قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَرْثَۚ مُسَلَّمَةٌ لَّاشِيَةَ فِيْهَا ۗ قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْنَ ࣖ ٧١
- qāla
- قَالَ
- கூறினார்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- yaqūlu
- يَقُولُ
- கூறுகிறான்
- innahā
- إِنَّهَا
- நிச்சயமாக அது
- baqaratun
- بَقَرَةٌ
- பசு
- lā dhalūlun
- لَّا ذَلُولٌ
- பயன்படுத்தப்படாதது
- tuthīru
- تُثِيرُ
- உழுவதற்கு
- l-arḍa
- ٱلْأَرْضَ
- நிலத்தை
- walā tasqī
- وَلَا تَسْقِى
- நீர் இறைக்காது
- l-ḥartha
- ٱلْحَرْثَ
- விளை நிலத்திற்கு
- musallamatun
- مُسَلَّمَةٌ
- குறையற்றது
- lā
- لَّا
- அறவே இல்லை
- shiyata fīhā
- شِيَةَ فِيهَاۚ
- வடு/அதில்
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- l-āna ji'ta
- ٱلْـَٰٔنَ جِئْتَ
- இப்போது/வந்தீர்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۚ
- உண்மையைக் கொண்டு
- fadhabaḥūhā
- فَذَبَحُوهَا
- அறுத்தார்கள்/அதை
- wamā kādū
- وَمَا كَادُوا۟
- அவர்கள் நெருங்கவில்லை
- yafʿalūna
- يَفْعَلُونَ
- செய்வார்கள்
(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௧)Tafseer
وَاِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِيْهَا ۗ وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۚ ٧٢
- wa-idh qataltum
- وَإِذْ قَتَلْتُمْ
- இன்னும் சமயம்/கொன்றீர்கள்
- nafsan
- نَفْسًا
- ஓர் உயிரை
- fa-iddāratum
- فَٱدَّٰرَْٰٔتُمْ
- இன்னும் தர்க்கித்தீர்கள்
- fīhā
- فِيهَاۖ
- அதில்
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- mukh'rijun
- مُخْرِجٌ
- வெளியாக்கக்கூடியவன்
- mā kuntum
- مَّا كُنتُمْ
- எதை/இருந்தீர்கள்
- taktumūna
- تَكْتُمُونَ
- மறைக்கிறீர்கள்
நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அம்மாட்டை அறுக்கும்படிக் கட்டளையிட்டு கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்து வைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கினான். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௨)Tafseer
فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَاۗ كَذٰلِكَ يُحْيِ اللّٰهُ الْمَوْتٰى وَيُرِيْكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ٧٣
- faqul'nā
- فَقُلْنَا
- எனவே கூறினோம்
- iḍ'ribūhu
- ٱضْرِبُوهُ
- அடியுங்கள்/அவரை
- bibaʿḍihā
- بِبَعْضِهَاۚ
- கொண்டு/சிலதை/அதில்
- kadhālika
- كَذَٰلِكَ
- அப்படியே
- yuḥ'yī
- يُحْىِ
- உயிர்ப்பிப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-mawtā
- ٱلْمَوْتَىٰ
- இறந்தவர்களை
- wayurīkum
- وَيُرِيكُمْ
- இன்னும் காண்பிக்கிறான்/உங்களுக்கு
- āyātihi
- ءَايَٰتِهِۦ
- தன் அத்தாட்சிகளை
- laʿallakum taʿqilūna
- لَعَلَّكُمْ تَعْقِلُونَ
- நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதனை அறுத்து) "அதில் ஒரு பாகத்தைக்கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்" என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வாறே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வற்காக அவன் தன்னுடைய (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௩)Tafseer
ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ۗ وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ ۗ وَاِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاۤءُ ۗوَاِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللّٰهِ ۗوَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ٧٤
- thumma
- ثُمَّ
- பிறகு
- qasat
- قَسَتْ
- இறுகிவிட்டன
- qulūbukum
- قُلُوبُكُم
- உங்கள் உள்ளங்கள்
- min baʿdi dhālika
- مِّنۢ بَعْدِ ذَٰلِكَ
- பின்னர்/அதற்கு
- fahiya
- فَهِىَ
- அவை
- kal-ḥijārati
- كَٱلْحِجَارَةِ
- போல/கற்கள்
- aw
- أَوْ
- அல்லது
- ashaddu
- أَشَدُّ
- மிகக் கடினமானவை
- qaswatan
- قَسْوَةًۚ
- இறுக்கத்தால்
- wa-inna
- وَإِنَّ
- இன்னும் நிச்சயமாக
- mina l-ḥijārati
- مِنَ ٱلْحِجَارَةِ
- கற்களில்
- lamā
- لَمَا
- திட்டமாக/எது
- yatafajjaru
- يَتَفَجَّرُ
- பீறிடுகிறது
- min'hu
- مِنْهُ
- அதில்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُۚ
- நதிகள்
- wa-inna
- وَإِنَّ
- இன்னும் நிச்சயமாக
- min'hā
- مِنْهَا
- அவற்றில்
- lamā
- لَمَا
- திட்டமாக/எது
- yashaqqaqu
- يَشَّقَّقُ
- பிளக்கிறது
- fayakhruju
- فَيَخْرُجُ
- இன்னும் வெளியேறுகிறது
- min'hu
- مِنْهُ
- அதிலிருந்து
- l-māu
- ٱلْمَآءُۚ
- தண்ணீர்
- wa-inna
- وَإِنَّ
- இன்னும் நிச்சயமாக
- min'hā
- مِنْهَا
- அவற்றில்
- lamā
- لَمَا
- திட்டமாக/எது
- yahbiṭu
- يَهْبِطُ
- விழுகிறது
- min khashyati
- مِنْ خَشْيَةِ
- பயத்தால்
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்வுடைய
- wamā l-lahu
- وَمَا ٱللَّهُ
- இல்லை/அல்லாஹ்
- bighāfilin
- بِغَٰفِلٍ
- கவனமற்றவனாக
- ʿammā
- عَمَّا
- எதைப்பற்றி
- taʿmalūna
- تَعْمَلُونَ
- செய்கிறீர்கள்
இதற்குப் பின்னும் உங்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவைகளைவிடக் கடினமானவைகளாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு. (பிளந்தால்) வெடித்து அதிலிருந்து நீர் புறப்படக் கூடியவைகளும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக்கூடியவைகளும் அவற்றில் உண்டு. (ஆனால் யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௭௪)Tafseer
۞ اَفَتَطْمَعُوْنَ اَنْ يُّؤْمِنُوْا لَكُمْ وَقَدْ كَانَ فَرِيْقٌ مِّنْهُمْ يَسْمَعُوْنَ كَلَامَ اللّٰهِ ثُمَّ يُحَرِّفُوْنَهٗ مِنْۢ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ يَعْلَمُوْنَ ٧٥
- afataṭmaʿūna
- أَفَتَطْمَعُونَ
- ஆசைப்படுகிறீர்களா?
- an yu'minū
- أَن يُؤْمِنُوا۟
- அவர்கள் நம்பிக்கைகொள்வதை
- lakum
- لَكُمْ
- உங்களுக்காக
- waqad kāna
- وَقَدْ كَانَ
- திட்டமாக இருக்கின்றனர்
- farīqun
- فَرِيقٌ
- ஒரு பிரிவினர்
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களில்
- yasmaʿūna
- يَسْمَعُونَ
- செவியுறுகின்றனர்
- kalāma
- كَلَٰمَ
- பேச்சை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- thumma
- ثُمَّ
- பிறகு
- yuḥarrifūnahu
- يُحَرِّفُونَهُۥ
- மாற்றுகின்றனர்/அதை
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- mā ʿaqalūhu
- مَا عَقَلُوهُ
- சிந்தித்து புரிந்தனர்/அதை
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- அறிகின்றனர்
(நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்களென நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௫)Tafseer
وَاِذَا لَقُوا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْٓا اٰمَنَّاۚ وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ قَالُوْٓا اَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَيْكُمْ لِيُحَاۤجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ ۗ اَفَلَا تَعْقِلُوْنَ ٧٦
- wa-idhā laqū
- وَإِذَا لَقُوا۟
- அவர்கள் சந்தித்தால்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கைகொள்கிறோம்
- wa-idhā khalā
- وَإِذَا خَلَا
- தனித்து விட்டால்
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- சிலர்/அவர்களில்
- ilā baʿḍin
- إِلَىٰ بَعْضٍ
- சிலருடன்
- qālū
- قَالُوٓا۟
- கூறுகிறார்கள்
- atuḥaddithūnahum
- أَتُحَدِّثُونَهُم
- அறிவிக்கிறீர்களா?/அவர்களுக்கு
- bimā fataḥa
- بِمَا فَتَحَ
- எதை/தெரிவித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களுக்கு
- liyuḥājjūkum
- لِيُحَآجُّوكُم
- அவர்கள் தர்க்கிப்பதற்காக/உங்களிடம்
- bihi
- بِهِۦ
- அதைக் கொண்டு
- ʿinda rabbikum
- عِندَ رَبِّكُمْۚ
- உங்கள்இறைவன்முன்
- afalā taʿqilūna
- أَفَلَا تَعْقِلُونَ
- நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் ("தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி "(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறுகின்றனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௬)Tafseer
اَوَلَا يَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ ٧٧
- awalā yaʿlamūna
- أَوَلَا يَعْلَمُونَ
- அறிய மாட்டார்களா?
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- நன்கறிவான்
- mā yusirrūna
- مَا يُسِرُّونَ
- எது/இரகசியமாகப் பேசுகிறார்கள்
- wamā yuʿ'linūna
- وَمَا يُعْلِنُونَ
- இன்னும் எது/பகிரங்கப்படுத்துகிறார்கள்
அவர்கள் மறைத்துக் கொள்வதையும் பகிரங்கப்படுத்து வதையும் அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? ([௨] ஸூரத்துல் பகரா: ௭௭)Tafseer
وَمِنْهُمْ اُمِّيُّوْنَ لَا يَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّآ اَمَانِيَّ وَاِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ ٧٨
- wamin'hum
- وَمِنْهُمْ
- அவர்களில்
- ummiyyūna
- أُمِّيُّونَ
- கல்வி இல்லாதவர்கள்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
- l-kitāba illā
- ٱلْكِتَٰبَ إِلَّآ
- வேதத்தை/தவிர
- amāniyya
- أَمَانِىَّ
- வீண் நம்பிக்கைகளை
- wa-in hum
- وَإِنْ هُمْ
- இல்லை/அவர்கள்
- illā
- إِلَّا
- தவிர
- yaẓunnūna
- يَظُنُّونَ
- சந்தேகிக்கிறார்கள்
அன்றி, கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௭௮)Tafseer
فَوَيْلٌ لِّلَّذِيْنَ يَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَيْدِيْهِمْ ثُمَّ يَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِيَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۗفَوَيْلٌ لَّهُمْ مِّمَّا كَتَبَتْ اَيْدِيْهِمْ وَوَيْلٌ لَّهُمْ مِّمَّا يَكْسِبُوْنَ ٧٩
- fawaylun
- فَوَيْلٌ
- கேடுதான்
- lilladhīna
- لِّلَّذِينَ
- எவர்களுக்கு
- yaktubūna
- يَكْتُبُونَ
- எழுதுகிறார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- புத்தகத்தை
- bi-aydīhim
- بِأَيْدِيهِمْ
- தங்கள் கரங்களால்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுகிறார்கள்
- hādhā min
- هَٰذَا مِنْ
- இது/இருந்து
- ʿindi l-lahi
- عِندِ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- liyashtarū
- لِيَشْتَرُوا۟
- அவர்கள் வாங்குவதற்காக
- bihi
- بِهِۦ
- அதைக் கொண்டு
- thamanan
- ثَمَنًا
- கிரயத்தை
- qalīlan
- قَلِيلًاۖ
- சொற்பமான
- fawaylun
- فَوَيْلٌ
- இன்னும் கேடுதான்
- lahum
- لَّهُم
- அவர்களுக்கு
- mimmā
- مِّمَّا
- எதன் காரணமாக
- katabat
- كَتَبَتْ
- எழுதியன
- aydīhim
- أَيْدِيهِمْ
- அவர்களின் கரங்கள்
- wawaylun
- وَوَيْلٌ
- இன்னும் கேடுதான்
- lahum
- لَّهُم
- அவர்களுக்கு
- mimmā
- مِّمَّا
- எதன் காரணமாக
- yaksibūna
- يَكْسِبُونَ
- சம்பாதிக்கிறார்கள்
எவர்கள் தங்கள் கையைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக் கிரயத்தையடைவதற்காக "இது அல்லாஹ் விடமிருந்து வந்ததுதான்" என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்! ([௨] ஸூரத்துல் பகரா: ௭௯)Tafseer
وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّآ اَيَّامًا مَّعْدُوْدَةً ۗ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ يُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗٓ اَمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ٨٠
- waqālū
- وَقَالُوا۟
- இன்னும் கூறினர்
- lan tamassanā
- لَن تَمَسَّنَا
- எங்களை அறவே தீண்டாது
- l-nāru
- ٱلنَّارُ
- நரக நெருப்பு
- illā
- إِلَّآ
- தவிர
- ayyāman
- أَيَّامًا
- நாள்களை
- maʿdūdatan
- مَّعْدُودَةًۚ
- எண்ணப்பட்டவை
- qul
- قُلْ
- கூறுவீராக
- attakhadhtum
- أَتَّخَذْتُمْ
- எடுத்துக் கொண்டீர்களா?
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- ʿahdan
- عَهْدًا
- ஓர் உறுதிமொழியை
- falan yukh'lifa
- فَلَن يُخْلِفَ
- மாற்றவே மாட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿahdahu
- عَهْدَهُۥٓۖ
- உறுதிமொழியை/தன்
- am
- أَمْ
- அல்லது
- taqūlūna
- تَقُولُونَ
- கூறுகிறீர்கள்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- mā
- مَا
- எதை
- lā taʿlamūna
- لَا تَعْلَمُونَ
- அறியமாட்டீர்கள்
"ஒரு சில நாள்களைத் தவிர நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது" என அவர்கள் கூறுகின்றார்கள். (அதற்கு நபியே! அவர்களை) நீங்கள் கேளுங்கள்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கு மாற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கின்றீர்களா? ([௨] ஸூரத்துல் பகரா: ௮௦)Tafseer