Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 6

An-Nisa

(an-Nisāʾ)

௫௧

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَيَقُوْلُوْنَ لِلَّذِيْنَ كَفَرُوْا هٰٓؤُلَاۤءِ اَهْدٰى مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا سَبِيْلًا ٥١

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
ilā alladhīna
إِلَى ٱلَّذِينَ
எவர்களை
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
naṣīban
نَصِيبًا
ஒரு பாகம்
mina l-kitābi
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்றனர்
bil-jib'ti
بِٱلْجِبْتِ
ஷைத்தானை
wal-ṭāghūti
وَٱلطَّٰغُوتِ
இன்னும் சிலையை
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
lilladhīna
لِلَّذِينَ
எவர்களை நோக்கி
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
ahdā
أَهْدَىٰ
மிக நேர்வழியாளர்(கள்)
mina
مِنَ
விட
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
sabīlan
سَبِيلًا
பாதையால்
(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், ஷைத்தான் களையும் நம்பிக்கை கொண்டு (மற்ற) நிராகரிப்பவர்களைச் சுட்டிக் காண்பித்து "இவர்கள்தாம் உண்மை நம்பிக்கையாளர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்" என்று கூறுகின்றனர். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫௧)
Tafseer
௫௨

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ ۗوَمَنْ يَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِيْرًا ٥٢

ulāika
أُو۟لَٰٓئِكَ
alladhīna
ٱلَّذِينَ
அவர்கள்/எவர்கள்
laʿanahumu
لَعَنَهُمُ
அவர்களை சபித்தான்
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
waman yalʿani
وَمَن يَلْعَنِ
எவரை/சபிப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
falan tajida
فَلَن تَجِدَ
காணவே மாட்டீர்
lahu
لَهُۥ
அவருக்கு
naṣīran
نَصِيرًا
உதவியாளரை
இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கின்றான். எவர்களை அல்லாஹ் சபித்து விடுகின்றானோ அவர்களுக்கு உதவி செய்யும் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫௨)
Tafseer
௫௩

اَمْ لَهُمْ نَصِيْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا يُؤْتُوْنَ النَّاسَ نَقِيْرًاۙ ٥٣

am
أَمْ
அல்லது
lahum
لَهُمْ
இவர்களுக்கு
naṣībun
نَصِيبٌ
பங்கு
mina l-mul'ki
مِّنَ ٱلْمُلْكِ
ஆட்சியில்
fa-idhan
فَإِذًا
அவ்வாறிருந்தால்
lā yu'tūna
لَّا يُؤْتُونَ
கொடுக்க மாட்டார்கள்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
naqīran
نَقِيرًا
கீறல் அளவும்
இவர்களுக்கு இவ்வுலக ஆட்சியில் சொற்ப பங்காவது இருக்கின்றதா? அவ்வாறிருந்தால் மனிதர்களுக்கு ஒரு எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫௩)
Tafseer
௫௪

اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَآ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۚ فَقَدْ اٰتَيْنَآ اٰلَ اِبْرٰهِيْمَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا ٥٤

am
أَمْ
அல்லது
yaḥsudūna
يَحْسُدُونَ
பொறாமைப்படுகி றார்கள்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
ʿalā
عَلَىٰ
மீது
mā ātāhumu
مَآ ءَاتَىٰهُمُ
எது/கொடுத்தான்/ அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min faḍlihi
مِن فَضْلِهِۦۖ
தன் அருளிலிருந்து
faqad
فَقَدْ
திட்டமாக
ātaynā
ءَاتَيْنَآ
கொடுத்தோம்
āla
ءَالَ
குடும்பத்தாருக்கு
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுடைய
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
waātaynāhum
وَءَاتَيْنَٰهُم
இன்னும் கொடுத்தோம்/ அவர்களுக்கு
mul'kan
مُّلْكًا
ஆட்சியை
ʿaẓīman
عَظِيمًا
பெரிய
அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு வழங்கியுள்ள அருளைப் பற்றி இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? நிச்சயமாக நாம் இப்ராஹீமுடைய சந்ததிகளுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்து, அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫௪)
Tafseer
௫௫

فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ ۗ وَكَفٰى بِجَهَنَّمَ سَعِيْرًا ٥٥

famin'hum
فَمِنْهُم
அவர்களில் உண்டு
man
مَّنْ
எவர்
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
bihi
بِهِۦ
அதை
wamin'hum
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
man
مَّن
எவர்
ṣadda
صَدَّ
தடுத்தார்
ʿanhu
عَنْهُۚ
அதை விட்டு
wakafā
وَكَفَىٰ
போதுமாகும்
bijahannama
بِجَهَنَّمَ
நரகமே
saʿīran
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நெருப்பால்
அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றோர் நிராகரித்துவிட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫௫)
Tafseer
௫௬

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًاۗ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوا الْعَذَابَۗ اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا ٥٦

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
sawfa nuṣ'līhim
سَوْفَ نُصْلِيهِمْ
அவர்களை எரிப்போம்
nāran
نَارًا
நரக நெருப்பில்
kullamā
كُلَّمَا
போதெல்லாம்
naḍijat
نَضِجَتْ
கனிந்து விட்டது
julūduhum
جُلُودُهُم
அவர்களின் தோல்கள்
baddalnāhum
بَدَّلْنَٰهُمْ
அவர்களுக்கு மாற்றுவோம்
julūdan
جُلُودًا
தோல்களை
ghayrahā
غَيْرَهَا
அவை அல்லாத
liyadhūqū
لِيَذُوقُوا۟
அவர்கள் சுவைப்பதற்கு
l-ʿadhāba
ٱلْعَذَابَۗ
வேதனையை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ʿazīzan
عَزِيزًا
மிகைத்தவனாக
ḥakīman
حَكِيمًا
ஞானவானாக
எவர்கள் நம்முடைய (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கருகி விடும் போதெல்லாம் மற்றொரு புதிய தோலை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடைய வாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫௬)
Tafseer
௫௭

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۗ لَهُمْ فِيْهَآ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ۙ وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيْلًا ٥٧

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகள்
sanud'khiluhum
سَنُدْخِلُهُمْ
அவர்களை நுழைப்போம்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā abadan
فِيهَآ أَبَدًاۖ
அவற்றில்/என்றும்
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
fīhā
فِيهَآ
அவற்றில்
azwājun
أَزْوَٰجٌ
மனைவிகள்
muṭahharatun
مُّطَهَّرَةٌۖ
பரிசுத்தமான
wanud'khiluhum
وَنُدْخِلُهُمْ
இன்னும் அவர்களை நுழைப்போம்
ẓillan
ظِلًّا
நிழலில்
ẓalīlan
ظَلِيلًا
அடர்ந்தது
(அவர்களில்) எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அடர்ந்த (நீங்காத) நிழலிலும் அவர்களை நாம் அமர்த்துவோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫௭)
Tafseer
௫௮

۞ اِنَّ اللّٰهَ يَأْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَاۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ ۗ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ ۗ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًاۢ بَصِيْرًا ٥٨

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yamurukum
يَأْمُرُكُمْ
உங்களுக்குக் கட்டளையிடுகிறான்
an tu-addū
أَن تُؤَدُّوا۟
நீங்கள் ஒப்படைத்து விடுவது
l-amānāti
ٱلْأَمَٰنَٰتِ
அமானிதங்களை
ilā
إِلَىٰٓ
இடம்
ahlihā
أَهْلِهَا
அதன் சொந்தக்காரர்
wa-idhā ḥakamtum
وَإِذَا حَكَمْتُم
இன்னும் நீங்கள் தீர்ப்பளித்தால்
bayna l-nāsi
بَيْنَ ٱلنَّاسِ
இடையில்/மக்கள்
an taḥkumū
أَن تَحْكُمُوا۟
நீங்கள் தீர்ப்பளிப்பது
bil-ʿadli
بِٱلْعَدْلِۚ
நீதமாக
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
niʿimmā
نِعِمَّا
எது மிக சிறந்தது?
yaʿiẓukum
يَعِظُكُم
உங்களுக்கு உபதேசிக்கிறான்
bihi
بِهِۦٓۗ
அதை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
samīʿan
سَمِيعًۢا
செவியுறுபவனாக
baṣīran
بَصِيرًا
உற்று நோக்குபவனாக
(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫௮)
Tafseer
௫௯

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِيْ شَيْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۗ ذٰلِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَأْوِيْلًا ࣖ ٥٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
aṭīʿū
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதருக்கு
wa-ulī l-amri
وَأُو۟لِى ٱلْأَمْرِ
இன்னும் அதிகாரிகளுக்கு
minkum
مِنكُمْۖ
உங்களில்
fa-in tanāzaʿtum
فَإِن تَنَٰزَعْتُمْ
உங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டால்
fī shayin
فِى شَىْءٍ
ஒரு விஷயத்தில்
faruddūhu
فَرُدُّوهُ
அதைத் திருப்புங்கள்
ilā
إِلَى
பக்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
wal-rasūli
وَٱلرَّسُولِ
தூதர்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
tu'minūna
تُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۚ
இன்னும் இறுதி நாள்
dhālika
ذَٰلِكَ
இதுதான்
khayrun
خَيْرٌ
சிறந்தது
wa-aḥsanu
وَأَحْسَنُ
இன்னும் மிக அழகானது
tawīlan
تَأْوِيلًا
முடிவால்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டு மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையாகவும், அழகான முடிவாகவும் இருக்கும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫௯)
Tafseer
௬௦

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَآ اُنْزِلَ اِلَيْكَ وَمَآ اُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيْدُوْنَ اَنْ يَّتَحَاكَمُوْٓا اِلَى الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْٓا اَنْ يَّكْفُرُوْا بِهٖ ۗوَيُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّضِلَّهُمْ ضَلٰلًا ۢ بَعِيْدًا ٦٠

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
ilā
إِلَى
பக்கம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yazʿumūna
يَزْعُمُونَ
எண்ணுகின்றனர்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
bimā unzila
بِمَآ أُنزِلَ
எதை/இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உம் பக்கம்
wamā unzila
وَمَآ أُنزِلَ
எவற்றை/இறக்கப்பட்டன
min qablika
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
yurīdūna
يُرِيدُونَ
நாடுகின்றனர்
an yataḥākamū
أَن يَتَحَاكَمُوٓا۟
அவர்கள் தீர்ப்பு தேடிச்செல்ல
ilā l-ṭāghūti
إِلَى ٱلطَّٰغُوتِ
தீயவனிடம்
waqad umirū
وَقَدْ أُمِرُوٓا۟
கட்டளையிடப் பட்டுள்ளனர்
an yakfurū
أَن يَكْفُرُوا۟
அவர்கள் புறக்கணிக்க வேண்டும்
bihi
بِهِۦ
அவனை
wayurīdu
وَيُرِيدُ
நாடுகிறான்
l-shayṭānu an yuḍillahum
ٱلشَّيْطَٰنُ أَن يُضِلَّهُمْ
ஷைத்தான்/அவர்களை வழிகெடுக்க
ḍalālan
ضَلَٰلًۢا
வழிகேடு
baʿīdan
بَعِيدًا
வெகு தூரம்
(நபியே!) உங்கள்மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாகத் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் சாதிக்கின்றனரோ அவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிடப்பட்ட ஒரு விஷமியையே அவர்கள் (தங்களுக்குத்) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய) அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬௦)
Tafseer