Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௨௨

Qur'an Surah Ali 'Imran Verse 122

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ هَمَّتْ طَّۤاىِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَاۙ وَاللّٰهُ وَلِيُّهُمَا ۗ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ (آل عمران : ٣)

idh hammat
إِذْ هَمَّت
When inclined
நாடிய சமயம்
ṭāifatāni
طَّآئِفَتَانِ
two parties
இரு பிரிவினர்
minkum
مِنكُمْ
among you
உங்களில்
an tafshalā
أَن تَفْشَلَا
that they lost heart
அவர்கள் கோழையாகி பின்னடைவதற்கு
wal-lahu
وَٱللَّهُ
but Allah
அல்லாஹ்
waliyyuhumā
وَلِيُّهُمَاۗ
(was) their protector
அவ்விருவரின் பொறுப்பாளன்
waʿalā
وَعَلَى
And on
மீது
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
let put (their) trust
நம்பிக்கை வைப்பார்களாக
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
the believers
நம்பிக்கையாளர்கள்

Transliteration:

Iz hammat taaa'ifataani minkum an tafshalaa wallaahu waliyyuhumaa; wa 'alal laahi falyatawakkalil mu'minoon (QS. ʾĀl ʿImrān:122)

English Sahih International:

When two parties among you were about to lose courage, but Allah was their ally; and upon Allah the believers should rely. (QS. Ali 'Imran, Ayah ௧௨௨)

Abdul Hameed Baqavi:

(அந்த போரில்) உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து ("உஹுத்" என்னும் போர்க்களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்த சமயத்தில் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்பவனாக இருந்தான். (ஆகவே!) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக! (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௨௨)

Jan Trust Foundation

(அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்; ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களில் இரு பிரிவினர் கோழையாகி பின்னடைய நாடிய சமயத்தை நினைவு கூறுவீராக! அல்லாஹ் அவ்விருவரின் பொறுப்பாளன். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே (தவக்குல்) நம்பிக்கை வைப்பார்களாக!