Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௨௧

Qur'an Surah Ali 'Imran Verse 121

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِيْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ ۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌۙ (آل عمران : ٣)

wa-idh ghadawta
وَإِذْ غَدَوْتَ
And when you left early morning
நீர் காலையில் புறப்பட்ட சமயத்தை
min
مِنْ
from
இருந்து
ahlika
أَهْلِكَ
your household
உம் குடும்பம்
tubawwi-u
تُبَوِّئُ
to post
தங்கவைக்கிறீர்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
the believers
நம்பிக்கையாளர்களை
maqāʿida
مَقَٰعِدَ
(to take) positions
இடங்களில்
lil'qitāli
لِلْقِتَالِۗ
for the battle
போருக்காக
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
(is) All-Hearing
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Wa iz ghadawta min ahlika tubawwi'ul mu'mineena maqaa'ida lilqitaal; wallaahu samee'un 'aleem (QS. ʾĀl ʿImrān:121)

English Sahih International:

And [remember] when you, [O Muhammad], left your family in the morning to post the believers at their stations for the battle [of Uhud] – and Allah is Hearing and Knowing – (QS. Ali 'Imran, Ayah ௧௨௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு(ச் சென்று) நம்பிக்கை கொண்டவர்களை போர்க்களத்தில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள். (அனைத்தையும்) அல்லாஹ் செவியுறுபவனாகவும், நன்கறிந்த வனாகவும் இருக்கிறான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௨௧)

Jan Trust Foundation

(நபியே!) நினைவு கூர்வீராக|) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! நீர்) போருக்காக (பொருத்தமான) இடங்களில் நம்பிக்கையாளர்களை தங்கவைப்பதற்காக உம் குடும்பத்திலிருந்து காலையில் புறப்பட்ட சமயத்தை நினைவு கூறுவீராக! அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.