Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௩௧

Qur'an Surah Al-A'raf Verse 131

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا جَاۤءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَنَا هٰذِهٖ ۚوَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّطَّيَّرُوْا بِمُوْسٰى وَمَنْ مَّعَهٗۗ اَلَآ اِنَّمَا طٰۤىِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ (الأعراف : ٧)

fa-idhā jāathumu
فَإِذَا جَآءَتْهُمُ
But when came to them
அவர்களுக்குவந்தால்
l-ḥasanatu
ٱلْحَسَنَةُ
the good
இன்பம்
qālū
قَالُوا۟
they said
கூறுவார்கள்
lanā
لَنَا
"For us"
எங்களுக்கு
hādhihi
هَٰذِهِۦۖ
"(is) this"
இது
wa-in tuṣib'hum
وَإِن تُصِبْهُمْ
And if afflicts them
அவர்களை அடைந்தால்
sayyi-atun
سَيِّئَةٌ
bad
ஒரு துன்பம்
yaṭṭayyarū
يَطَّيَّرُوا۟
they ascribe evil omens
துர்ச்சகுணமாக எண்ணுவார்கள்
bimūsā
بِمُوسَىٰ
to Musa
மூஸாவையும்
waman
وَمَن
and who
இன்னும் எவர்கள்
maʿahu
مَّعَهُۥٓۗ
(were) with him
அவருடன்
alā
أَلَآ
Behold!
அறிந்துகொள்ளுங்கள்!
innamā
إِنَّمَا
Only
எல்லாம்
ṭāiruhum
طَٰٓئِرُهُمْ
their evil omens
துர்ச்சகுணம்/அவர்களுடைய
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
(are) with Allah
அல்லாஹ்விடம்தான்
walākinna aktharahum
وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ
but most of them
எனினும்/அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்

Transliteration:

Fa izaa jaaa'at humul hasanatu qaaloo lanaa haazihee wa in tusibhum saiyi'atuny yattaiyaroo bi Moosaa wa mam ma'ah; alaaa innamaa taaa'iruhum 'indal laahi wa laakinna aksarahum laa ya'lamoon (QS. al-ʾAʿrāf:131)

English Sahih International:

But when good [i.e., provision] came to them, they said, "This is ours [by right]." And if a bad [condition] struck them, they saw an evil omen in Moses and those with him. Unquestionably, their fortune is with Allah, but most of them do not know. (QS. Al-A'raf, Ayah ௧௩௧)

Abdul Hameed Baqavi:

எனினும் அவர்களோ, அவர்களுக்கு (யாதொரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது) தான் வந்தது என்றும், யாதொரு தீங்கேற்படும் சமயத்தில் "(இது எங்களுக்கு வர வேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது" என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௩௧)

Jan Trust Foundation

அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், “அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்” என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்| அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு இன்பம் வந்தால் இது எங்களுக்கு (வரவேண்டியதுதான்) என்று கூறுவார்கள். ஒரு துன்பம் அவர்களை அடைந்தால் “மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் துர்ச்சகுணமாக எண்ணுவார்கள்” அறிந்து கொள்ளுங்கள் அவர்களுடைய துர்ச்சகுணமெல்லாம் அல்லாஹ்விடம்தான் உள்ளது. (நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துதான்.) எனினும் அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.