Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௦

Qur'an Surah Al-An'am Verse 50

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ لَّآ اَقُوْلُ لَكُمْ عِنْدِيْ خَزَاۤىِٕنُ اللّٰهِ وَلَآ اَعْلَمُ الْغَيْبَ وَلَآ اَقُوْلُ لَكُمْ اِنِّيْ مَلَكٌۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَيَّۗ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُۗ اَفَلَا تَتَفَكَّرُوْنَ ࣖ (الأنعام : ٦)

qul
قُل
Say
கூறுவீராக
lā aqūlu
لَّآ أَقُولُ
"Not "(do) I say
கூறமாட்டேன்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
ʿindī
عِندِى
(that) with me
என்னிடம்
khazāinu
خَزَآئِنُ
(are the) treasures
பொக்கிஷங்கள்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
walā aʿlamu
وَلَآ أَعْلَمُ
and not (that) I know
இன்னும் அறியமாட்டேன்
l-ghayba
ٱلْغَيْبَ
the unseen
மறைவானவற்றை
walā aqūlu
وَلَآ أَقُولُ
and not I say
இன்னும் கூறமாட்டேன்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
innī
إِنِّى
that I (am)
நிச்சயமாக நான்
malakun
مَلَكٌۖ
an Angel
ஒரு வானவர்
in attabiʿu
إِنْ أَتَّبِعُ
Not (do) I follow
நான் பின்பற்ற மாட்டேன்
illā
إِلَّا
except
தவிர
mā yūḥā
مَا يُوحَىٰٓ
what is revealed
எது/வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayya
إِلَىَّۚ
to me"
எனக்கு
qul
قُلْ
Say
கூறுவீராக
hal yastawī
هَلْ يَسْتَوِى
"Can be equal
சமமாவார்களா?
l-aʿmā
ٱلْأَعْمَىٰ
the blind
குருடர்
wal-baṣīru
وَٱلْبَصِيرُۚ
and the seeing one?"
இன்னும் பார்வையுடையவர்
afalā tatafakkarūna
أَفَلَا تَتَفَكَّرُونَ
Then will not you give thought?
நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

Transliteration:

Qul laaa aqoolu lakum 'indee khazaaa'inul laahi wa laaa a'lamul ghaiba wa laaa aqoolu lakum innee malakun in attabi'u illaa maa yoohaaa ilaiy; qul hal yastawil a'maa walbaseer; afalaa tatafakkaroon (QS. al-ʾAnʿām:50)

English Sahih International:

Say, [O Muhammad], "I do not tell you that I have the depositories [containing the provision] of Allah or that I know the unseen, nor do I tell you that I am an angel. I only follow what is revealed to me." Say, "Is the blind equivalent to the seeing? Then will you not give thought?" (QS. Al-An'am, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு மலக்கு என்றும் நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளை அன்றி (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை" என்று கூறி, "குருடனும், பார்வையுடையவனும் சமம் ஆவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்றும் கேளுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௫௦)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்| “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். மறைவானவற்றை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்கு கூறமாட்டேன். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றமாட்டேன்." (நபியே!) கூறுவீராக: "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?"