Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௨௭

Qur'an Surah Ali 'Imran Verse 127

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْٓا اَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوْا خَاۤىِٕبِيْنَ (آل عمران : ٣)

liyaqṭaʿa
لِيَقْطَعَ
That He may cut off
அழிப்பதற்காக
ṭarafan
طَرَفًا
a part
ஒரு பகுதியை
mina
مِّنَ
of
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
disbelieved
நிராகரித்தார்கள்
aw yakbitahum
أَوْ يَكْبِتَهُمْ
or suppress them
அல்லது/ அவர்களை கேவலப்படுதுவதர்க்காக
fayanqalibū
فَيَنقَلِبُوا۟
so (that) they turn back
திரும்புவார்கள்
khāibīna
خَآئِبِينَ
disappointed
ஆசை நிறைவேறாதவர்களாக

Transliteration:

Laiyaqta'a tarafam minal lazeena kafarooo aw yakbitahum fayanqaliboo khaaa'ibeen (QS. ʾĀl ʿImrān:127)

English Sahih International:

That He might cut down a section of the disbelievers or suppress them so that they turn back disappointed. (QS. Ali 'Imran, Ayah ௧௨௭)

Abdul Hameed Baqavi:

(அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௨௭)

Jan Trust Foundation

(அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பாளர்களில் ஒரு பகுதியை அழிப்பதற்காக அல்லது அவர்களை கேவலப்படுத்தி, ஆசை நிறைவேறாதவர்களாக அவர்கள் திரும்புவதற்காக அல்லது அவர்களை மன்னிப்பதற்காக அல்லது அவர்களை வேதனை செய்வதற்காக (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள். (ஆகவே, நபியே!) உமக்கு (அல்லாஹ்வின்) அதிகாரத்தில் எதுவும் இல்லை.