Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௬௪

Qur'an Surah Al-A'raf Verse 164

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمًاۙ ۨاللّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًاۗ قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ (الأعراف : ٧)

wa-idh
وَإِذْ
And when
போது
qālat
قَالَتْ
said
கூறியது
ummatun
أُمَّةٌ
a community
ஒரு கூட்டம்
min'hum
مِّنْهُمْ
among them
அவர்களில்
lima
لِمَ
"Why
ஏன்
taʿiẓūna
تَعِظُونَ
(do) you preach
உபதேசிக்கிறீர்கள்
qawman
قَوْمًاۙ
a people
மக்களுக்கு
l-lahu
ٱللَّهُ
(whom) Allah
அல்லாஹ்
muh'likuhum aw
مُهْلِكُهُمْ أَوْ
(is going to) destroy them or
அவர்களை அழிப்பவனாக/அல்லது
muʿadhibuhum
مُعَذِّبُهُمْ
punish them
வேதனை செய்பவனாக/அவர்களை
ʿadhāban
عَذَابًا
(with) a punishment
வேதனையால்
shadīdan
شَدِيدًاۖ
severe?"
கடுமையானது
qālū
قَالُوا۟
They said
கூறினர்
maʿdhiratan
مَعْذِرَةً
"To be absolved
புகல் கூறுவதற்காக
ilā rabbikum
إِلَىٰ رَبِّكُمْ
before your Lord
உங்கள் இறைவனிடம்
walaʿallahum yattaqūna
وَلَعَلَّهُمْ يَتَّقُونَ
and that they may become righteous"
அவர்கள் அஞ்சுவதற்காக

Transliteration:

Wa iz qaalat ummatum minhum lima ta'izoona qaw manil laahu muhlikuhum aw mu'azzibuhum 'azaaban shadeedan qaaloo ma'ziratan ilaa Rabbikum wa la'allahum tattaqoon (QS. al-ʾAʿrāf:164)

English Sahih International:

And when a community among them said, "Why do you advise [or warn] a people whom Allah is [about] to destroy or to punish with a severe punishment?" they [the advisors] said, "To be absolved before your Lord and perhaps they may fear Him." (QS. Al-A'raf, Ayah ௧௬௪)

Abdul Hameed Baqavi:

(இதனை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதனைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (இவர்களை நோக்கி) "அல்லாஹ் எவர்களை அழித்துவிடவேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்" என்று கூறினார்கள். அதற்கவர்கள் "இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்" என்றும் பதில் கூறினார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௬௪)

Jan Trust Foundation

(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்)| “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் ஒரு கூட்டம் “அல்லாஹ் அவர்களை அழிப்பவனாக அல்லது கடுமையான வேதனையால் அவர்களை வேதனை செய்பவனாக உள்ள மக்களுக்கு (நீங்கள்) ஏன் உபதேசிக்கிறீர்கள்?” என்று கூறியபோது, “உங்கள் இறைவனிடம் புகல் கூறுவதற்காகவும், அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும் (அதிலிருந்து விலகுவதற்காகவும் அவர்களுக்கு உபதேசிக்கிறோம்)” என்று கூறினார்கள்.