Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௬௯

Qur'an Surah Al-A'raf Verse 169

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ يَأْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰى وَيَقُوْلُوْنَ سَيُغْفَرُ لَنَاۚ وَاِنْ يَّأْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ يَأْخُذُوْهُۗ اَلَمْ يُؤْخَذْ عَلَيْهِمْ مِّيْثَاقُ الْكِتٰبِ اَنْ لَّا يَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَقَّ وَدَرَسُوْا مَا فِيْهِۗ وَالدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّلَّذِيْنَ يَتَّقُوْنَۗ اَفَلَا تَعْقِلُوْنَ (الأعراف : ٧)

fakhalafa
فَخَلَفَ
Then succeeded
பின்தோன்றினார்(கள்)
min baʿdihim
مِنۢ بَعْدِهِمْ
from after them
அவர்களுக்குப் பின்னர்
khalfun
خَلْفٌ
successors
பின்னோர்
warithū
وَرِثُوا۟
(who) inherited
வாரிசுகளாக ஆகினர்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்திற்கு
yakhudhūna
يَأْخُذُونَ
taking
வாங்குகிறார்கள்
ʿaraḍa
عَرَضَ
goods
பொருள்
hādhā l-adnā
هَٰذَا ٱلْأَدْنَىٰ
(of) this the lower (life)
இந்த/அற்பமானது
wayaqūlūna
وَيَقُولُونَ
and they say
இன்னும் கூறுகின்றனர்
sayugh'faru lanā
سَيُغْفَرُ لَنَا
"It will be forgiven" "for us"
மன்னிக்கப்படும்/எங்களுக்கு
wa-in yatihim
وَإِن يَأْتِهِمْ
And if comes to them
இன்னும் வந்தால்/அவர்களுக்கு
ʿaraḍun
عَرَضٌ
goods
பொருள்
mith'luhu
مِّثْلُهُۥ
similar to it
இது போன்ற
yakhudhūhu
يَأْخُذُوهُۚ
they will take it
வாங்குவார்கள்/அதை
alam yu'khadh
أَلَمْ يُؤْخَذْ
Was not taken
எடுக்கப்படவில்லையா?
ʿalayhim
عَلَيْهِم
on them
அவர்கள் மீது
mīthāqu
مِّيثَٰقُ
Covenant
உறுதிமொழி
l-kitābi
ٱلْكِتَٰبِ
(of) the Book
வேதத்தின்
an lā yaqūlū
أَن لَّا يَقُولُوا۟
that not they will say
அவர்கள் கூறக்கூடாது
ʿalā
عَلَى
about
மீது
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
illā
إِلَّا
except
தவிர
l-ḥaqa
ٱلْحَقَّ
the truth
உண்மையை
wadarasū
وَدَرَسُوا۟
while they studied
இன்னும் அவர்கள் படித்தனர்
mā fīhi
مَا فِيهِۗ
what (is) in it?
எதை/அதில்
wal-dāru
وَٱلدَّارُ
And the home
வீடு
l-ākhiratu
ٱلْءَاخِرَةُ
(of) the Hereafter
மறுமை
khayrun
خَيْرٌ
(is) better
சிறந்தது
lilladhīna
لِّلَّذِينَ
for those who
எவர்களுக்கு
yattaqūna
يَتَّقُونَۗ
fear Allah
அஞ்சுகிறார்கள்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
So will not you use intellect?
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Transliteration:

Fakhalafa mim ba'dihim khalfunw warisul Kitaaba yaa khuzoona 'arada haazal adnaa wa yaqooloona sayughfaru lanaa wa iny yaatihim 'aradum misluhoo yaakhuzooh; alam yu'khaz 'alaihim 'aradum misluhoo yaakhuzooh; alam yu'khaz 'alaihim meesaaqul Kitaabi al laa yaqooloo 'alal laahi illal haqqa wa darasoo maa feeh; wad Daarul Aakhirtu khairul lillazeena yattaqoon; afalaa ta'qiloon (QS. al-ʾAʿrāf:169)

English Sahih International:

And there followed them successors who inherited the Scripture [while] taking the commodities of this lower life and saying, "It will be forgiven for us." And if an offer like it comes to them, they will [again] take it. Was not the covenant of the Scripture [i.e., the Torah] taken from them that they would not say about Allah except the truth, and they studied what was in it? And the home of the Hereafter is better for those who fear Allah, so will you not use reason? (QS. Al-A'raf, Ayah ௧௬௯)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தாம்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். அன்றி, இக்குற்றத்தைப் பற்றி) "நாங்கள் மன்னிக்கப்படுவோம்" என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதனையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதனையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதனை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறை அச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௬௯)

Jan Trust Foundation

அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்; இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). “எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்” என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், “அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதி மொழி வாங்கப் படவில்லையா?” (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்குப் பின்னர் சில பின்னோர் பின் தோன்றினார்கள். (அவர்கள்) வேதத்திற்கு வாரிசுகளாக ஆகினர். (வேத சட்டங்களை மாற்றி அதற்குப் பகரமாக) இந்த அற்பமான (உலகத்)தின் பொருளை வாங்குகிறார்கள். “எங்களுக்கு மன்னிக்கப்படும்” என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற (அற்ப) பொருள் அவர்களுக்கு இன்னும் வந்தால் அதையும் வாங்குவார்கள். அல்லாஹ் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் கூறக்கூடாது என்று அவர்கள் மீது வேதத்தின் உறுதிமொழி எடுக்கப்படவில்லையா? அதிலுள்ளதை (அவர்கள்) படித்து (அறிந்து)ள்ளனர். அல்லாஹ்வை அஞ்சு பவர்களுக்கு மறுமை வீடு சிறந்தது. நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?