குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௬௮
Qur'an Surah Al-An'am Verse 68
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا رَاَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِيْٓ اٰيٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِيْ حَدِيْثٍ غَيْرِهٖۗ وَاِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ (الأنعام : ٦)
- wa-idhā ra-ayta
- وَإِذَا رَأَيْتَ
- And when you see
- நீர் கண்டால்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்களை
- yakhūḍūna
- يَخُوضُونَ
- engage (in vain talks)
- மூழ்குகிறார்கள்
- fī āyātinā
- فِىٓ ءَايَٰتِنَا
- about Our Verses
- நம் வசனங்களில்
- fa-aʿriḍ
- فَأَعْرِضْ
- then turn away
- புறக்கணிப்பீராக
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- அவர்களை
- ḥattā
- حَتَّىٰ
- until
- வரை
- yakhūḍū
- يَخُوضُوا۟
- they engage
- மூழ்குவார்கள்
- fī ḥadīthin
- فِى حَدِيثٍ
- in a talk
- பேச்சில்
- ghayrihi
- غَيْرِهِۦۚ
- other than it
- அது அல்லாத
- wa-immā yunsiyannaka
- وَإِمَّا يُنسِيَنَّكَ
- And if causes you to forget
- மறக்கடித்தால்/உம்மை
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- the Shaitaan
- ஷைத்தான்
- falā taqʿud
- فَلَا تَقْعُدْ
- then (do) not sit
- அமராதீர்
- baʿda
- بَعْدَ
- after
- பின்னர்
- l-dhik'rā
- ٱلذِّكْرَىٰ
- the reminder
- நினைவு
- maʿa
- مَعَ
- with
- உடன்
- l-qawmi
- ٱلْقَوْمِ
- the people -
- கூட்டம்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Wa izaa ra aital lazeena yakhoodoona feee Aayaatinaa fa a'rid 'anhum hattaa yakkhoodoo fee hadeesin ghairih; wa immaa yunsiyannakash Shaitaanu falaa taq'ud ba'dazzikraa ma'al qawmiz zaalimeen(QS. al-ʾAnʿām:68)
English Sahih International:
And when you see those who engage in [offensive] discourse concerning Our verses, then turn away from them until they enter into another conversation. And if Satan should cause you to forget, then do not remain after the reminder with the wrongdoing people. (QS. Al-An'am, Ayah ௬௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்கிப் போவோர்களை நீங்கள் கண்டால், அவர்கள் அதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரையில் நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (இக்கட்டளையை) ஷைத்தான் உங்களுக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீங்களும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் அமர்ந்திருக்க வேண்டாம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௬௮)
Jan Trust Foundation
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நம் வசனங்களில் (அவற்றை பரிகசித்து) மூழ்குபவர்களைக்கண்டால், அவர்கள் அது அல்லாத (வேறு) பேச்சில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக. ஷைத்தான் உம்மை மறக்கடித்தால், நினைவுக்குப் பின்னர் அநியாயக்கார கூட்டத்துடன் அமராதீர்.