Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 13

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௨௧

وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِيْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ ۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌۙ ١٢١

wa-idh ghadawta
وَإِذْ غَدَوْتَ
நீர் காலையில் புறப்பட்ட சமயத்தை
min
مِنْ
இருந்து
ahlika
أَهْلِكَ
உம் குடும்பம்
tubawwi-u
تُبَوِّئُ
தங்கவைக்கிறீர்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
maqāʿida
مَقَٰعِدَ
இடங்களில்
lil'qitāli
لِلْقِتَالِۗ
போருக்காக
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(நபியே!) நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு(ச் சென்று) நம்பிக்கை கொண்டவர்களை போர்க்களத்தில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள். (அனைத்தையும்) அல்லாஹ் செவியுறுபவனாகவும், நன்கறிந்த வனாகவும் இருக்கிறான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௧)
Tafseer
௧௨௨

اِذْ هَمَّتْ طَّۤاىِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَاۙ وَاللّٰهُ وَلِيُّهُمَا ۗ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ١٢٢

idh hammat
إِذْ هَمَّت
நாடிய சமயம்
ṭāifatāni
طَّآئِفَتَانِ
இரு பிரிவினர்
minkum
مِنكُمْ
உங்களில்
an tafshalā
أَن تَفْشَلَا
அவர்கள் கோழையாகி பின்னடைவதற்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
waliyyuhumā
وَلِيُّهُمَاۗ
அவ்விருவரின் பொறுப்பாளன்
waʿalā
وَعَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைப்பார்களாக
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
(அந்த போரில்) உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து ("உஹுத்" என்னும் போர்க்களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்த சமயத்தில் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்பவனாக இருந்தான். (ஆகவே!) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக! ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௨)
Tafseer
௧௨௩

وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْتُمْ اَذِلَّةٌ ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ١٢٣

walaqad
وَلَقَدْ
இன்னும் திட்டவட்டமாக
naṣarakumu
نَصَرَكُمُ
உதவினான்/ உங்களுக்கு
l-lahu bibadrin
ٱللَّهُ بِبَدْرٍ
அல்லாஹ்/பத்ரில்
wa-antum
وَأَنتُمْ
இன்னும் நீங்கள் இருக்க
adhillatun
أَذِلَّةٌۖ
குறைந்தவர்களாக
fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௩)
Tafseer
௧௨௪

اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِيْنَ اَلَنْ يَّكْفِيَكُمْ اَنْ يُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰۤىِٕكَةِ مُنْزَلِيْنَۗ ١٢٤

idh taqūlu
إِذْ تَقُولُ
நீர் கூறியபோது
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
alan yakfiyakum
أَلَن يَكْفِيَكُمْ
உங்களுக்குப்போதாதா?
an yumiddakum
أَن يُمِدَّكُمْ
உங்களுக்கு உதவுவது
rabbukum
رَبُّكُم
உங்கள் இறைவன்
bithalāthati ālāfin
بِثَلَٰثَةِ ءَالَٰفٍ
மூவாயிரத்தைக் கொண்டு
mina l-malāikati
مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களிலிருந்து
munzalīna
مُنزَلِينَ
இறக்கப்படுபவர்கள்
(நபியே! அப்பொழுது) நீங்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "(வானத்திலிருந்து) இறங்கிய மூவாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?" என்று கூறியதையும் ஞாபகமூட்டுங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௪)
Tafseer
௧௨௫

بَلٰٓى ۙاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَيَأْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰۤىِٕكَةِ مُسَوِّمِيْنَ ١٢٥

balā
بَلَىٰٓۚ
ஆம்
in taṣbirū
إِن تَصْبِرُوا۟
நீங்கள் பொறுத்தால்
watattaqū
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சினால்
wayatūkum
وَيَأْتُوكُم
இன்னும் அவர்கள் வந்தால் /உங்களிடம்
min fawrihim hādhā
مِّن فَوْرِهِمْ هَٰذَا
அவர்களுடைய இதே அவசரத்தில்
yum'did'kum
يُمْدِدْكُمْ
உங்களுக்குஉதவுவான்
rabbukum
رَبُّكُم
உங்கள் இறைவன்
bikhamsati ālāfin
بِخَمْسَةِ ءَالَٰفٍ
ஐந்தாயிரங்களைக் கொண்டு
mina l-malāikati
مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களிலிருந்து
musawwimīna
مُسَوِّمِينَ
அடையாளமிடக் கூடியவர்கள்
நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறியபோதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௫)
Tafseer
௧௨௬

وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى لَكُمْ وَلِتَطْمَىِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ ۗ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ ١٢٦

wamā jaʿalahu
وَمَا جَعَلَهُ
இன்னும் ஆக்கவில்லை/ அதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
illā bush'rā
إِلَّا بُشْرَىٰ
தவிர/நற்செய்தியாக
lakum
لَكُمْ
உங்களுக்கு
walitaṭma-inna
وَلِتَطْمَئِنَّ
இன்னும் நிம்மதி அடைவதற்காக
qulūbukum
قُلُوبُكُم
உங்கள் உள்ளங்கள்
bihi
بِهِۦۗ
அதன் மூலம்
wamā l-naṣru
وَمَا ٱلنَّصْرُ
இன்னும் உதவி இல்லை
illā
إِلَّا
தவிர
min ʿindi l-lahi
مِنْ عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
ஞானவான்
உங்களுடைய உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியை புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே அன்றி (வேறு யாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௬)
Tafseer
௧௨௭

لِيَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْٓا اَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوْا خَاۤىِٕبِيْنَ ١٢٧

liyaqṭaʿa
لِيَقْطَعَ
அழிப்பதற்காக
ṭarafan
طَرَفًا
ஒரு பகுதியை
mina
مِّنَ
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
aw yakbitahum
أَوْ يَكْبِتَهُمْ
அல்லது/ அவர்களை கேவலப்படுதுவதர்க்காக
fayanqalibū
فَيَنقَلِبُوا۟
திரும்புவார்கள்
khāibīna
خَآئِبِينَ
ஆசை நிறைவேறாதவர்களாக
(அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௭)
Tafseer
௧௨௮

لَيْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَيْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ ١٢٨

laysa laka
لَيْسَ لَكَ
இல்லை/உமக்கு
mina
مِنَ
இருந்து
l-amri
ٱلْأَمْرِ
அதிகாரம்
shayon
شَىْءٌ
எதுவும்
aw yatūba
أَوْ يَتُوبَ
அல்லது மன்னிப்பதற்காக
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களை
aw yuʿadhibahum
أَوْ يُعَذِّبَهُمْ
அல்லது/அவர்களை வேதனை செய்வதற்காக
fa-innahum
فَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ẓālimūna
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
(நபியே!) இவ்விஷயத்தில் உங்களுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர்களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௮)
Tafseer
௧௨௯

وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ يَغْفِرُ لِمَنْ يَّشَاۤءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَاۤءُ ۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ١٢٩

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۚ
இன்னும் பூமியிலுள்ளவை
yaghfiru
يَغْفِرُ
மன்னிப்பான்
liman
لِمَن
எவருக்கு
yashāu
يَشَآءُ
நாடுகிறான்
wayuʿadhibu
وَيُعَذِّبُ
இன்னும் வேதனைசெய்வான்
man
مَن
எவர்
yashāu
يَشَآءُۚ
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
(ஏனென்றால்) வானங்களில் உள்ளவை அனைத்தும், பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களைத் தண்டிப்பான். ஆனால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨௯)
Tafseer
௧௩௦

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَأْكُلُوا الرِّبٰوٓا اَضْعَافًا مُّضٰعَفَةً ۖوَّاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَۚ ١٣٠

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā takulū
لَا تَأْكُلُوا۟
தின்னாதீர்கள்
l-riba
ٱلرِّبَوٰٓا۟
வட்டியை
aḍʿāfan
أَضْعَٰفًا
பன்மடங்கு
muḍāʿafatan
مُّضَٰعَفَةًۖ
இரட்டிப்பாக்கப்பட்டது
wa-ittaqū l-laha
وَٱتَّقُوا۟ ٱللَّهَ
அல்லாஹ்வை அஞ்சுங்கள்
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக
நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௦)
Tafseer