Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 14

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௩௧

اِذْ قَالَ لَهٗ رَبُّهٗٓ اَسْلِمْۙ قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِيْنَ ١٣١

idh qāla
إِذْ قَالَ
சமயம்/கூறினான்
lahu
لَهُۥ
அவருக்கு
rabbuhu
رَبُّهُۥٓ
அவருடைய இறைவன்
aslim
أَسْلِمْۖ
பணிந்து (முஸ்லிமாகி) விடு
qāla
قَالَ
கூறினார்
aslamtu
أَسْلَمْتُ
பணிந்து (முஸ்லிமாகி)விட்டேன்
lirabbi
لِرَبِّ
இறைவனுக்கு
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்
இப்ராஹீமை (நோக்கி) அவருடைய இறைவன் "நீ (எனக்கு) வழிப்படு!" எனக் கூறிய சமயத்தில் அவர் (எவ்வித தயக்கமுமின்றி) "அகிலத்தாரின் இறைவனுக்கு (இதோ) நான் வழிப்பட்டேன்" எனக் கூறினார். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௧)
Tafseer
௧௩௨

وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَيَعْقُوْبُۗ يٰبَنِيَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۗ ١٣٢

wawaṣṣā
وَوَصَّىٰ
இன்னும் உபதேசித்தார்
bihā
بِهَآ
அதை
ib'rāhīmu
إِبْرَٰهِۦمُ
இப்ராஹீம்
banīhi
بَنِيهِ
பிள்ளைகளுக்கு/தன்
wayaʿqūbu
وَيَعْقُوبُ
இன்னும் யஃகூப்
yābaniyya
يَٰبَنِىَّ
என் பிள்ளைகளே
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
iṣ'ṭafā
ٱصْطَفَىٰ
தேர்ந்தெடுத்தான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-dīna
ٱلدِّينَ
மார்க்கத்தை
falā tamūtunna
فَلَا تَمُوتُنَّ
எனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்
illā
إِلَّا
தவிர
wa-antum
وَأَنتُم
நீங்கள் இருக்கவே
mus'limūna
مُّسْلِمُونَ
முஸ்லிம்களாக
அவ்வாறே இப்ராஹீம் தன்னுடைய சந்ததிகளுக்கும் உபதேசித்தார். யஃகூபும் (தன்னுடைய சந்ததிகளை நோக்கி) "என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். ஆதலால் நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக அன்றி இறந்துவிட வேண்டாம்" (என்றே கூறினார்). ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௨)
Tafseer
௧௩௩

اَمْ كُنْتُمْ شُهَدَاۤءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِيْۗ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَاۤىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًاۚ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ١٣٣

am kuntum
أَمْ كُنتُمْ
அல்லது/இருந்தீர்கள்
shuhadāa
شُهَدَآءَ
சாட்சிகளாக
idh ḥaḍara
إِذْ حَضَرَ
போது/வந்தது
yaʿqūba
يَعْقُوبَ
யஃகூபுக்கு
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
idh qāla
إِذْ قَالَ
போது/கூறினார்
libanīhi
لِبَنِيهِ
பிள்ளைகளை நோக்கி/தன்
مَا
யாரை
taʿbudūna
تَعْبُدُونَ
நீங்கள் வணங்குவீர்கள்
min baʿdī
مِنۢ بَعْدِى
எனக்குப் பின்னர்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
naʿbudu
نَعْبُدُ
வணங்குவோம்
ilāhaka
إِلَٰهَكَ
கடவுளை/உம்
wa-ilāha
وَإِلَٰهَ
இன்னும் கடவுளை
ābāika
ءَابَآئِكَ
மூதாதைகளின்/உம்
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீம்
wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
ilāhan
إِلَٰهًا
ஒரு கடவுளை
wāḥidan
وَٰحِدًا
ஒரே
wanaḥnu
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
lahu
لَهُۥ
அவனுக்கு
mus'limūna
مُسْلِمُونَ
முஸ்லிம்கள்
(யூதர்களே!) யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி "எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு "உங்களுடைய இறைவனும், உங்களுடைய மூதாதைகளான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்" என்றே கூறினார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௩)
Tafseer
௧௩௪

تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ ١٣٤

til'ka
تِلْكَ
அது
ummatun
أُمَّةٌ
சமுதாயம்
qad khalat
قَدْ خَلَتْۖ
சென்றுவிட்டது
lahā
لَهَا
அதற்கு
mā kasabat
مَا كَسَبَتْ
எது/செய்தது
walakum
وَلَكُم
இன்னும் உங்களுக்கு
mā kasabtum
مَّا كَسَبْتُمْۖ
எது/செய்தீர்கள்
walā tus'alūna
وَلَا تُسْـَٔلُونَ
இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
ʿammā kānū yaʿmalūna
عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ
எதைப்பற்றி/இருந்தனர்/செய்வார்கள்
(மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்.) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உங்களிடம் கேட்கப்படமாட்டாது. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௪)
Tafseer
௧௩௫

وَقَالُوْا كُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى تَهْتَدُوْا ۗ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِيْفًا ۗوَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ ١٣٥

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
kūnū
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
hūdan
هُودًا
யூதர்களாக
aw
أَوْ
அல்லது
naṣārā
نَصَٰرَىٰ
கிறித்துவர்களாக
tahtadū
تَهْتَدُوا۟ۗ
நேர்வழி பெறுவீர்கள்
qul
قُلْ
கூறுவீராக
bal
بَلْ
மாறாக
millata
مِلَّةَ
மார்க்கத்தை
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமின்
ḥanīfan
حَنِيفًاۖ
இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர்
wamā kāna
وَمَا كَانَ
இன்னும் அவர் இருக்கவில்லை
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
(நம்பிக்கையாளர்களை நோக்கி) அவர்கள் "நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரான வழியை அடைந்து விடுவீர்கள்" எனக் கூறுகிறார்கள். அதற்கு "அவ்வாறன்று! நேரான வழியைச் சார்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணை வைத்து வணங்கியவரல்ல" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௫)
Tafseer
௧௩௬

قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَآ اُوْتِيَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِيَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْۖ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ١٣٦

qūlū
قُولُوٓا۟
கூறுங்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
wamā
وَمَآ
இன்னும் எது
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
ilaynā
إِلَيْنَا
நமக்கு
wamā
وَمَآ
இன்னும் எது
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
ilā ib'rāhīma
إِلَىٰٓ إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமுக்கு
wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
wayaʿqūba
وَيَعْقُوبَ
இன்னும் யஃகூப்
wal-asbāṭi
وَٱلْأَسْبَاطِ
இன்னும் சந்ததிகள்
wamā
وَمَآ
இன்னும் எது
ūtiya
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்(கள்)
mūsā
مُوسَىٰ
மூசா
waʿīsā
وَعِيسَىٰ
இன்னும் ஈஸா
wamā
وَمَآ
இன்னும் எது
ūtiya
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்(கள்)
l-nabiyūna
ٱلنَّبِيُّونَ
நபிமார்களுக்கு
min
مِن
இருந்து
rabbihim
رَّبِّهِمْ
இறைவன்/தங்கள்
lā nufarriqu
لَا نُفَرِّقُ
பிரிக்க மாட்டோம்
bayna
بَيْنَ
மத்தியில்
aḥadin
أَحَدٍ
ஒருவருக்கு
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
wanaḥnu
وَنَحْنُ
இன்னும் நாம்
lahu
لَهُۥ
அவனுக்கு
mus'limūna
مُسْلِمُونَ
முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
(நம்பிக்கையாளர்களே!) நீங்களும் கூறுங்கள்: "அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பட்ட அனைத்தையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம்." ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௬)
Tafseer
௧௩௭

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ۚوَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِيْ شِقَاقٍۚ فَسَيَكْفِيْكَهُمُ اللّٰهُ ۚوَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ۗ ١٣٧

fa-in āmanū
فَإِنْ ءَامَنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொண்டால்
bimith'li
بِمِثْلِ
போன்றே
مَآ
எதை
āmantum
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டீர்கள்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
faqadi
فَقَدِ
திட்டமாக
ih'tadaw
ٱهْتَدَوا۟ۖ
நேர்வழி பெறுவார்கள்
wa-in tawallaw
وَّإِن تَوَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
fa-innamā hum
فَإِنَّمَا هُمْ
அவர்களெல்லாம்
fī shiqāqin
فِى شِقَاقٍۖ
முரண்பாட்டில்தான்
fasayakfīkahumu
فَسَيَكْفِيكَهُمُ
ஆக, பாதுகாப்பான்/உம்மை/அவர்களிடமிருந்து
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
wahuwa
وَهُوَ
இன்னும் அவன்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் அறிபவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௭)
Tafseer
௧௩௮

صِبْغَةَ اللّٰهِ ۚ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً ۖ وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ ١٣٨

ṣib'ghata l-lahi
صِبْغَةَ ٱللَّهِۖ
மார்க்கத்தை/அல்லாஹ்வுடைய
waman
وَمَنْ
இன்னும் யார்
aḥsanu
أَحْسَنُ
மிக அழகானவன்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்வை விட
ṣib'ghatan
صِبْغَةًۖ
மார்க்கம்
wanaḥnu
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
lahu ʿābidūna
لَهُۥ عَٰبِدُونَ
அவனையே/வணங்கக்கூடியவர்கள்
"அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வைவிட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? (யாருமில்லை) நாம் அவனையே வணங்குவோம்" (என்றும் கூறுவீர்களாக!) ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௮)
Tafseer
௧௩௯

قُلْ اَتُحَاۤجُّوْنَنَا فِى اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْۚ وَلَنَآ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْۚ وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَ ۙ ١٣٩

qul
قُلْ
கூறுவீராக
atuḥājjūnanā
أَتُحَآجُّونَنَا
தர்க்கிக்கிறீர்களா?/நம்மிடம்
fī l-lahi
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விசயத்தில்
wahuwa
وَهُوَ
அவன்
rabbunā
رَبُّنَا
இறைவன்/எங்கள்
warabbukum
وَرَبُّكُمْ
இன்னும் இறைவன்/உங்கள்
walanā
وَلَنَآ
இன்னும் எங்களுக்கு
aʿmālunā
أَعْمَٰلُنَا
செயல்கள்/எங்கள்
walakum
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
aʿmālukum
أَعْمَٰلُكُمْ
செயல்கள்/உங்கள்
wanaḥnu
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
lahu
لَهُۥ
அவனுக்கே
mukh'liṣūna
مُخْلِصُونَ
வழிபாட்டைக் கலப்பின்றி செய்பவர்கள்
"நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? எங்களுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அவனே! எங்கள் செயல்கள் (அதன் பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (அதன் பலன்) உங்களுக்கே. நாங்கள் அவனுக்கு இணைவைக்காது, வணக்கங்களை முற்றிலும் அவனுக்கே களப்பற்றதாக ஆக்குவோம்" (என்றும் கூறுவீர்களாக!) ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩௯)
Tafseer
௧௪௦

اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى ۗ قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ۗ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ۗ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ١٤٠

am
أَمْ
அல்லது
taqūlūna
تَقُولُونَ
கூறுகிறீர்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
இப்ராஹீம்
wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
wayaʿqūba
وَيَعْقُوبَ
இன்னும் யஃகூப்
wal-asbāṭa
وَٱلْأَسْبَاطَ
இன்னும் சந்ததிகள்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
hūdan
هُودًا
யூதர்களாக
aw
أَوْ
அல்லது
naṣārā
نَصَٰرَىٰۗ
கிறித்துவர்களாக
qul
قُلْ
கூறுவீராக
a-antum
ءَأَنتُمْ
நீங்களா?
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவர்(கள்)
ami
أَمِ
அல்லது
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்வா?
waman
وَمَنْ
இன்னும் யார்?
aẓlamu
أَظْلَمُ
மகா அநியாயக்காரர்
mimman
مِمَّن
எவரைவிட
katama
كَتَمَ
மறைத்தார்
shahādatan
شَهَٰدَةً
சாட்சியத்தை
ʿindahu
عِندَهُۥ
தன்னிடத்தில்
mina l-lahi
مِنَ ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
wamā
وَمَا
இல்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bighāfilin
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
ʿammā
عَمَّا
பற்றி/அல்லாஹ்
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
"நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இவர்களும், இவர்களுடைய சந்ததிகளும் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்களென கூறுவீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா? அல்லாஹ்வா? என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அன்றி, (இதைப்பற்றி) தன்னிடமிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைப்பவனைவிடப் பெரிய அநியாயக்காரன் யார்? உங்களின் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இல்லை" (என்றும் கூறுங்கள்.) ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௦)
Tafseer