وَقَاسَمَهُمَآ اِنِّيْ لَكُمَا لَمِنَ النّٰصِحِيْنَۙ ٢١
- waqāsamahumā
- وَقَاسَمَهُمَآ
- சத்தியமிட்டான்/அவ்விருவரிடமும்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- lakumā
- لَكُمَا
- உங்கள் இருவருக்கும்
- lamina l-nāṣiḥīna
- لَمِنَ ٱلنَّٰصِحِينَ
- நிச்சயமாக நன்மையை நாடுவோரில்
"நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்" என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து, ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௧)Tafseer
فَدَلّٰىهُمَا بِغُرُورٍۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِۗ وَنَادٰىهُمَا رَبُّهُمَآ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّكُمَآ اِنَّ الشَّيْطٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ ٢٢
- fadallāhumā
- فَدَلَّىٰهُمَا
- ஆக, தரம் தாழ்த்தினான்/அவ்விருவரை
- bighurūrin
- بِغُرُورٍۚ
- ஏமாற்றி
- falammā dhāqā
- فَلَمَّا ذَاقَا
- இருவரும் சுவைத்தபோது
- l-shajarata badat
- ٱلشَّجَرَةَ بَدَتْ
- மரத்தை/தெரிந்தன
- lahumā
- لَهُمَا
- அவ்விருவருக்கு
- sawātuhumā
- سَوْءَٰتُهُمَا
- அவ்விருவரின் வெட்கத்தலங்கள்
- waṭafiqā
- وَطَفِقَا
- அவ்விருவரும் முயன்றனர்
- yakhṣifāni
- يَخْصِفَانِ
- அவ்விவரும் மூடிக்கொள்கின்றனர்
- ʿalayhimā
- عَلَيْهِمَا
- தம் இருவர் மீதும்
- min waraqi
- مِن وَرَقِ
- இலைகளினால்
- l-janati
- ٱلْجَنَّةِۖ
- சொர்க்கத்தின்
- wanādāhumā
- وَنَادَىٰهُمَا
- அழைத்தான்/அவ்விருவரை
- rabbuhumā
- رَبُّهُمَآ
- அவ்விருவரின் இறைவன்
- alam anhakumā
- أَلَمْ أَنْهَكُمَا
- நான் தடுக்கவில்லையா?/உங்களிருவரை
- ʿan til'kumā l-shajarati
- عَن تِلْكُمَا ٱلشَّجَرَةِ
- அம்மரத்தை விட்டு
- wa-aqul
- وَأَقُل
- இன்னும் நான்கூறவில்லையா?
- lakumā
- لَّكُمَآ
- உங்களிருவருக்கு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-shayṭāna
- ٱلشَّيْطَٰنَ
- ஷைத்தான்
- lakumā
- لَكُمَا
- உங்களிருவருக்கு
- ʿaduwwun
- عَدُوٌّ
- எதிரி
- mubīnun
- مُّبِينٌ
- வெளிப்படையான
அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் "அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௨)Tafseer
قَالَا رَبَّنَا ظَلَمْنَآ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ ٢٣
- qālā
- قَالَا
- அவ்விருவரும் கூறினர்
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- ẓalamnā
- ظَلَمْنَآ
- நாங்கள் தீங்கிழைத்தோம்
- anfusanā
- أَنفُسَنَا
- எங்கள் ஆன்மாக்களுக்கு
- wa-in lam taghfir lanā
- وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا
- நீ மன்னிக்கவில்லையெனில்/எங்களை
- watarḥamnā
- وَتَرْحَمْنَا
- இன்னும் நீ கருணை புரியவில்லையெனில்/எங்களுக்கு
- lanakūnanna
- لَنَكُونَنَّ
- நிச்சயமாக ஆகிவிடுவோம்
- mina l-khāsirīna
- مِنَ ٱلْخَٰسِرِينَ
- நஷ்டவாளிகளில்
(அதற்கு அவர்கள்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று (பிரார்த்தித்துக்) கூறினர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௩)Tafseer
قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚوَلَكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ ٢٤
- qāla
- قَالَ
- கூறினான்
- ih'biṭū
- ٱهْبِطُوا۟
- இறங்கிவிடுங்கள்
- baʿḍukum
- بَعْضُكُمْ
- உங்களில் சிலர்
- libaʿḍin
- لِبَعْضٍ
- சிலருக்கு
- ʿaduwwun
- عَدُوٌّۖ
- எதிரி
- walakum
- وَلَكُمْ
- உங்களுக்கு
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- mus'taqarrun
- مُسْتَقَرٌّ
- தங்குமிடம்
- wamatāʿun
- وَمَتَٰعٌ
- இன்னும் சுகம்
- ilā
- إِلَىٰ
- வரை
- ḥīnin
- حِينٍ
- ஒரு காலம்
(அதற்கு இறைவன் "இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவிக்கலாம்" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௪)Tafseer
قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ ࣖ ٢٥
- qāla
- قَالَ
- கூறினான்
- fīhā
- فِيهَا
- அதில்தான்
- taḥyawna
- تَحْيَوْنَ
- வாழ்வீர்கள்
- wafīhā
- وَفِيهَا
- இன்னும் அதில்தான்
- tamūtūna
- تَمُوتُونَ
- இறப்பீர்கள்
- wamin'hā
- وَمِنْهَا
- இன்னும் அதிலிருந்துதான்
- tukh'rajūna
- تُخْرَجُونَ
- எழுப்பப்படுவீர்கள்
(அன்றி) "அதிலேயே நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் இறப்பீர்கள்; (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே எழுப்பவும் படுவீர்கள்" என்றும் கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௫)Tafseer
يَا بَنِيْٓ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِيْ سَوْاٰتِكُمْ وَرِيْشًاۗ وَلِبَاسُ التَّقْوٰى ذٰلِكَ خَيْرٌۗ ذٰلِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ ٢٦
- yābanī
- يَٰبَنِىٓ
- சந்ததிகளே
- ādama
- ءَادَمَ
- ஆதமின்
- qad anzalnā
- قَدْ أَنزَلْنَا
- திட்டமாக/இறக்கினோம் (படைத்தோம்)
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது (உங்களுக்கு)
- libāsan
- لِبَاسًا
- ஆடையை
- yuwārī
- يُوَٰرِى
- மறைக்கின்ற(து)
- sawātikum
- سَوْءَٰتِكُمْ
- உங்கள் வெட்கத்தலங்களை
- warīshan
- وَرِيشًاۖ
- இன்னும் அலங்காரத்தை
- walibāsu
- وَلِبَاسُ
- ஆடை
- l-taqwā
- ٱلتَّقْوَىٰ
- இறையச்சத்தின்
- dhālika
- ذَٰلِكَ
- அதுதான்
- khayrun
- خَيْرٌۚ
- மிகச் சிறந்தது
- dhālika
- ذَٰلِكَ
- இவை
- min āyāti
- مِنْ ءَايَٰتِ
- அத்தாட்சிகளில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- laʿallahum yadhakkarūna
- لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
- அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடியதும் (உங்களை) அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். எனினும், (பாவங்களை மறைத்துவிடக் கூடிய) இறை அச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக! ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௬)Tafseer
يٰبَنِيْٓ اٰدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطٰنُ كَمَآ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْاٰتِهِمَا ۗاِنَّهٗ يَرٰىكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْۗ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَاۤءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ ٢٧
- yābanī
- يَٰبَنِىٓ
- சந்ததிகளே
- ādama
- ءَادَمَ
- ஆதமின்
- lā yaftinannakumu
- لَا يَفْتِنَنَّكُمُ
- ஏமாற்றிவிட வேண்டாம்/உங்களை
- l-shayṭānu kamā
- ٱلشَّيْطَٰنُ كَمَآ
- ஷைத்தான்/போன்று
- akhraja
- أَخْرَجَ
- வெளியேற்றினான்
- abawaykum
- أَبَوَيْكُم
- உங்கள் தாய் தந்தையை
- mina l-janati
- مِّنَ ٱلْجَنَّةِ
- சொர்க்கத்திலிருந்து
- yanziʿu
- يَنزِعُ
- கழட்டுகிறான்
- ʿanhumā
- عَنْهُمَا
- அவ்விருவரை விட்டு
- libāsahumā
- لِبَاسَهُمَا
- அவ்விருவரின் ஆடையை
- liyuriyahumā
- لِيُرِيَهُمَا
- அவன் காண்பிப்பதற்காக/அவ்விருவருக்கு
- sawātihimā
- سَوْءَٰتِهِمَآۗ
- அவ்விருவருடைய வெட்கத்தலங்களை
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- yarākum
- يَرَىٰكُمْ
- பார்க்கிறான்/உங்களை
- huwa waqabīluhu
- هُوَ وَقَبِيلُهُۥ
- அவன்/இன்னும் அவனுடைய இனத்தார்
- min ḥaythu lā tarawnahum
- مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْۗ
- நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- jaʿalnā
- جَعَلْنَا
- ஆக்கினோம்
- l-shayāṭīna
- ٱلشَّيَٰطِينَ
- ஷைத்தான்களை
- awliyāa
- أَوْلِيَآءَ
- நண்பர்களாக
- lilladhīna
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சோலையிலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கி விட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௭)Tafseer
وَاِذَا فَعَلُوْا فَاحِشَةً قَالُوْا وَجَدْنَا عَلَيْهَآ اٰبَاۤءَنَا وَاللّٰهُ اَمَرَنَا بِهَاۗ قُلْ اِنَّ اللّٰهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاۤءِۗ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ٢٨
- wa-idhā faʿalū
- وَإِذَا فَعَلُوا۟
- அவர்கள் செய்தால்
- fāḥishatan
- فَٰحِشَةً
- ஒரு மானக்கேடானதை
- qālū
- قَالُوا۟
- கூறுகின்றனர்
- wajadnā
- وَجَدْنَا
- கண்டோம்
- ʿalayhā
- عَلَيْهَآ
- இதன் மீது
- ābāanā
- ءَابَآءَنَا
- எங்கள் மூதாதைகளை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்வும்
- amaranā
- أَمَرَنَا
- ஏவினான்/எங்களுக்கு
- bihā qul
- بِهَاۗ قُلْ
- இதை/கூறுவீராக
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- lā yamuru
- لَا يَأْمُرُ
- ஏவ மாட்டான்
- bil-faḥshāi
- بِٱلْفَحْشَآءِۖ
- மானக்கேடானதை
- ataqūlūna
- أَتَقُولُونَ
- கூறுகிறீர்களா?
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- mā
- مَا
- எவற்றை
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- அறியமாட்டீர்கள்
(நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும்போது, அதனைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் "எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். அன்றி இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளை யிட்டிருக்கின்றான்" என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க் கூறலாமா?" என்று கூறுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௮)Tafseer
قُلْ اَمَرَ رَبِّيْ بِالْقِسْطِۗ وَاَقِيْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۗ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَۗ ٢٩
- qul
- قُلْ
- கூறுவீராக
- amara
- أَمَرَ
- ஏவினான்
- rabbī
- رَبِّى
- என் இறைவன்
- bil-qis'ṭi
- بِٱلْقِسْطِۖ
- நீதத்தை
- wa-aqīmū
- وَأَقِيمُوا۟
- இன்னும் நிலைநிறுத்துங்கள்
- wujūhakum
- وُجُوهَكُمْ
- உங்கள் முகங்களை
- ʿinda kulli
- عِندَ كُلِّ
- இடம்/எல்லாம்
- masjidin
- مَسْجِدٍ
- மஸ்ஜிது
- wa-id'ʿūhu
- وَٱدْعُوهُ
- அழையுங்கள்/அவனை
- mukh'liṣīna lahu
- مُخْلِصِينَ لَهُ
- தூய்மைப்படுத்தியவர்களாக/அவனுக்கு
- l-dīna
- ٱلدِّينَۚ
- வழிபடுவதை
- kamā bada-akum
- كَمَا بَدَأَكُمْ
- போன்று/ஆரம்பமாக படைத்தான்/உங்களை
- taʿūdūna
- تَعُودُونَ
- திரும்புவீர்கள்
அன்றி, "என் இறைவன் நீதத்தையே கட்டளை யிட்டிருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து) வெளியாக்கியது போல (இறந்த பின்னரும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) நீங்கள் மீளுவீர்கள்" என்றும் கூறுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௯)Tafseer
فَرِيْقًا هَدٰى وَفَرِيْقًا حَقَّ عَلَيْهِمُ الضَّلٰلَةُ ۗاِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطِيْنَ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ٣٠
- farīqan
- فَرِيقًا
- ஒரு பிரிவை
- hadā
- هَدَىٰ
- நேர்வழிப்படுத்தினான்
- wafarīqan
- وَفَرِيقًا
- இன்னும் ஒரு பிரிவு
- ḥaqqa
- حَقَّ
- உறுதியாகி விட்டது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- அதன் மீது
- l-ḍalālatu
- ٱلضَّلَٰلَةُۗ
- வழிகேடு
- innahumu
- إِنَّهُمُ
- நிச்சயமாக அவர்கள்
- ittakhadhū
- ٱتَّخَذُوا۟
- எடுத்துக் கொண்டனர்
- l-shayāṭīna
- ٱلشَّيَٰطِينَ
- ஷைத்தான்களை
- awliyāa
- أَوْلِيَآءَ
- தோழர்களாக
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- wayaḥsabūna
- وَيَحْسَبُونَ
- இன்னும் எண்ணுகின்றனர்
- annahum
- أَنَّهُم
- நிச்சயமாக தாங்கள்
- muh'tadūna
- مُّهْتَدُونَ
- நேர்வழி பெற்றவர்கள்
(உங்களில்) சிலரை அவன் நேரான வழியில் செலுத்தியிருக்க மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டதுதான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௦)Tafseer