Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Word by Word

Al-Baqarah

(al-Baq̈arah)

bismillaahirrahmaanirrahiim

الۤمّۤ ۚ ١

alif-lam-meem
الٓمٓ
அலிஃப், லாம், மீம்
அலிஃப்; லாம்; மீம். (அல்லாஹுதஆலா, வானவர் ஜிப்ரீல் - அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய) ([௨] ஸூரத்துல் பகரா: ௧)
Tafseer

ذٰلِكَ الْكِتٰبُ لَا رَيْبَ ۛ فِيْهِ ۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ ٢

dhālika
ذَٰلِكَ
இந்த
l-kitābu
ٱلْكِتَٰبُ
வேதம்
lā rayba
لَا رَيْبَۛ
அறவே சந்தேகம் இல்லை
fīhi
فِيهِۛ
இதில்
hudan
هُدًى
நேர்வழி காட்டி
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறை அச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும். ([௨] ஸூரத்துல் பகரா: ௨)
Tafseer

الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ ۙ ٣

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
bil-ghaybi
بِٱلْغَيْبِ
மறைவானதை
wayuqīmūna
وَيُقِيمُونَ
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wamimmā
وَمِمَّا
இன்னும் எதிலிருந்து
razaqnāhum
رَزَقْنَٰهُمْ
கொடுத்தோம்/அவர்களுக்கு
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் புரிவார்கள்
அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௩)
Tafseer

وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَآ اُنْزِلَ اِلَيْكَ وَمَآ اُنْزِلَ مِنْ قَبْلِكَ ۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَۗ ٤

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
bimā unzila
بِمَآ أُنزِلَ
எதை/இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உமக்கு
wamā
وَمَآ
இன்னும் எதை
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
min qablika
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
wabil-ākhirati
وَبِٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமையை
hum
هُمْ
அவர்கள்
yūqinūna
يُوقِنُونَ
உறுதி கொள்வார்கள்
(அன்றி, நபியே!) அவர்கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உங்களுக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௪)
Tafseer

اُولٰۤىِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ ۙ وَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ٥

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ʿalā
عَلَىٰ
இல்
hudan
هُدًى
நேர்வழி
min rabbihim
مِّن رَّبِّهِمْۖ
இறைவனின்/தங்கள்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்
இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௫)
Tafseer

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَوَاۤءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ ٦

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
sawāon
سَوَآءٌ
சமம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
a-andhartahum
ءَأَنذَرْتَهُمْ
அவர்களை எச்சரித்தீர்
am
أَمْ
அல்லது
lam
لَمْ
நீர் எச்சரிக்கவில்லை
tundhir'hum
تُنذِرْهُمْ
நீர் எச்சரிக்கவில்லை அவர்களை
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் சமமே. அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௬)
Tafseer

خَتَمَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَعَلٰى سَمْعِهِمْ ۗ وَعَلٰٓى اَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَّلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ ࣖ ٧

khatama
خَتَمَ
முத்திரையிட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
waʿalā
وَعَلَىٰ
இன்னும் மீது
samʿihim
سَمْعِهِمْۖ
அவர்களின் கேள்விப் புலன்
waʿalā
وَعَلَىٰٓ
இன்னும் மீது
abṣārihim
أَبْصَٰرِهِمْ
அவர்களின் பார்வைகள்
ghishāwatun
غِشَٰوَةٌۖ
திரை
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
பெரியது
(அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டுவிட்டது. தவிர அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௭)
Tafseer

وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَۘ ٨

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
இன்னும் மக்களில்
man
مَن
எவர்
yaqūlu
يَقُولُ
கூறுகிறார்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wabil-yawmi l-ākhiri
وَبِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் நாளை/இறுதி
wamā hum
وَمَا هُم
அவர்கள் அல்லர்
bimu'minīna
بِمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களே
(நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதரில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களல்லர். ([௨] ஸூரத்துல் பகரா: ௮)
Tafseer

يُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِيْنَ اٰمَنُوْا ۚ وَمَا يَخْدَعُوْنَ اِلَّآ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَۗ ٩

yukhādiʿūna
يُخَٰدِعُونَ
வஞ்சிக்கின்றனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
wamā yakhdaʿūna
وَمَا يَخْدَعُونَ
வஞ்சிக்க மாட்டார்கள்
illā
إِلَّآ
தவிர
anfusahum
أَنفُسَهُمْ
தங்களையே
wamā yashʿurūna
وَمَا يَشْعُرُونَ
இன்னும் உணரமாட்டார்கள்
அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையேயன்றி (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௯)
Tafseer
௧௦

فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًاۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ۢ ەۙ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ ١٠

fī qulūbihim
فِى قُلُوبِهِم
அவர்களின் உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
ஒரு நோய்
fazādahumu
فَزَادَهُمُ
எனவே, அவர்களுக்கு அதிகப்படுத்தினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
maraḍan
مَرَضًاۖ
நோயை
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌۢ
துன்புறுத்தக் கூடியது
bimā
بِمَا
காரணத்தால்
kānū
كَانُوا۟
இருந்தனர்
yakdhibūna
يَكْذِبُونَ
பொய்கூறுபவர்களாக
(ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. (அதன் காரணமாக) அவர்களுக்கு அந்நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்குண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦)
Tafseer