Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௩௯

Qur'an Surah Al-Baqarah Verse 139

ஸூரத்துல் பகரா [௨]: ௧௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَتُحَاۤجُّوْنَنَا فِى اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْۚ وَلَنَآ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْۚ وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَ ۙ (البقرة : ٢)

qul
قُلْ
Say
கூறுவீராக
atuḥājjūnanā
أَتُحَآجُّونَنَا
"Do you argue with us
தர்க்கிக்கிறீர்களா?/நம்மிடம்
fī l-lahi
فِى ٱللَّهِ
about Allah
அல்லாஹ்வின் விசயத்தில்
wahuwa
وَهُوَ
while He
அவன்
rabbunā
رَبُّنَا
(is) our Lord
இறைவன்/எங்கள்
warabbukum
وَرَبُّكُمْ
and your Lord?
இன்னும் இறைவன்/உங்கள்
walanā
وَلَنَآ
And for us
இன்னும் எங்களுக்கு
aʿmālunā
أَعْمَٰلُنَا
(are) our deeds
செயல்கள்/எங்கள்
walakum
وَلَكُمْ
and for you
இன்னும் உங்களுக்கு
aʿmālukum
أَعْمَٰلُكُمْ
(are) your deeds
செயல்கள்/உங்கள்
wanaḥnu
وَنَحْنُ
and we
இன்னும் நாங்கள்
lahu
لَهُۥ
to Him
அவனுக்கே
mukh'liṣūna
مُخْلِصُونَ
(are) sincere
வழிபாட்டைக் கலப்பின்றி செய்பவர்கள்

Transliteration:

Qul atuhaaajjoonanaa fil laahi wa Huwa Rabbunaa wa Rabbukum wa lanaa a'maalunaa wa lakum a'maalukum wa nahnu lahoo mukhlisson (QS. al-Baq̈arah:139)

English Sahih International:

Say, [O Muhammad], "Do you argue with us about Allah while He is our Lord and your Lord? For us are our deeds, and for you are your deeds. And we are sincere [in deed and intention] to Him." (QS. Al-Baqarah, Ayah ௧௩௯)

Abdul Hameed Baqavi:

"நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? எங்களுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அவனே! எங்கள் செயல்கள் (அதன் பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (அதன் பலன்) உங்களுக்கே. நாங்கள் அவனுக்கு இணைவைக்காது, வணக்கங்களை முற்றிலும் அவனுக்கே களப்பற்றதாக ஆக்குவோம்" (என்றும் கூறுவீர்களாக!) (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௩௯)

Jan Trust Foundation

அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்; எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு; உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு; மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்” என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"நீங்கள் அல்லாஹ்வின் விசயத்தில் நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? அவன்(தான்) எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான்! எங்கள் செயல்கள் (அவற்றின் பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (அவற்றின் பலன்) உங்களுக்கே; நாங்கள் அவனுக்கே வழிபாட்டை கலப்பின்றி செய்பவர்கள்" எனக் கூறுவீராக!