
- பயமில்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- walā hum
- وَلَا هُمْ
- இல்லை/அவர்கள்
- yaḥzanūna
- يَحْزَنُونَ
- கவலைப்படுவார்கள்
(நன்மையைக் கொண்டு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீமையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே அன்றி (நம்முடைய) தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் (இந்நபியை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௮)Tafseer
وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ ٤٩
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- kadhabū
- كَذَّبُوا۟
- பொய்ப்பித்தார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நம் வசனங்களை
- yamassuhumu
- يَمَسُّهُمُ
- பிடிக்கும்/அவர்களை
- l-ʿadhābu
- ٱلْعَذَابُ
- வேதனை
- bimā
- بِمَا
- எதன் காரணமாக
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- yafsuqūna
- يَفْسُقُونَ
- பாவம் செய்கிறார்கள்
ஆனால் (உங்களில்) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை, அவர்களுடைய (இப்) பாவத்தின் காரணமாக வேதனை பிடித்துக்கொள்ளும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௯)Tafseer
قُلْ لَّآ اَقُوْلُ لَكُمْ عِنْدِيْ خَزَاۤىِٕنُ اللّٰهِ وَلَآ اَعْلَمُ الْغَيْبَ وَلَآ اَقُوْلُ لَكُمْ اِنِّيْ مَلَكٌۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَيَّۗ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُۗ اَفَلَا تَتَفَكَّرُوْنَ ࣖ ٥٠
- qul
- قُل
- கூறுவீராக
- lā aqūlu
- لَّآ أَقُولُ
- கூறமாட்டேன்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ʿindī
- عِندِى
- என்னிடம்
- khazāinu
- خَزَآئِنُ
- பொக்கிஷங்கள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- walā aʿlamu
- وَلَآ أَعْلَمُ
- இன்னும் அறியமாட்டேன்
- l-ghayba
- ٱلْغَيْبَ
- மறைவானவற்றை
- walā aqūlu
- وَلَآ أَقُولُ
- இன்னும் கூறமாட்டேன்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- malakun
- مَلَكٌۖ
- ஒரு வானவர்
- in attabiʿu
- إِنْ أَتَّبِعُ
- நான் பின்பற்ற மாட்டேன்
- illā
- إِلَّا
- தவிர
- mā yūḥā
- مَا يُوحَىٰٓ
- எது/வஹீ அறிவிக்கப்படுகிறது
- ilayya
- إِلَىَّۚ
- எனக்கு
- qul
- قُلْ
- கூறுவீராக
- hal yastawī
- هَلْ يَسْتَوِى
- சமமாவார்களா?
- l-aʿmā
- ٱلْأَعْمَىٰ
- குருடர்
- wal-baṣīru
- وَٱلْبَصِيرُۚ
- இன்னும் பார்வையுடையவர்
- afalā tatafakkarūna
- أَفَلَا تَتَفَكَّرُونَ
- நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு மலக்கு என்றும் நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளை அன்றி (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை" என்று கூறி, "குருடனும், பார்வையுடையவனும் சமம் ஆவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்றும் கேளுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௦)Tafseer