سَتَجِدُوْنَ اٰخَرِيْنَ يُرِيْدُوْنَ اَنْ يَّأْمَنُوْكُمْ وَيَأْمَنُوْا قَوْمَهُمْ ۗ كُلَّ مَا رُدُّوْٓا اِلَى الْفِتْنَةِ اُرْكِسُوْا فِيْهَا ۚ فَاِنْ لَّمْ يَعْتَزِلُوْكُمْ وَيُلْقُوْٓا اِلَيْكُمُ السَّلَمَ وَيَكُفُّوْٓا اَيْدِيَهُمْ فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ ۗ وَاُولٰۤىِٕكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطٰنًا مُّبِيْنًا ࣖ ٩١
- satajidūna
- سَتَجِدُونَ
- காண்பீர்கள்
- ākharīna
- ءَاخَرِينَ
- மற்றவர்களை
- yurīdūna
- يُرِيدُونَ
- நாடுகிறார்கள்
- an
- أَن
- அவர்கள் பாதுகாப்புப்பெறவும்
- yamanūkum
- يَأْمَنُوكُمْ
- அவர்கள் பாதுகாப்புப்பெறவும் உங்களிடம்
- wayamanū
- وَيَأْمَنُوا۟
- அல்லது பாதுகாப்புப்பெறவும்
- qawmahum
- قَوْمَهُمْ
- தங்கள் சமுதாயத்திடம்
- kulla mā
- كُلَّ مَا
- எல்லாம்
- ruddū
- رُدُّوٓا۟
- திருப்பப்பட்டார்கள்
- ilā l-fit'nati
- إِلَى ٱلْفِتْنَةِ
- குழப்பம் விளைவிப்பதற்கு (இணைவைத்தல்)
- ur'kisū
- أُرْكِسُوا۟
- குப்புற விழுந்து விடுகிறார்கள்
- fīhā fa-in lam
- فِيهَاۚ فَإِن لَّمْ
- அதில்/அவர்கள் விலகவில்லையென்றால்
- yaʿtazilūkum
- يَعْتَزِلُوكُمْ
- அதில்/அவர்கள் விலகவில்லையென்றால் உங்களை
- wayul'qū
- وَيُلْقُوٓا۟
- இன்னும் சமர்ப்பிக்காமல்
- ilaykumu
- إِلَيْكُمُ
- உங்கள் முன்
- l-salama
- ٱلسَّلَمَ
- சமாதானத்தை
- wayakuffū
- وَيَكُفُّوٓا۟
- இன்னும் அவர்கள் தடுக்காமல்
- aydiyahum
- أَيْدِيَهُمْ
- தங்கள் கைகளை
- fakhudhūhum
- فَخُذُوهُمْ
- பிடியுங்கள் இவர்களை
- wa-uq'tulūhum
- وَٱقْتُلُوهُمْ
- இன்னும் கொல்லுங்கள் அவர்களை
- ḥaythu
- حَيْثُ
- எங்கெல்லாம்
- thaqif'tumūhum wa-ulāikum
- ثَقِفْتُمُوهُمْۚ وَأُو۟لَٰٓئِكُمْ
- பெறுகிறீர்கள் அவர்கள்/இவர்கள்
- jaʿalnā
- جَعَلْنَا
- ஆக்கி விட்டோம்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்களுக்கு எதிராக
- sul'ṭānan
- سُلْطَٰنًا
- ஆதாரத்தை
- mubīnan
- مُّبِينًا
- தெளிவானது
(நம்பிக்கையாளர்களே!) வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்பு பெற்றுக் கொள்வதுடன் (உங்களுடைய எதிரிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் பாதுகாப்பு பெற்றிருக்க விரும்புவார்கள். எனினும், யாதொரு விஷமத்திற்கு இவர்கள் அழைக்கப்பட்டால் அதில் (கண்மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள். இத்தகையவர்கள் உங்களை எதிர்ப்பதிலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களை நீங்கள் கண்டவிடமெல்லாம் (சிறை பிடியுங்கள். தப்பி ஓடுகிறவர்களை) வெட்டிசாயுங்கள். இத்தகையவர்களுடன் (போர்புரிய) உங்களுக்குத் தெளிவான அனுமதி கொடுத்துவிட்டோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௧)Tafseer
وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـًٔا ۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـًٔا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖٓ اِلَّآ اَنْ يَّصَّدَّقُوْا ۗ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۗوَاِنْ كَانَ مِنْ قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِۖ تَوْبَةً مِّنَ اللّٰهِ ۗوَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ٩٢
- wamā kāna
- وَمَا كَانَ
- ஆகுமானதல்ல
- limu'minin
- لِمُؤْمِنٍ
- ஒரு நம்பிக்கையாளருக்கு
- an yaqtula
- أَن يَقْتُلَ
- அவர் கொல்வது
- mu'minan
- مُؤْمِنًا
- ஒரு நம்பிக்கையாளரை
- illā
- إِلَّا
- தவிர
- khaṭa-an
- خَطَـًٔاۚ
- தவறுதலாக
- waman
- وَمَن
- எவராவது
- qatala
- قَتَلَ
- கொன்றால்
- mu'minan
- مُؤْمِنًا
- ஒரு நம்பிக்கையாளரை
- khaṭa-an
- خَطَـًٔا
- தவறுதலாகவே
- fataḥrīru
- فَتَحْرِيرُ
- உரிமையிடவேண்டும்
- raqabatin
- رَقَبَةٍ
- ஓர் அடிமையை
- mu'minatin
- مُّؤْمِنَةٍ
- நம்பிக்கையாளரான
- wadiyatun
- وَدِيَةٌ
- இன்னும் நஷ்டஈடு
- musallamatun
- مُّسَلَّمَةٌ
- ஒப்படைக்கப்பட்டது
- ilā
- إِلَىٰٓ
- இடம்
- ahlihi illā
- أَهْلِهِۦٓ إِلَّآ
- அவருடைய குடும்பத்தார்/தவிர
- an yaṣṣaddaqū
- أَن يَصَّدَّقُوا۟ۚ
- அவர்கள் தானமாக்குவது
- fa-in kāna
- فَإِن كَانَ
- இருந்தால்
- min qawmin
- مِن قَوْمٍ
- ஒரு சமுதாயம் சேர்ந்தவராக
- ʿaduwwin
- عَدُوٍّ
- எதிரி
- lakum
- لَّكُمْ
- உங்கள்
- wahuwa
- وَهُوَ
- அவர்
- mu'minun
- مُؤْمِنٌ
- நம்பிக்கையாளர்
- fataḥrīru
- فَتَحْرِيرُ
- உரிமையிடவேண்டும்
- raqabatin
- رَقَبَةٍ
- ஓர் அடிமை
- mu'minatin
- مُّؤْمِنَةٍۖ
- நம்பிக்கையாளரான
- wa-in kāna
- وَإِن كَانَ
- இருந்தால்
- min qawmin
- مِن قَوْمٍۭ
- ஒரு சமுதாயத்தை சேர்ந்தவராக
- baynakum
- بَيْنَكُمْ
- உங்களுக்கிடையில்
- wabaynahum
- وَبَيْنَهُم
- இன்னும் அவர்களுக்கு இடையில்
- mīthāqun
- مِّيثَٰقٌ
- உடன்படிக்கை
- fadiyatun
- فَدِيَةٌ
- நஷ்டஈடு
- musallamatun
- مُّسَلَّمَةٌ
- ஒப்படைக்கப்பட்டது
- ilā ahlihi
- إِلَىٰٓ أَهْلِهِۦ
- அவருடைய குடும்பத்தாரிடம்
- wataḥrīru
- وَتَحْرِيرُ
- இன்னும் உரிமையிடுவது வேண்டும்
- raqabatin
- رَقَبَةٍ
- ஓர் அடிமை
- mu'minatin
- مُّؤْمِنَةٍۖ
- நம்பிக்கையாளரான
- faman
- فَمَن
- எவர்
- lam yajid
- لَّمْ يَجِدْ
- பெறவில்லை
- faṣiyāmu
- فَصِيَامُ
- நோன்பிருத்தல்
- shahrayni
- شَهْرَيْنِ
- இரண்டு மாதங்கள்
- mutatābiʿayni
- مُتَتَابِعَيْنِ
- தொடர்ந்து
- tawbatan
- تَوْبَةً
- மன்னிப்புக் கோரி
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِۗ
- அல்லாஹ்விடம்
- wakāna
- وَكَانَ
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīman
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
- ḥakīman
- حَكِيمًا
- ஞானவானாக
தவறுதலாகவே தவிர, யாதொரு இறைநம்பிக்கையாளரை (முஃமினை) கொலை செய்வது எந்த இறைநம்பிக்கையாளருக்கும் ஆகுமானதல்ல. (உங்களில்) எவரேனும் யாதொரு இறைநம்பிக்கை யாளரை தவறுதலாகக் கொலை செய்துவிட்டால் (அதற்குப் பரிகாரமாக) இறைநம்பிக்கையாளரயாகிய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் இறந்தவருடைய வாரிசுகள் (மன்னித்துத்) தானமாக விட்டாலே தவிர, அதற்குரிய நஷ்ட ஈட்டையும் அவர்களிடம் செலுத்தவேண்டும். (இறந்த) அவன் உங்கள் எதிரி இனத்தவனாக இருந்து நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும். (நஷ்டஈடு கொடுக்க வேண்டியதில்லை. இறந்த) அவன் உங்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட வகுப்பாரில் உள்ளவனாக இருந்தால் அவனுடைய வாரிசுகளுக்கு நஷ்டஈட்டைச் செலுத்துவதுடன் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இவ்வாறு பரிகாரம் செய்வதற்குரிய பொருளை) எவரேனும் அடையாவிட்டால் அவன் அல்லாஹ்விடம் (தன் குற்றத்தை) மன்னிக்கக் கோரி இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௨)Tafseer
وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاۤؤُهٗ جَهَنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا ٩٣
- waman
- وَمَن
- எவர்
- yaqtul
- يَقْتُلْ
- கொல்வார்
- mu'minan
- مُؤْمِنًا
- ஒரு நம்பிக்கையாளரை
- mutaʿammidan
- مُّتَعَمِّدًا
- நாடியவராக
- fajazāuhu
- فَجَزَآؤُهُۥ
- அவருடைய கூலி
- jahannamu
- جَهَنَّمُ
- நரகம்
- khālidan
- خَٰلِدًا
- நிரந்தரமானவராக
- fīhā
- فِيهَا
- அதில்
- waghaḍiba
- وَغَضِبَ
- இன்னும் கோபிப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- walaʿanahu
- وَلَعَنَهُۥ
- இன்னும் சபிப்பான்/அவரை
- wa-aʿadda
- وَأَعَدَّ
- இன்னும் தயார்படுத்துவான்
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- ʿadhāban
- عَذَابًا
- வேதனையை
- ʿaẓīman
- عَظِيمًا
- பெரிய
எவனேனும் யாதொரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் என்றென்றும் தங்கியும் விடுவான். அவன்மீது அல்லாஹ் கோபம் கொண்டு அவனை சபித்தும் விடுவான். அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௩)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا ضَرَبْتُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ فَتَبَيَّنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَلْقٰىٓ اِلَيْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًاۚ تَبْتَغُوْنَ عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا ۖفَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ ۗ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوْاۗ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ٩٤
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே
- idhā ḍarabtum
- إِذَا ضَرَبْتُمْ
- நீங்கள் பயணித்தால்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- fatabayyanū
- فَتَبَيَّنُوا۟
- தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்
- walā taqūlū
- وَلَا تَقُولُوا۟
- இன்னும் கூறாதீர்கள்
- liman alqā
- لِمَنْ أَلْقَىٰٓ
- எவருக்கு/கூறினார்
- ilaykumu
- إِلَيْكُمُ
- உங்கள் முன்
- l-salāma
- ٱلسَّلَٰمَ
- ஸலாம்
- lasta
- لَسْتَ
- நீர் இல்லை
- mu'minan
- مُؤْمِنًا
- நம்பிக்கையாளராக
- tabtaghūna
- تَبْتَغُونَ
- தேடுகிறீர்கள்
- ʿaraḍa
- عَرَضَ
- பொருளை
- l-ḥayati
- ٱلْحَيَوٰةِ
- வாழ்க்கையின்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- இவ்வுலகம்
- faʿinda l-lahi
- فَعِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- maghānimu
- مَغَانِمُ
- செல்வங்கள்
- kathīratun
- كَثِيرَةٌۚ
- ஏராளமான
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறே
- kuntum
- كُنتُم
- இருந்தீர்கள்
- min qablu
- مِّن قَبْلُ
- (இதற்கு) முன்னர்
- famanna
- فَمَنَّ
- அருள் புரிந்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- fatabayyanū
- فَتَبَيَّنُوٓا۟ۚ
- ஆகவே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- இருக்கிறான்
- bimā
- بِمَا
- எதை
- taʿmalūna
- تَعْمَلُونَ
- செய்கிறீர்கள்
- khabīran
- خَبِيرًا
- ஆழ்ந்தறிந்தவனாக
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில் எவரேனும் தம்மை நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு அறிவிப்பதற்காக) உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவர்களிடமிருந்து) இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் அடையக்கருதி "நீ நம்பிக்கையாளரல்ல" என்று அவரைக் கூறி (வெட்டி) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (அவற்றை நீங்கள் அடையலாம்.) இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து பயந்து இஸ்லாமை வெளியிட்டுக்கொண்டு) இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். (அதன் பின்னரே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர் ஆனீர்கள். ஆகவே, போர்புரிவதற்கு முன்னதாகவே உங்கள் முன் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்களா? அல்லவா? என்பதைத் தீர விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௪)Tafseer
لَا يَسْتَوِى الْقَاعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ غَيْرُ اُولِى الضَّرَرِ وَالْمُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۗ فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَى الْقٰعِدِيْنَ دَرَجَةً ۗ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰىۗ وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ عَلَى الْقٰعِدِيْنَ اَجْرًا عَظِيْمًاۙ ٩٥
- lā yastawī
- لَّا يَسْتَوِى
- சமமாக மாட்டார்(கள்)
- l-qāʿidūna
- ٱلْقَٰعِدُونَ
- தங்கியவர்கள்
- mina l-mu'minīna
- مِنَ ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களில்
- ghayru
- غَيْرُ
- அல்லாதவர்
- ulī l-ḍarari
- أُو۟لِى ٱلضَّرَرِ
- குறையுடையோர்
- wal-mujāhidūna
- وَٱلْمُجَٰهِدُونَ
- இன்னும் போரிடுபவர்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- bi-amwālihim
- بِأَمْوَٰلِهِمْ
- தங்கள் செல்வங்களைக் கொண்டு
- wa-anfusihim
- وَأَنفُسِهِمْۚ
- இன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டு
- faḍḍala
- فَضَّلَ
- இன்னும் மேன்மையாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-mujāhidīna
- ٱلْمُجَٰهِدِينَ
- போரிடுபவர்களை
- bi-amwālihim
- بِأَمْوَٰلِهِمْ
- தங்கள் செல்வங்களைக் கொண்டு
- wa-anfusihim
- وَأَنفُسِهِمْ
- இன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டு
- ʿalā
- عَلَى
- விட
- l-qāʿidīna
- ٱلْقَٰعِدِينَ
- தங்கியவர்கள்
- darajatan
- دَرَجَةًۚ
- பதவியால்
- wakullan
- وَكُلًّا
- எல்லோருக்கும்
- waʿada
- وَعَدَ
- வாக்களித்துள்ளான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-ḥus'nā
- ٱلْحُسْنَىٰۚ
- சொர்க்கத்தை
- wafaḍḍala
- وَفَضَّلَ
- இன்னும் மேன்மையாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-mujāhidīna
- ٱلْمُجَٰهِدِينَ
- போராளிகளை
- ʿalā l-qāʿidīna
- عَلَى ٱلْقَٰعِدِينَ
- தங்கியவர்களை விட
- ajran ʿaẓīman
- أَجْرًا عَظِيمًا
- கூலி/மகத்தானது
நம்பிக்கையாளர்களில் நோய் போன்ற (சரியான) காரணங்களின்றி (போருக்குச் செல்லாது) இருந்து கொண்டவர்கள் தங்களுடைய பொருள்களையும், உயிர்களையும், அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து போர்புரிபவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிந்தவர்களின் பதவியை (போருக்குச் செல்லாது) தங்கி விட்டவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். எனினும் இவர்கள் அனைவருக்கும் (இவர்களிடம் இறைநம்பிக்கை இருப்பதால்) நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். ஆயினும், போர் செய்தவர்களுக்கு மகத்தான கூலியையும் அருள்புரிந்து, தங்கி விட்டோரைவிட மேன்மையாக்கி வைக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௫)Tafseer
دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ࣖ ٩٦
- darajātin
- دَرَجَٰتٍ
- (பல) பதவிகளை
- min'hu
- مِّنْهُ
- தன்னிடமிருந்து
- wamaghfiratan
- وَمَغْفِرَةً
- இன்னும் மன்னிப்பை
- waraḥmatan
- وَرَحْمَةًۚ
- இன்னும் கருணையை
- wakāna
- وَكَانَ
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ghafūran
- غَفُورًا
- மகா மன்னிப்பாளனாக
- raḥīman
- رَّحِيمًا
- பெரும் கருணையாளனாக
(அன்றி, அவர்களுக்குத்) தன்னிடமுள்ள (மகத்தான) பதவிகளையும், மன்னிப்பையும், அன்பையும் அருளுகிறான். (ஏனெனில்) அல்லாஹ், மிக மன்னிப்பவனும் அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௬)Tafseer
اِنَّ الَّذِيْنَ تَوَفّٰىهُمُ الْمَلٰۤىِٕكَةُ ظَالِمِيْٓ اَنْفُسِهِمْ قَالُوْا فِيْمَ كُنْتُمْ ۗ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِيْنَ فِى الْاَرْضِۗ قَالُوْٓا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِيْهَا ۗ فَاُولٰۤىِٕكَ مَأْوٰىهُمْ جَهَنَّمُ ۗ وَسَاۤءَتْ مَصِيْرًاۙ ٩٧
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- நிச்சயமாக எவர்கள்
- tawaffāhumu
- تَوَفَّىٰهُمُ
- உயிர் வாங்கினார்(கள்)/அவர்களை
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- ẓālimī
- ظَالِمِىٓ
- தீங்கிழைத்தவர்களாக
- anfusihim
- أَنفُسِهِمْ
- தங்களுக்கு
- qālū
- قَالُوا۟
- கூறினர்
- fīma kuntum
- فِيمَ كُنتُمْۖ
- எவ்வாறுஇருந்தீர்கள்?
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- kunnā
- كُنَّا
- இருந்தோம்
- mus'taḍʿafīna
- مُسْتَضْعَفِينَ
- பலவீனர்களாக
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِۚ
- இந்த பூமியில்
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- alam takun
- أَلَمْ تَكُنْ
- இருக்கவில்லையா?
- arḍu
- أَرْضُ
- பூமி
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wāsiʿatan
- وَٰسِعَةً
- விசாலமானதாக
- fatuhājirū
- فَتُهَاجِرُوا۟
- ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?
- fīhā fa-ulāika
- فِيهَاۚ فَأُو۟لَٰٓئِكَ
- அதில்/இவர்கள்
- mawāhum
- مَأْوَىٰهُمْ
- இவர்களின் ஒதுங்குமிடம்
- jahannamu
- جَهَنَّمُۖ
- நரகம்
- wasāat
- وَسَآءَتْ
- கெட்டுவிட்டது
- maṣīran
- مَصِيرًا
- மீளுமிடத்தால்
எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்துகொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் பொழுது (அவர்களை நோக்கி "மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்" என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் "அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்" என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு மலக்குகள்) அல்லாஹ்வுடைய பூமி விசால மானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?" என்று கேட்பார்கள். இத்தகையவர்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது! ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௭)Tafseer
اِلَّا الْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاۤءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيْعُوْنَ حِيْلَةً وَّلَا يَهْتَدُوْنَ سَبِيْلًاۙ ٩٨
- illā
- إِلَّا
- தவிர
- l-mus'taḍʿafīna
- ٱلْمُسْتَضْعَفِينَ
- பலவீனர்கள்
- mina
- مِنَ
- இருந்து
- l-rijāli
- ٱلرِّجَالِ
- ஆண்கள்
- wal-nisāi
- وَٱلنِّسَآءِ
- இன்னும் பெண்கள்
- wal-wil'dāni
- وَٱلْوِلْدَٰنِ
- இன்னும் சிறுவர்கள்
- lā yastaṭīʿūna
- لَا يَسْتَطِيعُونَ
- இயலமாட்டார்கள்
- ḥīlatan
- حِيلَةً
- ஓர் ஆற்றலை
- walā yahtadūna
- وَلَا يَهْتَدُونَ
- இன்னும் வழி காணமாட்டார்கள்
- sabīlan
- سَبِيلًا
- ஒரு வழியையும்
எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் யாதொரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று (அதைவிட்டு வெளியேற) வழி காணாதிருந்தால் அத்தகையவர்களை அல்லாஹ் மன்னித்து விடக்கூடும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௮)Tafseer
فَاُولٰۤىِٕكَ عَسَى اللّٰهُ اَنْ يَّعْفُوَ عَنْهُمْ ۗ وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا ٩٩
- fa-ulāika ʿasā
- فَأُو۟لَٰٓئِكَ عَسَى
- இவர்கள்/கூடும்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- an yaʿfuwa
- أَن يَعْفُوَ
- அவன் மன்னிக்க
- ʿanhum
- عَنْهُمْۚ
- இவர்களை
- wakāna
- وَكَانَ
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿafuwwan
- عَفُوًّا
- மன்னிப்பாளானாக
- ghafūran
- غَفُورًا
- பாவங்களை மறைப்பவனாக
ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯௯)Tafseer
۞ وَمَنْ يُّهَاجِرْ فِيْ سَبِيْلِ اللّٰهِ يَجِدْ فِى الْاَرْضِ مُرَاغَمًا كَثِيْرًا وَّسَعَةً ۗوَمَنْ يَّخْرُجْ مِنْۢ بَيْتِهٖ مُهَاجِرًا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَى اللّٰهِ ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ࣖ ١٠٠
- waman
- وَمَن
- எவர்
- yuhājir
- يُهَاجِرْ
- ஹிஜ்ரா செல்கிறார்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- yajid
- يَجِدْ
- பெறுவார்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- murāghaman
- مُرَٰغَمًا
- அடைக்கலங்களை
- kathīran
- كَثِيرًا
- பல
- wasaʿatan
- وَسَعَةًۚ
- இன்னும் வசதியை
- waman
- وَمَن
- எவர்
- yakhruj
- يَخْرُجْ
- வெளியேறுவார்
- min
- مِنۢ
- இருந்து
- baytihi
- بَيْتِهِۦ
- தன் இல்லம்
- muhājiran
- مُهَاجِرًا
- ஹிஜ்ரா செல்பவராக
- ilā
- إِلَى
- பக்கம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- warasūlihi
- وَرَسُولِهِۦ
- இன்னும் அவனின் தூதர்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yud'rik'hu
- يُدْرِكْهُ
- அடையும்/அவரை
- l-mawtu
- ٱلْمَوْتُ
- மரணம்
- faqad
- فَقَدْ
- திட்டமாக
- waqaʿa
- وَقَعَ
- கடமையாகிவிடுகிறது
- ajruhu
- أَجْرُهُۥ
- அவனுடைய கூலி
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِۗ
- அல்லாஹ் மீது
- wakāna
- وَكَانَ
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ghafūran
- غَفُورًا
- மகாமன்னிப்பாளனாக
- raḥīman
- رَّحِيمًا
- பெரும் கருணையாளனாக
(இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகின்றாரோ, அவர் பூமியில் வசதியான பல இடங்களையும், சௌகரியத்தையும் அடைவார். எவரேனும் தன் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் இறந்துவிட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. ஏனென்றால், அல்லாஹ் மிக பிழைபொறுத்து நிகரற்ற அன்பை பொழிபவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௦)Tafseer