وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً ۗحَتّٰٓى اِذَا جَاۤءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ ٦١
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-qāhiru
- ٱلْقَاهِرُ
- ஆதிக்கமுள்ளவன்
- fawqa
- فَوْقَ
- மேல்
- ʿibādihi
- عِبَادِهِۦۖ
- தன் அடியார்கள்
- wayur'silu
- وَيُرْسِلُ
- இன்னும் அனுப்புகிறான்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- ḥafaẓatan
- حَفَظَةً
- காவலர்களை
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā jāa
- إِذَا جَآءَ
- வந்தால்
- aḥadakumu
- أَحَدَكُمُ
- உங்களில் ஒருவருக்கு
- l-mawtu
- ٱلْمَوْتُ
- மரணம்
- tawaffathu
- تَوَفَّتْهُ
- கைப்பற்றுகின்றனர்/ அவரை
- rusulunā
- رُسُلُنَا
- நம் தூதர்கள்
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- lā yufarriṭūna
- لَا يُفَرِّطُونَ
- குறைவு செய்யமாட்டார்கள்
அவன் தன் அடியார்களை அடக்கியே ஆளுகின்றான்; அன்றி உங்களுக்குப் பாதுகாப்பாளர்களையும் ஏற்படுத்துகின்றான். அவர்கள் உங்களில் ஒவ்வொருவரையும் மரண (கால)ம் வரும் வரையில் பாதுகாத்து, பின்னர் அவரை இறக்கச் செய்கின்றனர்.அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௧)Tafseer
ثُمَّ رُدُّوْٓا اِلَى اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّۗ اَلَا لَهُ الْحُكْمُ وَهُوَ اَسْرَعُ الْحَاسِبِيْنَ ٦٢
- thumma
- ثُمَّ
- பிறகு
- ruddū
- رُدُّوٓا۟
- திருப்பப்படுவார்கள்
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- mawlāhumu
- مَوْلَىٰهُمُ
- அவர்களின் எஜமான்
- l-ḥaqi
- ٱلْحَقِّۚ
- உண்மையானவன்
- alā
- أَلَا
- அறிந்துகொள்ளுங்கள்!
- lahu
- لَهُ
- அவனுக்கே
- l-ḥuk'mu
- ٱلْحُكْمُ
- அதிகாரம்
- wahuwa
- وَهُوَ
- அவன்
- asraʿu
- أَسْرَعُ
- மிகத் தீவிரமானவன்
- l-ḥāsibīna
- ٱلْحَٰسِبِينَ
- கணக்கிடுபவர்களில்
(இதன்) பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடமே கொண்டு வரப்படுவார்கள். (அந்நேரத்தில்) தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும். அன்றி அவன் கணக்கைத் தீர்ப்பதிலும் மிகத் தீவிரமானவன். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௨)Tafseer
قُلْ مَنْ يُّنَجِّيْكُمْ مِّنْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُوْنَهٗ تَضَرُّعًا وَّخُفْيَةً ۚ لَىِٕنْ اَنْجٰىنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ ٦٣
- qul
- قُلْ
- கூறுவீராக
- man
- مَن
- யார்
- yunajjīkum
- يُنَجِّيكُم
- பாதுகாப்பவன்/உங்களை
- min ẓulumāti
- مِّن ظُلُمَٰتِ
- இருள்களில்
- l-bari
- ٱلْبَرِّ
- தரை
- wal-baḥri
- وَٱلْبَحْرِ
- இன்னும் கடல்
- tadʿūnahu
- تَدْعُونَهُۥ
- பிரார்த்திக்கிறீர்கள்/அவனிடம்
- taḍarruʿan
- تَضَرُّعًا
- பணிவாக
- wakhuf'yatan
- وَخُفْيَةً
- இன்னும் மறைவாக
- la-in anjānā
- لَّئِنْ أَنجَىٰنَا
- பாதுகாத்தால்/எங்களை
- min
- مِنْ
- இருந்து
- hādhihi
- هَٰذِهِۦ
- இதில்
- lanakūnanna
- لَنَكُونَنَّ
- நிச்சயம் ஆகிவிடுவோம்
- mina l-shākirīna
- مِنَ ٱلشَّٰكِرِينَ
- நன்றியாளர்களில்
நீங்கள் "தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் சிக்கி (மிக கஷ்டத்திற்குள்ளாகிவிட்ட சமயத்தில்) எங்களை இதிலிருந்து பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர் களாகி விடுவோம் என்று மறைவாகவும், பணிவாகவும் நீங்கள் பிரார்த்திக்கும் சமயத்தில் உங்களை பாதுகாப்பவன் யார்?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேட்டு, ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௩)Tafseer
قُلِ اللّٰهُ يُنَجِّيْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْتُمْ تُشْرِكُوْنَ ٦٤
- quli
- قُلِ
- கூறுவீராக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- yunajjīkum
- يُنَجِّيكُم
- பாதுகாக்கிறான்/உங்களை
- min'hā
- مِّنْهَا
- இதிலிருந்து
- wamin
- وَمِن
- இன்னும் இருந்து
- kulli
- كُلِّ
- எல்லா
- karbin
- كَرْبٍ
- கஷ்டம்
- thumma
- ثُمَّ
- பிறகு
- antum
- أَنتُمْ
- நீங்கள்
- tush'rikūna
- تُشْرِكُونَ
- இணைவைக்கிறீர்கள்
"இதிலிருந்தும் மற்ற கஷ்டங்களிலிருந்தும் உங்களை பாதுகாப்பவன் அல்லாஹ்தான். (இவ்வாறிருந்தும்) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே!" என்று நீங்கள் கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௪)Tafseer
قُلْ هُوَ الْقَادِرُ عَلٰٓى اَنْ يَّبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ اَوْ مِنْ تَحْتِ اَرْجُلِكُمْ اَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَّيُذِيْقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍۗ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُوْنَ ٦٥
- qul
- قُلْ
- கூறுவீராக
- huwa
- هُوَ
- அவன்தான்
- l-qādiru
- ٱلْقَادِرُ
- சக்தியுள்ளவன்
- ʿalā
- عَلَىٰٓ
- மீது
- an yabʿatha
- أَن يَبْعَثَ
- அனுப்புவதற்கு
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- ʿadhāban
- عَذَابًا
- வேதனையை
- min
- مِّن
- இருந்து
- fawqikum
- فَوْقِكُمْ
- உங்களுக்கு மேல்
- aw
- أَوْ
- அல்லது
- min
- مِن
- இருந்து
- taḥti
- تَحْتِ
- கீழ்
- arjulikum
- أَرْجُلِكُمْ
- உங்கள் கால்கள்
- aw
- أَوْ
- அல்லது
- yalbisakum
- يَلْبِسَكُمْ
- கலந்து/உங்களை
- shiyaʿan
- شِيَعًا
- (பல) பிரிவுகளாக
- wayudhīqa
- وَيُذِيقَ
- இன்னும் சுவைக்க வைப்பதற்கும்
- baʿḍakum
- بَعْضَكُم
- உங்களில் சிலருக்கு
- basa
- بَأْسَ
- ஆற்றலை
- baʿḍin
- بَعْضٍۗ
- சிலருடைய
- unẓur
- ٱنظُرْ
- கவனிப்பீராக
- kayfa
- كَيْفَ
- எவ்வாறு
- nuṣarrifu
- نُصَرِّفُ
- விவரிக்கிறோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- வசனங்களை
- laʿallahum yafqahūna
- لَعَلَّهُمْ يَفْقَهُونَ
- அவர்கள் விளங்குவதற்காக
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு (யாதொரு) வேதனை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர் சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள் அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கின்றான்." அவர்கள் விளங்கிக்கொள்வதற்காக நாம் (நம்முடைய) வசனங்களை எவ்வாறு பல வகைகளில் (தெளிவு படுத்திக்) கூறுகின்றோம் என்று நீங்கள் கவனியுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௫)Tafseer
وَكَذَّبَ بِهٖ قَوْمُكَ وَهُوَ الْحَقُّۗ قُلْ لَّسْتُ عَلَيْكُمْ بِوَكِيْلٍ ۗ ٦٦
- wakadhaba bihi
- وَكَذَّبَ بِهِۦ
- பொய்ப்பித்தனர்/இதை
- qawmuka
- قَوْمُكَ
- உம் சமுதாயம்
- wahuwa
- وَهُوَ
- இதுதான்
- l-ḥaqu
- ٱلْحَقُّۚ
- உண்மை
- qul
- قُل
- கூறுவீராக
- lastu
- لَّسْتُ
- நானில்லை
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்கள் மீது
- biwakīlin
- بِوَكِيلٍ
- பொறுப்பாளனாக
(நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாயிருந்தும், உங்களுடைய மக்கள் இதனையும் பொய்யாக்குகின்றனர். ஆகவே (அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நான் உங்களுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனல்ல." ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௬)Tafseer
لِكُلِّ نَبَاٍ مُّسْتَقَرٌّ وَّسَوْفَ تَعْلَمُوْنَ ٦٧
- likulli
- لِّكُلِّ
- ஒவ்வொரு
- naba-in
- نَبَإٍ
- செய்தி
- mus'taqarrun
- مُّسْتَقَرٌّۚ
- நிகழும் நேரமுண்டு
- wasawfa taʿlamūna
- وَسَوْفَ تَعْلَمُونَ
- அறியத்தான் போகிறீர்கள்
ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. (நான் சொல்வதன் உண்மையை) பின்னர் (வேதனை வரும்போது) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௭)Tafseer
وَاِذَا رَاَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِيْٓ اٰيٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِيْ حَدِيْثٍ غَيْرِهٖۗ وَاِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ ٦٨
- wa-idhā ra-ayta
- وَإِذَا رَأَيْتَ
- நீர் கண்டால்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- yakhūḍūna
- يَخُوضُونَ
- மூழ்குகிறார்கள்
- fī āyātinā
- فِىٓ ءَايَٰتِنَا
- நம் வசனங்களில்
- fa-aʿriḍ
- فَأَعْرِضْ
- புறக்கணிப்பீராக
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களை
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- yakhūḍū
- يَخُوضُوا۟
- மூழ்குவார்கள்
- fī ḥadīthin
- فِى حَدِيثٍ
- பேச்சில்
- ghayrihi
- غَيْرِهِۦۚ
- அது அல்லாத
- wa-immā yunsiyannaka
- وَإِمَّا يُنسِيَنَّكَ
- மறக்கடித்தால்/உம்மை
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- falā taqʿud
- فَلَا تَقْعُدْ
- அமராதீர்
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- l-dhik'rā
- ٱلذِّكْرَىٰ
- நினைவு
- maʿa
- مَعَ
- உடன்
- l-qawmi
- ٱلْقَوْمِ
- கூட்டம்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்கிப் போவோர்களை நீங்கள் கண்டால், அவர்கள் அதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரையில் நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (இக்கட்டளையை) ஷைத்தான் உங்களுக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீங்களும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் அமர்ந்திருக்க வேண்டாம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௮)Tafseer
وَمَا عَلَى الَّذِيْنَ يَتَّقُوْنَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَيْءٍ وَّلٰكِنْ ذِكْرٰى لَعَلَّهُمْ يَتَّقُوْنَ ٦٩
- wamā
- وَمَا
- இல்லை
- ʿalā
- عَلَى
- மீது
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yattaqūna
- يَتَّقُونَ
- அஞ்சுகிறார்கள்
- min
- مِنْ
- இருந்து
- ḥisābihim
- حِسَابِهِم
- அவர்களுடைய கணக்கு
- min shayin
- مِّن شَىْءٍ
- எதுவும்
- walākin
- وَلَٰكِن
- எனினும்
- dhik'rā
- ذِكْرَىٰ
- உபதேசித்தல்
- laʿallahum yattaqūna
- لَعَلَّهُمْ يَتَّقُونَ
- அவர்கள் தவிர்ந்து கொள்வதற்காக
(வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து யாதொன்றும் இறை அச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதனைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௯)Tafseer
وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَذَكِّرْ بِهٖٓ اَنْ تُبْسَلَ نَفْسٌۢ بِمَا كَسَبَتْۖ لَيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِيٌّ وَّلَا شَفِيْعٌ ۚوَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَاۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ ۢبِمَا كَانُوْا يَكْفُرُوْنَ ࣖ ٧٠
- wadhari
- وَذَرِ
- விடுவீராக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- ittakhadhū
- ٱتَّخَذُوا۟
- எடுத்துக் கொண்டனர்
- dīnahum
- دِينَهُمْ
- தங்கள் மார்க்கத்தை
- laʿiban
- لَعِبًا
- விளையாட்டாக
- walahwan
- وَلَهْوًا
- இன்னும் கேளிக்கையாக
- wagharrathumu
- وَغَرَّتْهُمُ
- இன்னும் மயக்கியது/அவர்களை
- l-ḥayatu
- ٱلْحَيَوٰةُ
- வாழ்க்கை
- l-dun'yā
- ٱلدُّنْيَاۚ
- உலகம்
- wadhakkir
- وَذَكِّرْ
- இன்னும் நினைவூட்டுவீராக
- bihi
- بِهِۦٓ
- இதன் மூலம்
- an tub'sala
- أَن تُبْسَلَ
- ஆபத்திற்குள்ளாகும்
- nafsun
- نَفْسٌۢ
- ஓர் ஆன்மா
- bimā
- بِمَا
- எதன் காரணமாக
- kasabat
- كَسَبَتْ
- செய்தது
- laysa
- لَيْسَ
- இருக்க மாட்டார்
- lahā
- لَهَا
- அதற்கு
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வைத் தவிர
- waliyyun
- وَلِىٌّ
- பாதுகாவலர்
- walā
- وَلَا
- இன்னும் இல்லை
- shafīʿun
- شَفِيعٌ
- பரிந்துரையாளர்
- wa-in taʿdil
- وَإِن تَعْدِلْ
- அது ஈடுகொடுத்தால்
- kulla ʿadlin
- كُلَّ عَدْلٍ
- எவ்வளவு ஈடு
- lā yu'khadh
- لَّا يُؤْخَذْ
- ஏற்கப்படாது
- min'hā
- مِنْهَآۗ
- அதனிடமிருந்து
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ub'silū
- أُبْسِلُوا۟
- ஆபத்திற்குள்ளாக்கப் பட்டனர்
- bimā kasabū
- بِمَا كَسَبُوا۟ۖ
- எதன் காரணமாக/செய்தனர்
- lahum
- لَهُمْ
- இவர்களுக்கு
- sharābun
- شَرَابٌ
- குடிபானமும்
- min ḥamīmin
- مِّنْ حَمِيمٍ
- இருந்து/கொதி நீர்
- waʿadhābun
- وَعَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌۢ
- துன்புறுத்தக்கூடியது
- bimā
- بِمَا
- எதன் காரணமாக
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- yakfurūna
- يَكْفُرُونَ
- நிராகரிக்கிறார்கள்
(நபியே!) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டு விடுங்கள். எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள். (அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்க மாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௦)Tafseer