Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௩௩

Qur'an Surah Al-A'raf Verse 133

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوْفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰيٰتٍ مُّفَصَّلٰتٍۗ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ (الأعراف : ٧)

fa-arsalnā
فَأَرْسَلْنَا
So We sent
ஆகவே அனுப்பினோம்
ʿalayhimu
عَلَيْهِمُ
on them
அவர்கள் மீது
l-ṭūfāna
ٱلطُّوفَانَ
the flood
புயல் காற்றை
wal-jarāda
وَٱلْجَرَادَ
and the locusts
இன்னும் வெட்டுக்கிளிகளை
wal-qumala
وَٱلْقُمَّلَ
and the lice
இன்னும் பேன்களை
wal-ḍafādiʿa
وَٱلضَّفَادِعَ
and the frogs
இன்னும் தவளைகளை
wal-dama
وَٱلدَّمَ
and the blood
இன்னும் இரத்தத்தை
āyātin
ءَايَٰتٍ
(as) signs
அத்தாட்சிகளாக
mufaṣṣalātin
مُّفَصَّلَٰتٍ
manifest
தெளிவானவை
fa-is'takbarū
فَٱسْتَكْبَرُوا۟
but they showed arrogance
அவர்கள் பெருமையடித்தனர்
wakānū
وَكَانُوا۟
and they were
இன்னும் இருந்தனர்
qawman
قَوْمًا
a people
மக்களாக
muj'rimīna
مُّجْرِمِينَ
criminal
குற்றம் புரிகின்றவர்கள்

Transliteration:

Fa arsalnaa 'alaihimut toofaana waljaraada walqum mala waddafaadi'a waddama Aayaatim mufassalaatin fastakbaroo wa kaanoo qawmam mujrimeen (QS. al-ʾAʿrāf:133)

English Sahih International:

So We sent upon them the flood and locusts and lice and frogs and blood as distinct signs, but they were arrogant and were a criminal people. (QS. Al-A'raf, Ayah ௧௩௩)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பி வைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௩௩)

Jan Trust Foundation

ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர்கள் மீது புயல் காற்றை, வெட்டுக்கிளிகளை, பேன்களை, தவளைகளை, இரத்தத்தை தெளிவான அத்தாட்சிகளாக அனுப்பினோம். அவர்கள் பெருமையடித்(து புறக்கணித்)தனர். குற்றம் புரிகின்ற மக்களாக இருந்தனர்.