Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 10

Al-Baqarah

(al-Baq̈arah)

௯௧

وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَآ اُنْزِلَ عَلَيْنَا وَيَكْفُرُوْنَ بِمَا وَرَاۤءَهٗ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ ۗ قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْۢبِيَاۤءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ٩١

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
āminū
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
bimā anzala
بِمَآ أَنزَلَ
எதை/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
qālū
قَالُوا۟
கூறுகிறார்கள்
nu'minu
نُؤْمِنُ
நம்பிக்கை கொள்கிறோம்
bimā unzila
بِمَآ أُنزِلَ
எதை/இறக்கப்பட்டது
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
wayakfurūna
وَيَكْفُرُونَ
இன்னும் நிராகரிக்கிறார்கள்
bimā warāahu
بِمَا وَرَآءَهُۥ
எதை/அதற்கு அப்பால்
wahuwa
وَهُوَ
அதுவோ
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மை
muṣaddiqan
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியது
limā maʿahum
لِّمَا مَعَهُمْۗ
எதை/அவர்களிடம்
qul
قُلْ
கூறுவீராக
falima
فَلِمَ
எதற்காக
taqtulūna
تَقْتُلُونَ
கொலை செய்தீர்கள்
anbiyāa
أَنۢبِيَآءَ
தூதர்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
min qablu
مِن قَبْلُ
முன்னர்
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
"அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவை(யான வேதங்)களை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்" எனக் கூறி அவைகளைத் தவிர உள்ள இ(ந்)த(க்குர்ஆ)னை நிராகரித்து விடுகின்றார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக்) கேளுங்கள்: "(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில் தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?" ([௨] ஸூரத்துல் பகரா: ௯௧)
Tafseer
௯௨

۞ وَلَقَدْ جَاۤءَكُمْ مُّوْسٰى بِالْبَيِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ٩٢

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
jāakum
جَآءَكُم
வந்தார் உங்களிடம்
mūsā
مُّوسَىٰ
மூசா
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
thumma
ثُمَّ
பிறகு
ittakhadhtumu
ٱتَّخَذْتُمُ
எடுத்துக்கொண்டீர்கள்
l-ʿij'la
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
wa-antum
وَأَنتُمْ
நீங்களோ
ẓālimūna
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
(இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் பின்னும் ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திலும்) நீங்கள் (வரம்பு கடந்த) அநியாயக்காரர்களாகவே இருக்கின்றீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௯௨)
Tafseer
௯௩

وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَۗ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ۗ قَالُوْا سَمِعْنَا وَعَصَيْنَا وَاُشْرِبُوْا فِيْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ۗ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُمْ بِهٖٓ اِيْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ٩٣

wa-idh akhadhnā
وَإِذْ أَخَذْنَا
இன்னும் சமயம்/வாங்கினோம்
mīthāqakum
مِيثَٰقَكُمْ
உறுதிமொழியை/உங்கள்
warafaʿnā
وَرَفَعْنَا
இன்னும் உயர்த்தினோம்
fawqakumu
فَوْقَكُمُ
மேல்/உங்களுக்கு
l-ṭūra
ٱلطُّورَ
மலையை
khudhū
خُذُوا۟
(கடைப்)பிடியுங்கள்
مَآ
எதை
ātaynākum
ءَاتَيْنَٰكُم
கொடுத்தோம்/ உங்களுக்கு
biquwwatin
بِقُوَّةٍ
பலமாக
wa-is'maʿū
وَٱسْمَعُوا۟ۖ
இன்னும் செவிசாயுங்கள்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
samiʿ'nā
سَمِعْنَا
செவியுற்றோம்
waʿaṣaynā
وَعَصَيْنَا
இன்னும் மாறு செய்தோம்
wa-ush'ribū
وَأُشْرِبُوا۟
இன்னும் ஊட்டப்பட்டார்கள்
fī qulūbihimu
فِى قُلُوبِهِمُ
அவர்களுடைய உள்ளங்களில்
l-ʿij'la
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
bikuf'rihim
بِكُفْرِهِمْۚ
நிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய
qul
قُلْ
கூறுவீராக
bi'samā
بِئْسَمَا
கெட்டது/எது
yamurukum
يَأْمُرُكُم
ஏவுகிறது/உங்களுக்கு
bihi
بِهِۦٓ
அதை
īmānukum
إِيمَٰنُكُمْ
நம்பிக்கை/உங்கள்
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்கு மேல் "தூர்" என்ற மலையை உயர்த்தி "உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப் பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்" என்று கூறியதற்கு (அவர்கள் "நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டுவிட்டது. "(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௯௩)
Tafseer
௯௪

قُلْ اِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٩٤

qul
قُلْ
கூறுவீராக
in kānat
إِن كَانَتْ
இருந்தால்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-dāru
ٱلدَّارُ
வீடு
l-ākhiratu
ٱلْءَاخِرَةُ
மறுமை
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடத்தில்
khāliṣatan
خَالِصَةً
மட்டும்
min dūni l-nāsi
مِّن دُونِ ٱلنَّاسِ
அன்றி/மக்களுக்கு
fatamannawū
فَتَمَنَّوُا۟
விரும்புங்கள்
l-mawta
ٱلْمَوْتَ
மரணத்தை
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
"(யூதர்களே!) அல்லாஹ்விடமிருக்கும் மறுமை(யின் சுவர்க்க) வீடு (மற்ற) மனிதர்களுக்கன்றி உங்களுக்கே சொந்தமென்று (கூறும்) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (உங்களுக்குச் சொந்தமான அவ்வீட்டிற்குச் செல்வதற்கு) நீங்கள் மரணத்தை விரும்புங்கள்" என (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௯௪)
Tafseer
௯௫

وَلَنْ يَّتَمَنَّوْهُ اَبَدًاۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ ۢ بِالظّٰلِمِيْنَ ٩٥

walan yatamannawhu
وَلَن يَتَمَنَّوْهُ
விரும்பவே மாட்டார்கள்/அதை
abadan
أَبَدًۢا
ஒரு போதும்
bimā
بِمَا
காரணமாக/எதன்
qaddamat
قَدَّمَتْ
முற்படுத்தின
aydīhim
أَيْدِيهِمْۗ
அவர்களின் கரங்கள்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bil-ẓālimīna
بِٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
(ஆனால்) அவர்கள் கரங்கள் (செய்து) அனுப்பியிருக்கும் (பாவங்களின்) காரணத்தால் அதை அவர்கள் அறவே விரும்பவே மாட்டார்கள். (இந்த) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௯௫)
Tafseer
௯௬

وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰى حَيٰوةٍ ۛوَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْا ۛيَوَدُّ اَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ اَلْفَ سَنَةٍۚ وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ يُّعَمَّرَۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ ࣖ ٩٦

walatajidannahum
وَلَتَجِدَنَّهُمْ
நிச்சயமாகக் காண்பீர்/அவர்களை
aḥraṣa
أَحْرَصَ
பேராசைக்காரர்(களாக)
l-nāsi
ٱلنَّاسِ
மக்களை விட
ʿalā
عَلَىٰ
மீது
ḥayatin
حَيَوٰةٍ
வாழ்க்கை
wamina
وَمِنَ
இன்னும் விட
alladhīna ashrakū
ٱلَّذِينَ أَشْرَكُوا۟ۚ
இணைவைப்பவர்கள்
yawaddu
يَوَدُّ
விரும்புவார்
aḥaduhum
أَحَدُهُمْ
ஒருவர்/அவர்களில்
law yuʿammaru
لَوْ يُعَمَّرُ
வாழ்வு கொடுக்கப்பட வேண்டுமே
alfa
أَلْفَ
ஆயிரம்
sanatin
سَنَةٍ
ஆண்டு(கள்)
wamā
وَمَا
இன்னும் இல்லை
huwa
هُوَ
அது
bimuzaḥziḥihi
بِمُزَحْزِحِهِۦ
தப்பிக்க வைத்துவிடக் கூடியது/அவனை
mina l-ʿadhābi
مِنَ ٱلْعَذَابِ
வேதனையிலிருந்து
an yuʿammara
أَن يُعَمَّرَۗ
வாழ்வு கொடுக்கப்படுவது
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
bimā yaʿmalūna
بِمَا يَعْمَلُونَ
எதை/செய்கிறார்கள்
அன்றி, (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக இணைவைத்து வணங்கும்) முஷ்ரிக்குகளை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! அவர்களில் ஒவ்வொருவனும் "நான் ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழ வேண்டுமே?" என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) யிருடன் இருக்க அவனை விட்டு வைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிட மாட்டாது. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவனாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௯௬)
Tafseer
௯௭

قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِيْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰى قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَ ٩٧

qul
قُلْ
கூறுவீராக
man
مَن
யார்
kāna
كَانَ
ஆகிவிட்டார்
ʿaduwwan
عَدُوًّا
எதிரியாக
lijib'rīla
لِّجِبْرِيلَ
ஜிப்ரீலுக்கு
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
nazzalahu
نَزَّلَهُۥ
இறக்கினார்/அதை
ʿalā
عَلَىٰ
மீது
qalbika
قَلْبِكَ
உள்ளம்/உம்
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
muṣaddiqan
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
limā bayna yadayhi
لِّمَا بَيْنَ يَدَيْهِ
எதை/முன்னர்/அதற்கு
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழியாக
wabush'rā
وَبُشْرَىٰ
இன்னும் நற்செய்தியாக
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
"(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி" என (நபியே! நீங்கள் யூதர்களை)க் கேளுங்கள். நிச்சயமாக அவர் இதனை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உங்களது உள்ளத்தில் இறக்கிவைத்தார். இது தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துவதாகவும், நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும், நம்பிக்கை உடையவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது. ([௨] ஸூரத்துல் பகரா: ௯௭)
Tafseer
௯௮

مَنْ كَانَ عَدُوًّا لِّلّٰهِ وَمَلٰۤىِٕكَتِهٖ وَرُسُلِهٖ وَجِبْرِيْلَ وَمِيْكٰىلَ فَاِنَّ اللّٰهَ عَدُوٌّ لِّلْكٰفِرِيْنَ ٩٨

man kāna
مَن كَانَ
எவர்(கள்)/ ஆகிவிட்டார்(கள்)
ʿaduwwan lillahi
عَدُوًّا لِّلَّهِ
எதிரிகளாக/ அல்லாஹ்வுக்கு
wamalāikatihi
وَمَلَٰٓئِكَتِهِۦ
இன்னும் வானவர்கள்/அவனுடைய
warusulihi
وَرُسُلِهِۦ
இன்னும் தூதர்கள்/அவனுடைய
wajib'rīla
وَجِبْرِيلَ
இன்னும் ஜிப்ரீல்
wamīkāla
وَمِيكَىٰلَ
இன்னும் மீகால்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿaduwwun
عَدُوٌّ
எதிரி
lil'kāfirīna
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
(உங்களில்) எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயீலுக்கும் எதிரியாகி (அவர்களை நிராகரித்து) விட்டால் (அந்)நிராகரிப்பவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் எதிரியாகவே இருப்பான். ([௨] ஸூரத்துல் பகரா: ௯௮)
Tafseer
௯௯

وَلَقَدْ اَنْزَلْنَآ اِلَيْكَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍۚ وَمَا يَكْفُرُ بِهَآ اِلَّا الْفٰسِقُوْنَ ٩٩

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
anzalnā
أَنزَلْنَآ
இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
āyātin
ءَايَٰتٍۭ
வசனங்களை
bayyinātin
بَيِّنَٰتٍۖ
தெளிவானவை
wamā yakfuru
وَمَا يَكْفُرُ
இன்னும் நிராகரிக்க மாட்டார்(கள்)
bihā illā
بِهَآ إِلَّا
அவற்றை/தவிர
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்
(நபியே!) நிச்சயமாக மிகத் தெளிவான வசனங்களையே உங்களுக்கு இறக்கியிருக்கின்றோம். ஆதலால் பாவிகளைத் தவிர (மற்றெவரும்) அவைகளை நிராகரிக்க மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௯௯)
Tafseer
௧௦௦

اَوَكُلَّمَا عٰهَدُوْا عَهْدًا نَّبَذَهٗ فَرِيْقٌ مِّنْهُمْ ۗ بَلْ اَكْثَرُهُمْ لَا يُؤْمِنُوْنَ ١٠٠

awakullamā
أَوَكُلَّمَا
இன்னும் / போதெல்லாம்
ʿāhadū
عَٰهَدُوا۟
உடன்படிக்கை செய்தார்கள்
ʿahdan
عَهْدًا
ஓர் உடன்படிக்கையை
nabadhahu
نَّبَذَهُۥ
எறிந்தார்(கள்)/அதை
farīqun
فَرِيقٌ
பிரிவினர்
min'hum
مِّنْهُمۚ
அவர்களில்
bal
بَلْ
மாறாக
aktharuhum
أَكْثَرُهُمْ
அதிகமானோர் அவர்களில்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அவர்கள் (தங்கள் நபியிடம்) எவ்வுடன்படிக்கையைச் செய்தபோதிலும் அவர்களில் ஒரு பிரிவினர் அதனை (நிறைவேற்றாது) எடுத்தெறிந்து விடவில்லையா? ஆகவே அவர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦௦)
Tafseer