Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 17

Al-A'raf

(al-ʾAʿrāf)

௧௬௧

وَاِذْ قِيْلَ لَهُمُ اسْكُنُوْا هٰذِهِ الْقَرْيَةَ وَكُلُوْا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُوْلُوْا حِطَّةٌ وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِيْۤـٰٔتِكُمْۗ سَنَزِيْدُ الْمُحْسِنِيْنَ ١٦١

wa-idh qīla
وَإِذْ قِيلَ
சமயம்/கூறப்பட்டது
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
us'kunū
ٱسْكُنُوا۟
வசித்திருங்கள்
hādhihi l-qaryata
هَٰذِهِ ٱلْقَرْيَةَ
இவ்வூரில்
wakulū
وَكُلُوا۟
இன்னும் புசியுங்கள்
min'hā
مِنْهَا
அதில்
ḥaythu
حَيْثُ
இடத்தில்
shi'tum
شِئْتُمْ
நாடினீர்கள்
waqūlū
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
ḥiṭṭatun
حِطَّةٌ
நீங்கட்டும்
wa-ud'khulū
وَٱدْخُلُوا۟
இன்னும் நுழையுங்கள்
l-bāba
ٱلْبَابَ
வாசலில்
sujjadan
سُجَّدًا
சிரம் தாழ்த்தியவர்களாக
naghfir
نَّغْفِرْ
மன்னிப்போம்
lakum
لَكُمْ
உங்களுக்கு
khaṭīātikum
خَطِيٓـَٰٔتِكُمْۚ
பாவங்களை/உங்கள்
sanazīdu
سَنَزِيدُ
அதிகப்படுத்துவோம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோருக்கு
(அன்றி அவர்களை நோக்கி) "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி "ஹித்ததுன்" (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக!) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்து விடுவோம். நன்மை செய்பவர்களுக்கு பின்னும் அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு, ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬௧)
Tafseer
௧௬௨

فَبَدَّلَ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ قَوْلًا غَيْرَ الَّذِيْ قِيْلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِّنَ السَّمَاۤءِ بِمَا كَانُوْا يَظْلِمُوْنَ ࣖ ١٦٢

fabaddala
فَبَدَّلَ
மாற்றினர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
அநீதியிழைத்தனர்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
qawlan
قَوْلًا
ஒரு சொல்லாக
ghayra
غَيْرَ
அல்லாத
alladhī qīla
ٱلَّذِى قِيلَ
எது/கூறப்பட்டது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
fa-arsalnā
فَأَرْسَلْنَا
ஆகவே அனுப்பினோம் இறக்கினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
rij'zan
رِجْزًا
ஒரு வேதனையை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
bimā kānū
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்ததால்
yaẓlimūna
يَظْلِمُونَ
அநீதியிழைப்பவர்களாக
அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட ("ஹித்ததுன்" என்ப)தை மாற்றி ("ஹின்த்ததுன்" கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬௨)
Tafseer
௧௬௩

وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِيْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَأْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَۙ لَا تَأْتِيْهِمْ ۛ كَذٰلِكَ ۛنَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ ١٦٣

wasalhum
وَسْـَٔلْهُمْ
விசாரிப்பீராக/அவர்களிடம்
ʿani l-qaryati
عَنِ ٱلْقَرْيَةِ
ஊர் பற்றி
allatī
ٱلَّتِى
எது
kānat
كَانَتْ
இருந்தது
ḥāḍirata
حَاضِرَةَ
அருகில்
l-baḥri
ٱلْبَحْرِ
கடலுக்கு
idh
إِذْ
போது
yaʿdūna
يَعْدُونَ
வரம்பு மீறினார்கள்
fī l-sabti
فِى ٱلسَّبْتِ
சனிக்கிழமையில்
idh
إِذْ
போது
tatīhim
تَأْتِيهِمْ
வந்தன/அவர்களிடம்
ḥītānuhum
حِيتَانُهُمْ
மீன்கள்/அவர்களுடைய
yawma
يَوْمَ
கிழமையில்
sabtihim
سَبْتِهِمْ
அவர்களின் சனி
shurraʿan
شُرَّعًا
தலைகளை நீட்டியவையாக
wayawma
وَيَوْمَ
நாளில்
lā yasbitūna
لَا يَسْبِتُونَۙ
அவர்கள் சனிக்கிழமையில் இல்லாதவர்கள்
lā tatīhim
لَا تَأْتِيهِمْۚ
அவை வருவதில்லை/அவர்களிடம்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
nablūhum
نَبْلُوهُم
சோதித்தோம்/ அவர்களை
bimā kānū
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்த காரணத்தால்
yafsuqūna
يَفْسُقُونَ
பாவம் செய்வார்கள்
(நபியே) கடற்கரையிலிருந்த ஒரு ஊர் (மக்களைப்) பற்றி நீங்கள் அவர்களைக் கேளுங்கள். (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமை யன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬௩)
Tafseer
௧௬௪

وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمًاۙ ۨاللّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًاۗ قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ ١٦٤

wa-idh
وَإِذْ
போது
qālat
قَالَتْ
கூறியது
ummatun
أُمَّةٌ
ஒரு கூட்டம்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
lima
لِمَ
ஏன்
taʿiẓūna
تَعِظُونَ
உபதேசிக்கிறீர்கள்
qawman
قَوْمًاۙ
மக்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
muh'likuhum aw
مُهْلِكُهُمْ أَوْ
அவர்களை அழிப்பவனாக/அல்லது
muʿadhibuhum
مُعَذِّبُهُمْ
வேதனை செய்பவனாக/அவர்களை
ʿadhāban
عَذَابًا
வேதனையால்
shadīdan
شَدِيدًاۖ
கடுமையானது
qālū
قَالُوا۟
கூறினர்
maʿdhiratan
مَعْذِرَةً
புகல் கூறுவதற்காக
ilā rabbikum
إِلَىٰ رَبِّكُمْ
உங்கள் இறைவனிடம்
walaʿallahum yattaqūna
وَلَعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் அஞ்சுவதற்காக
(இதனை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதனைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (இவர்களை நோக்கி) "அல்லாஹ் எவர்களை அழித்துவிடவேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்" என்று கூறினார்கள். அதற்கவர்கள் "இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்" என்றும் பதில் கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬௪)
Tafseer
௧௬௫

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖٓ اَنْجَيْنَا الَّذِيْنَ يَنْهَوْنَ عَنِ السُّوْۤءِ وَاَخَذْنَا الَّذِيْنَ ظَلَمُوْا بِعَذَابٍۢ بَـِٔيْسٍۢ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ ١٦٥

falammā nasū
فَلَمَّا نَسُوا۟
போது/மறந்தனர்
مَا
எதை
dhukkirū
ذُكِّرُوا۟
நினைவூட்டப்பட்டனர், உபதேசிக்கப்பட்டனர்
bihi
بِهِۦٓ
அதைக் கொண்டு
anjaynā
أَنجَيْنَا
பாதுகாத்தோம்
alladhīna yanhawna
ٱلَّذِينَ يَنْهَوْنَ
தடுத்தவர்களை
ʿani l-sūi
عَنِ ٱلسُّوٓءِ
தீமையைவிட்டு
wa-akhadhnā
وَأَخَذْنَا
இன்னும் பிடித்தோம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
ẓalamū
ظَلَمُوا۟
அநீதியிழைத்தனர்
biʿadhābin
بِعَذَابٍۭ
வேதனையால்
baīsin
بَـِٔيسٍۭ
கடுமையான
bimā kānū
بِمَا كَانُوا۟
அவர்கள் இருந்த காரணத்தால்
yafsuqūna
يَفْسُقُونَ
பாவம் செய்வார்கள்
அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு) விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬௫)
Tafseer
௧௬௬

فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خَاسِـِٕيْنَ ١٦٦

falammā
فَلَمَّا
போது
ʿataw
عَتَوْا۟
மீறினர்
ʿan
عَن
எதைவிட்டு
mā nuhū
مَّا نُهُوا۟
தடுக்கப்பட்டனர்
ʿanhu
عَنْهُ
அதை விட்டு
qul'nā
قُلْنَا
கூறினோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
kūnū
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
qiradatan
قِرَدَةً
குரங்குகளாக
khāsiīna
خَٰسِـِٔينَ
அபாக்கியவான்களாக
ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்" என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬௬)
Tafseer
௧௬௭

وَاِذْ تَاَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ يَّسُوْمُهُمْ سُوْۤءَ الْعَذَابِۗ اِنَّ رَبَّكَ لَسَرِيْعُ الْعِقَابِۖ وَاِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِيْمٌ ١٦٧

wa-idh
وَإِذْ
சமயம்
ta-adhana
تَأَذَّنَ
அறிவித்தான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
layabʿathanna
لَيَبْعَثَنَّ
நிச்சயமாக அனுப்புவான்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ilā
إِلَىٰ
வரை
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள்
man
مَن
எவர்(கள்)
yasūmuhum
يَسُومُهُمْ
சிரமம் தருவார்(கள்)/அவர்களுக்கு
sūa
سُوٓءَ
கொடிய
l-ʿadhābi
ٱلْعَذَابِۗ
வேதனையால்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
lasarīʿu
لَسَرِيعُ
தீவிரமானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِۖ
தண்டிப்பதில்
wa-innahu
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்
laghafūrun
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளனே
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளனே
(நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக் கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரையில் நாம் செய்து வருவோம் என்று உங்களது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். நிச்சயமாக உங்களுடைய இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬௭)
Tafseer
௧௬௮

وَقَطَّعْنٰهُمْ فِى الْاَرْضِ اُمَمًاۚ مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَمِنْهُمْ دُوْنَ ذٰلِكَ ۖوَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّيِّاٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ١٦٨

waqaṭṭaʿnāhum
وَقَطَّعْنَٰهُمْ
இன்னும் பிரித்தோம்/அவர்களை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
umaman
أُمَمًاۖ
(பல) பிரிவுகளாக
min'humu
مِّنْهُمُ
அவர்களில்
l-ṣāliḥūna
ٱلصَّٰلِحُونَ
நல்லவர்கள்
wamin'hum
وَمِنْهُمْ
அவர்களில்
dūna dhālika
دُونَ ذَٰلِكَۖ
மற்றவர்கள்
wabalawnāhum
وَبَلَوْنَٰهُم
இன்னும் சோதித்தோம்/அவர்களை
bil-ḥasanāti
بِٱلْحَسَنَٰتِ
இன்பங்களைக் கொண்டு
wal-sayiāti
وَٱلسَّيِّـَٔاتِ
இன்னும் துன்பங்கள்
laʿallahum yarjiʿūna
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக
அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக சௌகரியங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬௮)
Tafseer
௧௬௯

فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ يَأْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰى وَيَقُوْلُوْنَ سَيُغْفَرُ لَنَاۚ وَاِنْ يَّأْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ يَأْخُذُوْهُۗ اَلَمْ يُؤْخَذْ عَلَيْهِمْ مِّيْثَاقُ الْكِتٰبِ اَنْ لَّا يَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَقَّ وَدَرَسُوْا مَا فِيْهِۗ وَالدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّلَّذِيْنَ يَتَّقُوْنَۗ اَفَلَا تَعْقِلُوْنَ ١٦٩

fakhalafa
فَخَلَفَ
பின்தோன்றினார்(கள்)
min baʿdihim
مِنۢ بَعْدِهِمْ
அவர்களுக்குப் பின்னர்
khalfun
خَلْفٌ
பின்னோர்
warithū
وَرِثُوا۟
வாரிசுகளாக ஆகினர்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்திற்கு
yakhudhūna
يَأْخُذُونَ
வாங்குகிறார்கள்
ʿaraḍa
عَرَضَ
பொருள்
hādhā l-adnā
هَٰذَا ٱلْأَدْنَىٰ
இந்த/அற்பமானது
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
sayugh'faru lanā
سَيُغْفَرُ لَنَا
மன்னிக்கப்படும்/எங்களுக்கு
wa-in yatihim
وَإِن يَأْتِهِمْ
இன்னும் வந்தால்/அவர்களுக்கு
ʿaraḍun
عَرَضٌ
பொருள்
mith'luhu
مِّثْلُهُۥ
இது போன்ற
yakhudhūhu
يَأْخُذُوهُۚ
வாங்குவார்கள்/அதை
alam yu'khadh
أَلَمْ يُؤْخَذْ
எடுக்கப்படவில்லையா?
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
mīthāqu
مِّيثَٰقُ
உறுதிமொழி
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
an lā yaqūlū
أَن لَّا يَقُولُوا۟
அவர்கள் கூறக்கூடாது
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
illā
إِلَّا
தவிர
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
wadarasū
وَدَرَسُوا۟
இன்னும் அவர்கள் படித்தனர்
mā fīhi
مَا فِيهِۗ
எதை/அதில்
wal-dāru
وَٱلدَّارُ
வீடு
l-ākhiratu
ٱلْءَاخِرَةُ
மறுமை
khayrun
خَيْرٌ
சிறந்தது
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
yattaqūna
يَتَّقُونَۗ
அஞ்சுகிறார்கள்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தாம்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். அன்றி, இக்குற்றத்தைப் பற்றி) "நாங்கள் மன்னிக்கப்படுவோம்" என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதனையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதனையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதனை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறை அச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா? ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬௯)
Tafseer
௧௭௦

وَالَّذِيْنَ يُمَسِّكُوْنَ بِالْكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَۗ اِنَّا لَا نُضِيْعُ اَجْرَ الْمُصْلِحِيْنَ ١٧٠

wa-alladhīna yumassikūna
وَٱلَّذِينَ يُمَسِّكُونَ
உறுதியாக பிடிப்பவர்கள்
bil-kitābi
بِٱلْكِتَٰبِ
வேதத்தை
wa-aqāmū
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
lā nuḍīʿu
لَا نُضِيعُ
வீணாக்க மாட்டோம்
ajra
أَجْرَ
கூலியை
l-muṣ'liḥīna
ٱلْمُصْلِحِينَ
சீர்திருத்தவாதிகளின்
எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகின்றார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭௦)
Tafseer