குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௬௮
Qur'an Surah Al-A'raf Verse 168
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَطَّعْنٰهُمْ فِى الْاَرْضِ اُمَمًاۚ مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَمِنْهُمْ دُوْنَ ذٰلِكَ ۖوَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّيِّاٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ (الأعراف : ٧)
- waqaṭṭaʿnāhum
- وَقَطَّعْنَٰهُمْ
- And We divided them
- இன்னும் பிரித்தோம்/அவர்களை
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- umaman
- أُمَمًاۖ
- (as) nations
- (பல) பிரிவுகளாக
- min'humu
- مِّنْهُمُ
- Among them
- அவர்களில்
- l-ṣāliḥūna
- ٱلصَّٰلِحُونَ
- (are) the righteous
- நல்லவர்கள்
- wamin'hum
- وَمِنْهُمْ
- and among them
- அவர்களில்
- dūna dhālika
- دُونَ ذَٰلِكَۖ
- (are) other than that
- மற்றவர்கள்
- wabalawnāhum
- وَبَلَوْنَٰهُم
- And We tested them
- இன்னும் சோதித்தோம்/அவர்களை
- bil-ḥasanāti
- بِٱلْحَسَنَٰتِ
- with the good
- இன்பங்களைக் கொண்டு
- wal-sayiāti
- وَٱلسَّيِّـَٔاتِ
- and the bad
- இன்னும் துன்பங்கள்
- laʿallahum yarjiʿūna
- لَعَلَّهُمْ يَرْجِعُونَ
- so that they may return
- அவர்கள் திரும்புவதற்காக
Transliteration:
Wa qatta'naahum fil ardi umamam minhumus aalihoona wa min hum doona zaalika wa balawnaahum bilhasanaati wassaiyi aati la'allahum yarji'oon(QS. al-ʾAʿrāf:168)
English Sahih International:
And We divided them throughout the earth into nations. Of them some were righteous, and of them some were otherwise. And We tested them with good [times] and bad that perhaps they would return [to obedience]. (QS. Al-A'raf, Ayah ௧௬௮)
Abdul Hameed Baqavi:
அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக சௌகரியங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௬௮)
Jan Trust Foundation
அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களை பூமியில் பல பிரிவுகளாகப் பிரித்தோம். அவர்களில் நல்லவர்கள் உண்டு; அவர்களில் மற்ற (பொல்லாத)வர்களும் உண்டு. அவர்கள் (சத்தியத்தின் பக்கம்) திரும்புவதற்காக இன்பங்கள் இன்னும் துன்பங்களைக் கொண்டு அவர்களைச் சோதித்(து வந்)தோம்.