Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 5

Al-Baqarah

(al-Baq̈arah)

௪௧

وَاٰمِنُوْا بِمَآ اَنْزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُوْنُوْٓا اَوَّلَ كَافِرٍۢ بِهٖ ۖ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِيْ ثَمَنًا قَلِيْلًا ۖوَّاِيَّايَ فَاتَّقُوْنِ ٤١

waāminū
وَءَامِنُوا۟
இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்
bimā
بِمَآ
எதை
anzaltu
أَنزَلْتُ
இறக்கினேன்
muṣaddiqan
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
limā maʿakum
لِّمَا مَعَكُمْ
எதை/உங்களிடம்
walā takūnū
وَلَا تَكُونُوٓا۟
இன்னும் ஆகிவிடாதீர்கள்
awwala
أَوَّلَ
முதலாமவர்களாக
kāfirin
كَافِرٍۭ
நிராகரிப்பவர்களில்
bihi
بِهِۦۖ
அதை
walā tashtarū
وَلَا تَشْتَرُوا۟
இன்னும் (விலைக்கு) வாங்காதீர்கள்
biāyātī
بِـَٔايَٰتِى
என் வசனங்களுக்குப் பகரமாக
thamanan
ثَمَنًا
கிரயத்தை
qalīlan
قَلِيلًا
சொற்ப
wa-iyyāya
وَإِيَّٰىَ
இன்னும் என்னையே
fa-ittaqūni
فَٱتَّقُونِ
அஞ்சுங்கள்/என்னை
நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்புங்கள். இது உங்களிடமுள்ள ("தவ்றாத்" என்னும் வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இதை நிராகரிப்பவர்களில் நீங்களே முதன்மையானவர்களாகிவிட வேண்டாம். (இவ்வேதத்தைப் பற்றி உங்களிடமுள்ள "தவ்றாத்"தில் கூறியிருக்கும்) என்னுடைய வசனங்களை (மாற்றிச்) சொற்ப விலைக்கு விற்றுவிட வேண்டாம். நீங்கள் (மற்ற எவருக்கும் பயப்படாது) எனக்கே பயப்படுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௪௧)
Tafseer
௪௨

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ٤٢

walā talbisū
وَلَا تَلْبِسُوا۟
கலக்காதீர்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
பொய்யுடன்
wataktumū
وَتَكْتُمُوا۟
இன்னும் மறைக்காதீர்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிகிறீர்கள்
நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே அதனை மறைத்துப் பொய்யை உண்மையென புரட்டிவிட வேண்டாம். ([௨] ஸூரத்துல் பகரா: ௪௨)
Tafseer
௪௩

وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرَّاكِعِيْنَ ٤٣

wa-aqīmū
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
wa-ir'kaʿū
وَٱرْكَعُوا۟
இன்னும் /பணியுங்கள்
maʿa l-rākiʿīna
مَعَ ٱلرَّٰكِعِينَ
பணிபவர்களுடன்
நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்றுசேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௪௩)
Tafseer
௪௪

۞ اَتَأْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ ۗ اَفَلَا تَعْقِلُوْنَ ٤٤

atamurūna
أَتَأْمُرُونَ
ஏவுகிறீர்களா?
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
bil-biri
بِٱلْبِرِّ
நன்மையை
watansawna
وَتَنسَوْنَ
இன்னும் மறக்கிறீர்கள்
anfusakum
أَنفُسَكُمْ
உங்களை
wa-antum tatlūna
وَأَنتُمْ تَتْلُونَ
நீங்களோ ஓதுகிறீர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَۚ
வேதத்தை
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௨] ஸூரத்துல் பகரா: ௪௪)
Tafseer
௪௫

وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ۗ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ ٤٥

wa-is'taʿīnū
وَٱسْتَعِينُوا۟
இன்னும் உதவிகோருங்கள்
bil-ṣabri
بِٱلصَّبْرِ
பொறுத்திருந்து
wal-ṣalati
وَٱلصَّلَوٰةِۚ
இன்னும் தொழுது
wa-innahā
وَإِنَّهَا
நிச்சயமாக அது
lakabīratun
لَكَبِيرَةٌ
பளுவானதுதான்
illā
إِلَّا
தவிர
ʿalā
عَلَى
மீதே
l-khāshiʿīna
ٱلْخَٰشِعِينَ
உள்ளச்சமுடையோர்
(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும். ([௨] ஸூரத்துல் பகரா: ௪௫)
Tafseer
௪௬

الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَيْهِ رٰجِعُوْنَ ࣖ ٤٦

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaẓunnūna
يَظُنُّونَ
நம்புவார்கள்
annahum
أَنَّهُم
நிச்சயமாக/தாங்கள்
mulāqū
مُّلَٰقُوا۟
சந்திப்பவர்கள்
rabbihim
رَبِّهِمْ
இறைவனை/தங்கள்
wa-annahum
وَأَنَّهُمْ
இன்னும் நிச்சயமாக/தாங்கள்
ilayhi
إِلَيْهِ
அவனிடமே
rājiʿūna
رَٰجِعُونَ
திரும்புகிறவர்கள்
(உள்ளச்சமுடைய) அவர்களோ தங்கள் இறைவனை நிச்சயமாக சந்திப்போமென்றும், அவனிடமே நிச்சயமாக செல்வோமென்றும் உறுதியாக நம்புவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௪௬)
Tafseer
௪௭

يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِيَ الَّتِيْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّيْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ ٤٧

yābanī is'rāīla
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
சந்ததிகளே/இஸ்ராயீலின்
udh'kurū
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
niʿ'matiya
نِعْمَتِىَ
என் அருளை
allatī
ٱلَّتِىٓ
எது
anʿamtu
أَنْعَمْتُ
அருள் புரிந்தேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
wa-annī
وَأَنِّى
இன்னும் நிச்சயமாக நான்
faḍḍaltukum
فَضَّلْتُكُمْ
மேன்மைப்படுத்தினேன்/உங்களை
ʿalā
عَلَى
விட
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
உலகத்தார்களை
இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும்விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௪௭)
Tafseer
௪௮

وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِيْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْـًٔا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ ٤٨

wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
yawman
يَوْمًا
ஒரு நாளை
lā tajzī
لَّا تَجْزِى
பலனளிக்காது
nafsun
نَفْسٌ
ஓர் ஆன்மா
ʿan nafsin
عَن نَّفْسٍ
ஓர் ஆன்மாவிற்கு
shayan walā
شَيْـًٔا وَلَا
ஒன்றையும் இன்னும் ஏற்கப்படாது
yuq'balu
يُقْبَلُ
அதனிடமிருந்து
min'hā
مِنْهَا
பரிந்துரை
shafāʿatun walā
شَفَٰعَةٌ وَلَا
இன்னும் வாங்கப்படாது
yu'khadhu
يُؤْخَذُ
அதனிடமிருந்து
min'hā
مِنْهَا
பரிகாரம்
ʿadlun walā hum
عَدْلٌ وَلَا هُمْ
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
yunṣarūna
يُنصَرُونَ
Err
நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் யாதொன்றையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்க மாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அன்றி, அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௪௮)
Tafseer
௪௯

وَاِذْ نَجَّيْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْۤءَ الْعَذَابِ يُذَبِّحُوْنَ اَبْنَاۤءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَاۤءَكُمْ ۗ وَفِيْ ذٰلِكُمْ بَلَاۤءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ ٤٩

wa-idh najjaynākum
وَإِذْ نَجَّيْنَٰكُم
சமயம்/காப்பாற்றினோம்/உங்களை
min āli
مِّنْ ءَالِ
கூட்டத்திடமிருந்து
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
yasūmūnakum
يَسُومُونَكُمْ
சிரமம் தந்தார்கள்/உங்களுக்கு
sūa
سُوٓءَ
தீயது, கொடியது
l-ʿadhābi
ٱلْعَذَابِ
வேதனை
yudhabbiḥūna
يُذَبِّحُونَ
அறுத்தார்கள்
abnāakum
أَبْنَآءَكُمْ
ஆண் பிள்ளைகளை/உங்கள்
wayastaḥyūna
وَيَسْتَحْيُونَ
இன்னும் வாழவிட்டார்கள்
nisāakum
نِسَآءَكُمْۚ
பெண்(பிள்ளை)களை/உங்கள்
wafī dhālikum
وَفِى ذَٰلِكُم
அதில்
balāon
بَلَآءٌ
ஒரு சோதனை
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
ʿaẓīmun
عَظِيمٌ
பெரிய
அன்றி உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. ([௨] ஸூரத்துல் பகரா: ௪௯)
Tafseer
௫௦

وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَيْنٰكُمْ وَاَغْرَقْنَآ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ٥٠

wa-idh faraqnā
وَإِذْ فَرَقْنَا
இன்னும் சமயம்/பிளந்தோம்
bikumu
بِكُمُ
உங்களுக்காக
l-baḥra
ٱلْبَحْرَ
கடலை
fa-anjaynākum
فَأَنجَيْنَٰكُمْ
காப்பாற்றினோம்/ உங்களை
wa-aghraqnā
وَأَغْرَقْنَآ
இன்னும் மூழ்கடித்தோம்
āla fir'ʿawna
ءَالَ فِرْعَوْنَ
கூட்டத்தாரை/ ஃபிர்அவ்னுடைய
wa-antum tanẓurūna
وَأَنتُمْ تَنظُرُونَ
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க
மேலும் உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௫௦)
Tafseer