குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௯
Qur'an Surah Al-A'raf Verse 29
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اَمَرَ رَبِّيْ بِالْقِسْطِۗ وَاَقِيْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۗ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَۗ (الأعراف : ٧)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- amara
- أَمَرَ
- "(Has been) ordered
- ஏவினான்
- rabbī
- رَبِّى
- "(by) my Lord
- என் இறைவன்
- bil-qis'ṭi
- بِٱلْقِسْطِۖ
- justice
- நீதத்தை
- wa-aqīmū
- وَأَقِيمُوا۟
- and set
- இன்னும் நிலைநிறுத்துங்கள்
- wujūhakum
- وُجُوهَكُمْ
- your faces
- உங்கள் முகங்களை
- ʿinda kulli
- عِندَ كُلِّ
- at every
- இடம்/எல்லாம்
- masjidin
- مَسْجِدٍ
- masjid
- மஸ்ஜிது
- wa-id'ʿūhu
- وَٱدْعُوهُ
- and invoke Him
- அழையுங்கள்/அவனை
- mukh'liṣīna lahu
- مُخْلِصِينَ لَهُ
- (being) sincere to Him
- தூய்மைப்படுத்தியவர்களாக/அவனுக்கு
- l-dīna
- ٱلدِّينَۚ
- (in) the religion
- வழிபடுவதை
- kamā bada-akum
- كَمَا بَدَأَكُمْ
- As He originated you
- போன்று/ஆரம்பமாக படைத்தான்/உங்களை
- taʿūdūna
- تَعُودُونَ
- (so) will you return"
- திரும்புவீர்கள்
Transliteration:
Qul amara Rabbee bilqisti wa aqeemoo wujoohakum 'inda kulli masjidin wad'oohu mukhliseena lahud deen; kamaa bada akum ta'oodoon(QS. al-ʾAʿrāf:29)
English Sahih International:
Say, [O Muhammad], "My Lord has ordered justice and that you direct yourselves [to the Qiblah] at every place [or time] of prostration, and invoke Him, sincere to Him in religion." Just as He originated you, you will return [to life] – (QS. Al-A'raf, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
அன்றி, "என் இறைவன் நீதத்தையே கட்டளை யிட்டிருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து) வெளியாக்கியது போல (இறந்த பின்னரும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) நீங்கள் மீளுவீர்கள்" என்றும் கூறுங்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௯)
Jan Trust Foundation
“என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: “என் இறைவன் நீதத்தை ஏவினான். எல்லா மஸ்ஜிதிலும் (வழிபாட்டில் அல்லாஹ்வை நோக்கி) உங்கள் முகங்களை நிறுத்துங்கள். வழிபடுவதை அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனை அழையுங்கள். அவன் உங்களை ஆரம்பமாக படைத்தது போன்று (அவனிடமே) திரும்புவீர்கள்.”