குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௪௪
Qur'an Surah Al-Baqarah Verse 44
ஸூரத்துல் பகரா [௨]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ اَتَأْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ ۗ اَفَلَا تَعْقِلُوْنَ (البقرة : ٢)
- atamurūna
- أَتَأْمُرُونَ
- Do you order
- ஏவுகிறீர்களா?
- l-nāsa
- ٱلنَّاسَ
- [the] people
- மக்களுக்கு
- bil-biri
- بِٱلْبِرِّ
- [the] righteousness
- நன்மையை
- watansawna
- وَتَنسَوْنَ
- and you forget
- இன்னும் மறக்கிறீர்கள்
- anfusakum
- أَنفُسَكُمْ
- yourselves
- உங்களை
- wa-antum tatlūna
- وَأَنتُمْ تَتْلُونَ
- while you [you] recite
- நீங்களோ ஓதுகிறீர்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَۚ
- the Book?
- வேதத்தை
- afalā taʿqilūna
- أَفَلَا تَعْقِلُونَ
- Then will not you use reason?
- நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
Transliteration:
Ataamuroonan naasa bilbirri wa tansawna anfusakum wa antum tatloonal Kitaab; afalaa ta'qiloon(QS. al-Baq̈arah:44)
English Sahih International:
Do you order righteousness of the people and forget yourselves while you recite the Scripture? Then will you not reason? (QS. Al-Baqarah, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்துல் பகரா, வசனம் ௪௪)
Jan Trust Foundation
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்களோ வேதத்தை ஓதுகிறீர்கள். (அவ்வாறிருக்க), உங்களை மறந்து, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? சிந்தித்து புரியமாட்டீர்களா?