Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 14

Al-A'raf

(al-ʾAʿrāf)

௧௩௧

فَاِذَا جَاۤءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَنَا هٰذِهٖ ۚوَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّطَّيَّرُوْا بِمُوْسٰى وَمَنْ مَّعَهٗۗ اَلَآ اِنَّمَا طٰۤىِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ ١٣١

fa-idhā jāathumu
فَإِذَا جَآءَتْهُمُ
அவர்களுக்குவந்தால்
l-ḥasanatu
ٱلْحَسَنَةُ
இன்பம்
qālū
قَالُوا۟
கூறுவார்கள்
lanā
لَنَا
எங்களுக்கு
hādhihi
هَٰذِهِۦۖ
இது
wa-in tuṣib'hum
وَإِن تُصِبْهُمْ
அவர்களை அடைந்தால்
sayyi-atun
سَيِّئَةٌ
ஒரு துன்பம்
yaṭṭayyarū
يَطَّيَّرُوا۟
துர்ச்சகுணமாக எண்ணுவார்கள்
bimūsā
بِمُوسَىٰ
மூஸாவையும்
waman
وَمَن
இன்னும் எவர்கள்
maʿahu
مَّعَهُۥٓۗ
அவருடன்
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
innamā
إِنَّمَا
எல்லாம்
ṭāiruhum
طَٰٓئِرُهُمْ
துர்ச்சகுணம்/அவர்களுடைய
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்தான்
walākinna aktharahum
وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ
எனினும்/அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
எனினும் அவர்களோ, அவர்களுக்கு (யாதொரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது) தான் வந்தது என்றும், யாதொரு தீங்கேற்படும் சமயத்தில் "(இது எங்களுக்கு வர வேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது" என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௧)
Tafseer
௧௩௨

وَقَالُوْا مَهْمَا تَأْتِنَا بِهٖ مِنْ اٰيَةٍ لِّتَسْحَرَنَا بِهَاۙ فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِيْنَ ١٣٢

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
mahmā
مَهْمَا
எவ்வளவோ
tatinā
تَأْتِنَا
எங்களிடம் வந்தாலும்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
min āyatin
مِنْ ءَايَةٍ
அத்தாட்சியை
litasḥaranā
لِّتَسْحَرَنَا
நீர் எங்களை ஏமாற்றுவதற்காக, திசை திருப்புவதற்காக
bihā
بِهَا
அதன் மூலம்
famā naḥnu
فَمَا نَحْنُ
நாங்கள் இல்லை
laka
لَكَ
உம்மை
bimu'minīna
بِمُؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களாக
அன்றி, அவர்கள் (மூஸாவை நோக்கி) "நீங்கள் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை நீங்கள் எங்கள் முன் செய்தபோதிலும் நாங்கள் உங்களை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறிவிட்டார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௨)
Tafseer
௧௩௩

فَاَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوْفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰيٰتٍ مُّفَصَّلٰتٍۗ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ ١٣٣

fa-arsalnā
فَأَرْسَلْنَا
ஆகவே அனுப்பினோம்
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-ṭūfāna
ٱلطُّوفَانَ
புயல் காற்றை
wal-jarāda
وَٱلْجَرَادَ
இன்னும் வெட்டுக்கிளிகளை
wal-qumala
وَٱلْقُمَّلَ
இன்னும் பேன்களை
wal-ḍafādiʿa
وَٱلضَّفَادِعَ
இன்னும் தவளைகளை
wal-dama
وَٱلدَّمَ
இன்னும் இரத்தத்தை
āyātin
ءَايَٰتٍ
அத்தாட்சிகளாக
mufaṣṣalātin
مُّفَصَّلَٰتٍ
தெளிவானவை
fa-is'takbarū
فَٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமையடித்தனர்
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
qawman
قَوْمًا
மக்களாக
muj'rimīna
مُّجْرِمِينَ
குற்றம் புரிகின்றவர்கள்
ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பி வைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௩)
Tafseer
௧௩௪

وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوْا يٰمُوْسَى ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَۚ لَىِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ۚ ١٣٤

walammā
وَلَمَّا
போது
waqaʿa
وَقَعَ
நிகழ்ந்தது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-rij'zu
ٱلرِّجْزُ
வேதனை
qālū
قَالُوا۟
கூறினர்
yāmūsā
يَٰمُوسَى
மூஸாவே!
ud'ʿu
ٱدْعُ
பிரார்த்திப்பீராக
lanā
لَنَا
எங்களுக்காக
rabbaka
رَبَّكَ
உம் இறைவனிடம்
bimā ʿahida
بِمَا عَهِدَ
அவன் வாக்குறுதி கொடுத்ததைக் கொண்டு
ʿindaka
عِندَكَۖ
உம்மிடம்
la-in kashafta
لَئِن كَشَفْتَ
நீர் நீக்கினால்
ʿannā
عَنَّا
எங்களை விட்டு
l-rij'za
ٱلرِّجْزَ
வேதனையை
lanu'minanna
لَنُؤْمِنَنَّ
நிச்சயமாக நம்பிக்கைகொள்வோம்
laka
لَكَ
உம்மை
walanur'silanna
وَلَنُرْسِلَنَّ
நிச்சயமாக அனுப்புவோம்
maʿaka
مَعَكَ
உம்முடன்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
அவர்கள் மீது (இவைகளில் யாதொரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) "மூஸாவே! உங்களுடைய இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உங்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இக்கஷ்டத்தை நீக்கும்படி) நமக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். நம்முடைய இக்கஷ்டத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உங்களை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உங்களுடன் அனுப்பி விடுகின்றோம்" என்று கூறுவார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௪)
Tafseer
௧௩௫

فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ اِلٰٓى اَجَلٍ هُمْ بَالِغُوْهُ اِذَا هُمْ يَنْكُثُوْنَ ١٣٥

falammā
فَلَمَّا
போது
kashafnā
كَشَفْنَا
நீக்கினோம்
ʿanhumu
عَنْهُمُ
அவர்களை விட்டு
l-rij'za
ٱلرِّجْزَ
வேதனையை
ilā
إِلَىٰٓ
வரை
ajalin
أَجَلٍ
ஒரு தவணை
hum
هُم
அவர்கள்
bālighūhu
بَٰلِغُوهُ
அடைபவர்கள்/அதை
idhā
إِذَا
அப்போது
hum
هُمْ
அவர்கள்
yankuthūna
يَنكُثُونَ
முறித்து விடுகின்றனர்
நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறு செய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும் வரையில் (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௫)
Tafseer
௧௩௬

فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِى الْيَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ ١٣٦

fa-intaqamnā
فَٱنتَقَمْنَا
ஆகவே பழி தீர்த்தோம்
min'hum
مِنْهُمْ
அவர்களிடம்
fa-aghraqnāhum
فَأَغْرَقْنَٰهُمْ
ஆகவே மூழ்கடித்தோம்/அவர்களை
fī l-yami
فِى ٱلْيَمِّ
கடலில்
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் அத்தாட்சிகளை
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
ʿanhā
عَنْهَا
அவற்றை விட்டு
ghāfilīna
غَٰفِلِينَ
கவனமற்றவர்களாக
ஆகவே, அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவைகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௬)
Tafseer
௧௩௭

وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِيْنَ كَانُوْا يُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِيْ بٰرَكْنَا فِيْهَاۗ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰى عَلٰى بَنِيْٓ اِسْرَاۤءِيْلَۙ بِمَا صَبَرُوْاۗ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا يَعْرِشُوْنَ ١٣٧

wa-awrathnā
وَأَوْرَثْنَا
வாரிசாக்கினோம்
l-qawma
ٱلْقَوْمَ
சமுதாயத்தை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தனா்
yus'taḍʿafūna
يُسْتَضْعَفُونَ
பலவீனமாகக் கருதப்படுவர்
mashāriqa
مَشَٰرِقَ
கிழக்குப்பகுதிகளுக்கு
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியின்
wamaghāribahā
وَمَغَٰرِبَهَا
இன்னும் மேற்குப் பகுதிகளுக்கு
allatī bāraknā
ٱلَّتِى بَٰرَكْنَا
எது/அருள் வளம் புரிந்தோம்
fīhā
فِيهَاۖ
அதில்
watammat
وَتَمَّتْ
இன்னும் முழுமையடைந்தது
kalimatu
كَلِمَتُ
வாக்கு
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰ
மிக அழகியது
ʿalā
عَلَىٰ
மீது
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்கள்
bimā ṣabarū
بِمَا صَبَرُوا۟ۖ
அவர்கள் பொறுத்ததால்
wadammarnā
وَدَمَّرْنَا
இன்னும் நாசப்படுத்தினோம்
مَا
எவற்றை
kāna
كَانَ
இருந்தான்
yaṣnaʿu
يَصْنَعُ
செய்வான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்னும்
waqawmuhu
وَقَوْمُهُۥ
இன்னும் அவனுடைய சமுதாயமும்
wamā kānū
وَمَا كَانُوا۟
இன்னும் எவற்றை/இருந்தனர்
yaʿrishūna
يَعْرِشُونَ
உயர்த்திக் கட்டுவார்கள்
ஆகவே, எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகம், மேற்குப் பாகம் ஆகிய அனைத்தையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்லவிதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௭)
Tafseer
௧௩௮

وَجَاوَزْنَا بِبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَتَوْا عَلٰى قَوْمٍ يَّعْكُفُوْنَ عَلٰٓى اَصْنَامٍ لَّهُمْ ۚقَالُوْا يٰمُوْسَى اجْعَلْ لَّنَآ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ۗقَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ١٣٨

wajāwaznā
وَجَٰوَزْنَا
கடக்க வைத்தோம்
bibanī is'rāīla
بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
l-baḥra
ٱلْبَحْرَ
கடலை
fa-ataw
فَأَتَوْا۟
வந்தனர்
ʿalā
عَلَىٰ
அருகில்
qawmin
قَوْمٍ
ஒரு சமுதாயத்தின்
yaʿkufūna
يَعْكُفُونَ
வழிபாட்டுக்காக தங்கியிருக்கின்றனர்
ʿalā aṣnāmin
عَلَىٰٓ أَصْنَامٍ
சிலைகளுக்கருகில்
lahum
لَّهُمْۚ
தங்கள்
qālū
قَالُوا۟
கூறினர்
yāmūsā
يَٰمُوسَى
மூஸாவே!
ij'ʿal
ٱجْعَل
ஏற்படுத்து
lanā
لَّنَآ
எங்களுக்கு
ilāhan
إِلَٰهًا
வணங்கப்படும் ஒரு கடவுளை
kamā
كَمَا
போல்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ālihatun
ءَالِهَةٌۚ
வணங்கப்படும் கடவுள்கள்
qāla
قَالَ
கூறினார்
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
qawmun
قَوْمٌ
சமுதாயம்
tajhalūna
تَجْهَلُونَ
அறியமாட்டீர்கள்
நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதனைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வையுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௮)
Tafseer
௧௩௯

اِنَّ هٰٓؤُلَاۤءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِيْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ ١٣٩

inna
إِنَّ
நிச்சயமாக
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
mutabbarun
مُتَبَّرٌ
அழிக்கப்படக் கூடியது
مَّا
எது
hum
هُمْ
அவர்கள்
fīhi
فِيهِ
அதில்
wabāṭilun
وَبَٰطِلٌ
இன்னும் பொய்
مَّا
எவை
kānū
كَانُوا۟
இருக்கின்றனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
(அன்றி, சிலையை வணங்கும் மக்களைச் சுட்டிக் காண்பித்து) "நிச்சயமாக இந்த மக்களிருக்கும் மார்க்கம் அழிந்துவிடக் கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது" என்றும் கூறினார்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩௯)
Tafseer
௧௪௦

قَالَ اَغَيْرَ اللّٰهِ اَبْغِيْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَكُمْ عَلَى الْعٰلَمِيْنَ ١٤٠

qāla
قَالَ
கூறினார்
aghayra
أَغَيْرَ
அல்லாததையா?
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
abghīkum
أَبْغِيكُمْ
தேடுவேன்/ உங்களுக்கு
ilāhan
إِلَٰهًا
வணங்கப்படும் ஒரு கடவுளாக
wahuwa
وَهُوَ
அவனோ
faḍḍalakum
فَضَّلَكُمْ
மேன்மைப்படுத்தினான்/உங்களை
ʿalā l-ʿālamīna
عَلَى ٱلْعَٰلَمِينَ
உலகத்தார்களைப் பார்க்கிலும்
(தவிர) "அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கி வைப்பேன்? அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்" என்றும் அவர் கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪௦)
Tafseer