Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௨௮

Qur'an Surah Ali 'Imran Verse 128

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَيْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَيْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ (آل عمران : ٣)

laysa laka
لَيْسَ لَكَ
Not for you
இல்லை/உமக்கு
mina
مِنَ
of
இருந்து
l-amri
ٱلْأَمْرِ
the decision
அதிகாரம்
shayon
شَىْءٌ
(of) anything
எதுவும்
aw yatūba
أَوْ يَتُوبَ
whether He turns
அல்லது மன்னிப்பதற்காக
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்களை
aw yuʿadhibahum
أَوْ يُعَذِّبَهُمْ
or punishes them
அல்லது/அவர்களை வேதனை செய்வதற்காக
fa-innahum
فَإِنَّهُمْ
for indeed they
நிச்சயமாக அவர்கள்
ẓālimūna
ظَٰلِمُونَ
(are) wrongdoers
அநியாயக்காரர்கள்

Transliteration:

Laisa laka minal amrishai'un aw yatooba 'alaihim aw yu'az zi bahum fa innahum zaalimoon (QS. ʾĀl ʿImrān:128)

English Sahih International:

Not for you, [O Muhammad, but for Allah], is the decision whether He should [cut them down] or forgive them or punish them, for indeed, they are wrongdoers. (QS. Ali 'Imran, Ayah ௧௨௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவ்விஷயத்தில் உங்களுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர்களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௨௮)

Jan Trust Foundation

(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பாளர்களில் ஒரு பகுதியை அழிப்பதற்காக அல்லது அவர்களை கேவலப்படுத்தி, ஆசை நிறைவேறாதவர்களாக அவர்கள் திரும்புவதற்காக அல்லது அவர்களை மன்னிப்பதற்காக அல்லது அவர்களை வேதனை செய்வதற்காக (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள். (ஆகவே, நபியே!) உமக்கு (அல்லாஹ்வின்) அதிகாரத்தில் எதுவும் இல்லை.