Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 2

An-Nisa

(an-Nisāʾ)

௧௧

يُوْصِيْكُمُ اللّٰهُ فِيْٓ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَاۤءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ۗ وَلِاَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗٓ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ فَاِنْ كَانَ لَهٗٓ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْ بِهَآ اَوْ دَيْنٍ ۗ اٰبَاۤؤُكُمْ وَاَبْنَاۤؤُكُمْۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ۗ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ١١

yūṣīkumu
يُوصِيكُمُ
உங்களுக்கு உபதேசிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī awlādikum
فِىٓ أَوْلَٰدِكُمْۖ
பிள்ளைகளில் /உங்கள்
lildhakari
لِلذَّكَرِ
ஆணுக்கு
mith'lu
مِثْلُ
போன்று
ḥaẓẓi l-unthayayni
حَظِّ ٱلْأُنثَيَيْنِۚ
பங்கு/இருபெண்கள்
fa-in kunna
فَإِن كُنَّ
அவர்கள் இருந்தால்
nisāan
نِسَآءً
பெண்களாக
fawqa
فَوْقَ
மேல்
ith'natayni
ٱثْنَتَيْنِ
இரு பெண்கள்
falahunna
فَلَهُنَّ
அவர்களுக்கு உண்டு
thuluthā
ثُلُثَا
மூன்றில் இரண்டு
mā taraka
مَا تَرَكَۖ
எது/விட்டுச் சென்றார்
wa-in kānat
وَإِن كَانَتْ
இருந்தால்
wāḥidatan
وَٰحِدَةً
ஒருத்தியாக
falahā
فَلَهَا
அவளுக்கு
l-niṣ'fu
ٱلنِّصْفُۚ
பாதி
wali-abawayhi
وَلِأَبَوَيْهِ
இன்னும் அவருடைய தாய் தந்தைக்கு
likulli wāḥidin
لِكُلِّ وَٰحِدٍ
ஒவ்வொருவருக்கும்
min'humā
مِّنْهُمَا
அவ்விருவரிலிருந்து
l-sudusu
ٱلسُّدُسُ
ஆறில் ஒன்று
mimmā
مِمَّا
எதிலிருந்து
taraka
تَرَكَ
விட்டுச் சென்றார்
in kāna
إِن كَانَ
இருந்தால்
lahu
لَهُۥ
அவருக்கு
waladun
وَلَدٌۚ
பிள்ளை
fa-in lam yakun
فَإِن لَّمْ يَكُن
இல்லையெனில்
lahu
لَّهُۥ
அவருக்கு
waladun
وَلَدٌ
பிள்ளை
wawarithahu
وَوَرِثَهُۥٓ
இன்னும் அவருக்கு வாரிசானார்
abawāhu
أَبَوَاهُ
அவருடைய தாய் தந்தை
fali-ummihi
فَلِأُمِّهِ
அவருடைய தாய்க்கு
l-thuluthu
ٱلثُّلُثُۚ
மூன்றில் ஒன்று
fa-in kāna
فَإِن كَانَ
இருந்தால்
lahu
لَهُۥٓ
அவருக்கு
ikh'watun
إِخْوَةٌ
சகோதரர்கள்
fali-ummihi
فَلِأُمِّهِ
அவருடைய தாய்க்கு
l-sudusu
ٱلسُّدُسُۚ
ஆறில் ஒன்று
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
waṣiyyatin
وَصِيَّةٍ
மரண சாசனம்
yūṣī
يُوصِى
மரண சாசனம் கூறுகிறார்
bihā
بِهَآ
அதை
aw daynin
أَوْ دَيْنٍۗ
அல்லது கடன்
ābāukum
ءَابَآؤُكُمْ
உங்கள் தந்தைகள்
wa-abnāukum
وَأَبْنَآؤُكُمْ
பிள்ளைகள்/உங்கள்
lā tadrūna
لَا تَدْرُونَ
அறியமாட்டீர்கள்
ayyuhum
أَيُّهُمْ
அவர்களில் யார்
aqrabu
أَقْرَبُ
நெருங்கியவர்
lakum
لَكُمْ
உங்களுக்கு
nafʿan
نَفْعًاۚ
பலனளிப்பதில்
farīḍatan
فَرِيضَةً
சட்டமாகும்
mina
مِّنَ
இருந்து
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
மகா ஞானவானாக
உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆணன்றிப்) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்.) உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (ஆகவே இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.) ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧)
Tafseer
௧௨

۞ وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْنَ بِهَآ اَوْ دَيْنٍ ۗ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْۢ بَعْدِ وَصِيَّةٍ تُوْصُوْنَ بِهَآ اَوْ دَيْنٍ ۗ وَاِنْ كَانَ رَجُلٌ يُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗٓ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُۚ فَاِنْ كَانُوْٓا اَكْثَرَ مِنْ ذٰلِكَ فَهُمْ شُرَكَاۤءُ فِى الثُّلُثِ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَآ اَوْ دَيْنٍۙ غَيْرَ مُضَاۤرٍّ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌۗ ١٢

walakum
وَلَكُمْ
உங்களுக்கு
niṣ'fu
نِصْفُ
பாதி
mā taraka
مَا تَرَكَ
எது/விட்டுச் சென்ற
azwājukum
أَزْوَٰجُكُمْ
உங்கள் மனைவிகள்
in lam yakun
إِن لَّمْ يَكُن
இல்லையென்றால்
lahunna
لَّهُنَّ
அவர்களுக்கு
waladun
وَلَدٌۚ
பிள்ளை
fa-in kāna
فَإِن كَانَ
இருந்தால்
lahunna
لَهُنَّ
அவர்களுக்கு
waladun
وَلَدٌ
பிள்ளை
falakumu
فَلَكُمُ
உங்களுக்கு
l-rubuʿu
ٱلرُّبُعُ
கால்
mimmā tarakna
مِمَّا تَرَكْنَۚ
அவர்கள் விட்டுச் சென்ற
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
waṣiyyatin
وَصِيَّةٍ
மரண சாசனம்
yūṣīna
يُوصِينَ
மரண சாசனம் செய்கின்றனர்
bihā
بِهَآ
அதை
aw daynin
أَوْ دَيْنٍۚ
அல்லது கடன்
walahunna
وَلَهُنَّ
இன்னும் அவர்களுக்கு
l-rubuʿu
ٱلرُّبُعُ
கால்
mimmā taraktum
مِمَّا تَرَكْتُمْ
நீங்கள் விட்டுச் சென்ற
in lam yakun
إِن لَّمْ يَكُن
இல்லையென்றால்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
waladun
وَلَدٌۚ
பிள்ளை
fa-in kāna
فَإِن كَانَ
இருந்தால்
lakum
لَكُمْ
உங்களுக்கு
waladun
وَلَدٌ
பிள்ளை
falahunna
فَلَهُنَّ
அவர்களுக்கு
l-thumunu
ٱلثُّمُنُ
எட்டில் ஒன்று
mimmā
مِمَّا
எதிலிருந்து
taraktum
تَرَكْتُمۚ
விட்டுச் சென்றீர்கள்
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
waṣiyyatin
وَصِيَّةٍ
மரண சாசனம்
tūṣūna
تُوصُونَ
மரண சாசனம் கூறுகிறீர்கள்
bihā
بِهَآ
அதை
aw daynin
أَوْ دَيْنٍۗ
அல்லது கடன்
wa-in kāna
وَإِن كَانَ
இருந்தால்
rajulun
رَجُلٌ
ஓர் ஆண்
yūrathu
يُورَثُ
வாரிசாக்கப்படுவான்
kalālatan
كَلَٰلَةً
வாரிசு இல்லாதவர்
awi im'ra-atun
أَوِ ٱمْرَأَةٌ
ஒரு பெண்
walahu
وَلَهُۥٓ
இன்னும் அவருக்கு
akhun
أَخٌ
சகோதரன்
aw
أَوْ
அல்லது
ukh'tun
أُخْتٌ
சகோதரி
falikulli wāḥidin
فَلِكُلِّ وَٰحِدٍ
ஒவ்வொருவருக்கும்
min'humā
مِّنْهُمَا
அவ்விருவரில்
l-sudusu
ٱلسُّدُسُۚ
ஆறில் ஒன்று
fa-in kānū
فَإِن كَانُوٓا۟
அவர்கள் இருந்தால்
akthara
أَكْثَرَ
அதிகமாக
min dhālika
مِن ذَٰلِكَ
அதை விட
fahum
فَهُمْ
அவர்கள்
shurakāu
شُرَكَآءُ
பங்குதாரர்கள்
fī l-thuluthi
فِى ٱلثُّلُثِۚ
மூன்றில் ஒன்றில்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
waṣiyyatin
وَصِيَّةٍ
மரண சாசனம்
yūṣā
يُوصَىٰ
மரண சாசனம் கூறப்படுகிறது
bihā
بِهَآ
அதை
aw daynin
أَوْ دَيْنٍ
அல்லது கடன்
ghayra
غَيْرَ
அல்லாத
muḍārrin
مُضَآرٍّۚ
நஷ்டம் ஏற்படுத்துபவர்
waṣiyyatan
وَصِيَّةً
நல்லுபதேசம்
mina
مِّنَ
இருந்து
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥalīmun
حَلِيمٌ
மகா சகிப்பாளன்
உங்கள் மனைவி(கள் இறந்து அவர்)களுக்கு பிள்ளைகளும் இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தாலோ அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் பாகம்தான் (கிடைக்கும்.) அதுவும் (அவருடைய) மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லாத நிலைமையில் (நீங்கள் இறந்துவிட்டாலோ) உங்கள் மனைவிகளுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் கால் பாகம்தான் (கிடைக்கும்.) உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் எட்டில் ஒரு பாகம்தான் அவர்களுக்கு உண்டு. அதுவும் (உங்கள்) மரண சாஸனத்தையும், கடனையும் நீங்கள் கொடுத்த பின்னரே! (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து (அவர்களுக்கு) ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால், ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆறில் ஒரு பாகமுண்டு. இதற்கு அதிகமாக (அதாவது ஒருவருக்கு மேற்பட்டு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் அல்லது இரு சகோதரர்களும், இரு சகோதரிகளும்) இருந்தால் (சொத்தில்) மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் அனைவரும் சமமான பங்குதாரர்கள். இதுவும் (அவருடைய) மரண சாஸனம், கடன் ஆகியவைகளைக் கொடுத்த பின்னரே! எனினும், (இந்தக் கடன், மற்றும் மரண சாஸனத்தாலும் வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய நல்லுபதேசமாகும். அல்லாஹ் மிக அறிந்தவனும் பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨)
Tafseer
௧௩

تِلْكَ حُدُوْدُ اللّٰهِ ۗ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ۗ وَذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ ١٣

til'ka
تِلْكَ
இவை
ḥudūdu
حُدُودُ
சட்டங்கள்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
waman yuṭiʿi
وَمَن يُطِعِ
எவர்/கீழ்ப்படிகிறார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
warasūlahu
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
yud'khil'hu
يُدْخِلْهُ
நுழைப்பான்/அவரை
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
ஆறுகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۚ
அதில்
wadhālika l-fawzu
وَذَٰلِكَ ٱلْفَوْزُ
இதுதான்/வெற்றி
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மகத்தானது
இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவனபதிகளில் சேர்க்கின்றான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௩)
Tafseer
௧௪

وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَاۖ وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ ࣖ ١٤

waman
وَمَن
இன்னும் எவர்
yaʿṣi
يَعْصِ
மாறு செய்கிறார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
warasūlahu
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
wayataʿadda
وَيَتَعَدَّ
இன்னும் மீறுகிறார்
ḥudūdahu
حُدُودَهُۥ
அவனுடைய சட்டங்களை
yud'khil'hu
يُدْخِلْهُ
நுழைப்பான்/அவரை
nāran
نَارًا
நரகத்தில்
khālidan fīhā
خَٰلِدًا فِيهَا
நிரந்தரமானவன்/அதில்
walahu
وَلَهُۥ
இன்னும் அவனுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
muhīnun
مُّهِينٌ
இழிவுபடுத்தக்கூடியது
எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, அவன் ஏற்படுத்திய வரம்புகளைக் கடக்கின்றானோ அவனை நரகத்தில் புகுத்திவிடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௪)
Tafseer
௧௫

وَالّٰتِيْ يَأْتِيْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَاۤىِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَيْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ ۚ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِى الْبُيُوْتِ حَتّٰى يَتَوَفّٰىهُنَّ الْمَوْتُ اَوْ يَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِيْلًا ١٥

wa-allātī
وَٱلَّٰتِى
எவர்கள்
yatīna
يَأْتِينَ
செய்கிறார்கள்/ வருகிறார்கள்
l-fāḥishata
ٱلْفَٰحِشَةَ
மானக்கேடானதிற்கு
min
مِن
இருந்து
nisāikum
نِّسَآئِكُمْ
பெண்கள்/உங்கள்
fa-is'tashhidū
فَٱسْتَشْهِدُوا۟
சாட்சியாக கொண்டு வாருங்கள்
ʿalayhinna
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
arbaʿatan
أَرْبَعَةً
நான்கு (நபர்களை)
minkum
مِّنكُمْۖ
உங்களில்
fa-in shahidū
فَإِن شَهِدُوا۟
அவர்கள் சாட்சியளித்தால்
fa-amsikūhunna
فَأَمْسِكُوهُنَّ
தடுத்து வையுங்கள்/ அவர்களை
fī l-buyūti
فِى ٱلْبُيُوتِ
வீடுகளில்
ḥattā yatawaffāhunna
حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ
வரை/கைப்பற்றும்/அவர்களை
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
aw
أَوْ
அல்லது
yajʿala
يَجْعَلَ
ஆக்குவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahunna
لَهُنَّ
அவர்களுக்கு
sabīlan
سَبِيلًا
ஒரு வழியை
உங்கள் பெண்களில் எவளேனும் விபச்சாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் (அதனை உண்மைப்படுத்தி) சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரையில் அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரையில் அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௫)
Tafseer
௧௬

وَالَّذٰنِ يَأْتِيٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا ۚ فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا ۗ اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِيْمًا ١٦

wa-alladhāni
وَٱلَّذَانِ
இன்னும் இரு ஆண்கள்
yatiyānihā
يَأْتِيَٰنِهَا
அதைச் செய்தால்
minkum
مِنكُمْ
உங்களிலிருந்து
faādhūhumā
فَـَٔاذُوهُمَاۖ
துன்புறுத்துங்கள் அவ்விருவரையும்
fa-in tābā
فَإِن تَابَا
அவ்விருவரும் மன்னிப்புக் கோரினால்
wa-aṣlaḥā
وَأَصْلَحَا
இன்னும் திருத்திக் கொண்டால்
fa-aʿriḍū
فَأَعْرِضُوا۟
புறக்கணித்துவிடுங்கள்
ʿanhumā
عَنْهُمَآۗ
அவ்விருவரை விட்டு
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
tawwāban
تَوَّابًا
பிழை பொறுப்பவனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
உங்கள் ஆண்களில் இருவர் இத்தகைய காரியத்தைச் செய்துவிட்டால் அவ்விருவரையும் (நிந்தித்து, அல்லது அடித்துத்) துன்புறுத்துங்கள். அவ்விருவரும் (தங்கள் குற்றத்திற்காகப்) வருத்தப்பட்டு (அதிலிருந்து விலகி) ஒழுங்காக நடந்து கொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு) விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௬)
Tafseer
௧௭

اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْۤءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰۤىِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ١٧

innamā l-tawbatu
إِنَّمَا ٱلتَّوْبَةُ
மன்னிப்பெல்லாம்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விடம்
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
l-sūa
ٱلسُّوٓءَ
தீமையை
bijahālatin
بِجَهَٰلَةٍ
அறியாமையினால்
thumma
ثُمَّ
பிறகு
yatūbūna
يَتُوبُونَ
திருந்தி திரும்புகின்றனர்
min qarībin
مِن قَرِيبٍ
அதிசீக்கிரத்தில்
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yatūbu
يَتُوبُ
பிழை பொறுப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِمْۗ
அவர்கள் மீது
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
மகா ஞானவானாக
எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதனை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகின்றார்களோ அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௭)
Tafseer
௧௮

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِۚ حَتّٰىٓ اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّيْ تُبْتُ الْـٰٔنَ وَلَا الَّذِيْنَ يَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ۗ اُولٰۤىِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِيْمًا ١٨

walaysati
وَلَيْسَتِ
இன்னும் இல்லை
l-tawbatu
ٱلتَّوْبَةُ
பிழை பொறுப்பு
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
கெட்டவைகளை
ḥattā
حَتَّىٰٓ
வரை
idhā ḥaḍara
إِذَا حَضَرَ
வந்தால்
aḥadahumu
أَحَدَهُمُ
அவர்களில்ஒருவருக்கு
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
qāla
قَالَ
கூறினார்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
tub'tu
تُبْتُ
திருந்தி விடுகிறேன்
l-āna
ٱلْـَٰٔنَ
இப்போது
walā
وَلَا
கிடையாது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yamūtūna
يَمُوتُونَ
இறக்கிறார்கள்
wahum
وَهُمْ
அவர்களோ
kuffārun
كُفَّارٌۚ
நிராகரிப்பாளர்களாக
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aʿtadnā
أَعْتَدْنَا
ஏற்படுத்தினோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
alīman
أَلِيمًا
துன்புறுத்தக்கூடியது
எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது "இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்" என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்து விட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையவர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௮)
Tafseer
௧௯

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَحِلُّ لَكُمْ اَنْ تَرِثُوا النِّسَاۤءَ كَرْهًا ۗ وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَآ اٰتَيْتُمُوْهُنَّ اِلَّآ اَنْ يَّأْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰٓى اَنْ تَكْرَهُوْا شَيْـًٔا وَّيَجْعَلَ اللّٰهُ فِيْهِ خَيْرًا كَثِيْرًا ١٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā yaḥillu
لَا يَحِلُّ
ஹலால் ஆகாது
lakum
لَكُمْ
உங்களுக்கு
an tarithū
أَن تَرِثُوا۟
நீங்கள்அனந்தரம் கொள்வது
l-nisāa
ٱلنِّسَآءَ
பெண்களை
karhan
كَرْهًاۖ
பலவந்தமாக
walā
وَلَا
தடுக்காதீர்கள்
taʿḍulūhunna
تَعْضُلُوهُنَّ
தடுக்காதீர்கள் அவர்களை
litadhhabū
لِتَذْهَبُوا۟
நீங்கள் செல்வதற்காக
bibaʿḍi
بِبَعْضِ
சிலதைக் கொண்டு
مَآ
எதை/கொடுத்தீர்கள்
ātaytumūhunna
ءَاتَيْتُمُوهُنَّ
எதை/கொடுத்தீர்கள் அவர்களுக்கு
illā
إِلَّآ
தவிர
an yatīna
أَن يَأْتِينَ
அவர்கள் செய்வது
bifāḥishatin
بِفَٰحِشَةٍ
ஒரு மானக்கேடானதை
mubayyinatin
مُّبَيِّنَةٍۚ
பகிரங்கமானது
waʿāshirūhunna
وَعَاشِرُوهُنَّ
இன்னும் வாழுங்கள் அவர்களுடன்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۚ
நல்ல முறையில்
fa-in
فَإِن
நீங்கள் வெறுத்தால்
karih'tumūhunna
كَرِهْتُمُوهُنَّ
நீங்கள் வெறுத்தால் அவர்களை
faʿasā an takrahū
فَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟
நீங்கள் வெறுக்கலாம்
shayan
شَيْـًٔا
ஒன்றை
wayajʿala
وَيَجْعَلَ
இன்னும் ஆக்குவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fīhi
فِيهِ
அதில்
khayran
خَيْرًا
நன்மையை
kathīran
كَثِيرًا
அதிகமான
நம்பிக்கையாளர்களே! யாதொரு பெண்ணை (அவள் உங்களை விரும்பாது வெறுக்க, இறந்தவனுடைய பொருளாக மதித்து அவளைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல. மேலும், பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி (உங்கள் மனைவியாக வந்த) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களை (உங்கள் வீட்டில்) நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள். மேலும், அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் பல நன்மைகளை வைத்திருக்கலாம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௯)
Tafseer
௨௦

وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰىهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوْا مِنْهُ شَيْـًٔا ۗ اَتَأْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا ٢٠

wa-in aradttumu
وَإِنْ أَرَدتُّمُ
நீங்கள் நாடினால்
is'tib'dāla
ٱسْتِبْدَالَ
மாற்றுவதற்கு
zawjin
زَوْجٍ
ஒரு மனைவியை
makāna
مَّكَانَ
இடத்தில்
zawjin
زَوْجٍ
ஒரு மனைவி
waātaytum
وَءَاتَيْتُمْ
நீங்கள் கொடுத்தீர்கள்
iḥ'dāhunna
إِحْدَىٰهُنَّ
அவர்களில்ஒருத்திக்கு
qinṭāran
قِنطَارًا
குவியலை
falā takhudhū
فَلَا تَأْخُذُوا۟
எடுக்காதீர்கள்
min'hu
مِنْهُ
அதிலிருந்து
shayan
شَيْـًٔاۚ
எதையும்
atakhudhūnahu
أَتَأْخُذُونَهُۥ
அதை எடுக்கிறீர்களா?
buh'tānan
بُهْتَٰنًا
அபாண்டமாக
wa-ith'man
وَإِثْمًا
இன்னும் பாவமாக
mubīnan
مُّبِينًا
பகிரங்கமானது
ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்) குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா? ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨௦)
Tafseer