Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௭௬

Qur'an Surah Al-Baqarah Verse 76

ஸூரத்துல் பகரா [௨]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا لَقُوا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْٓا اٰمَنَّاۚ وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ قَالُوْٓا اَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَيْكُمْ لِيُحَاۤجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ ۗ اَفَلَا تَعْقِلُوْنَ (البقرة : ٢)

wa-idhā laqū
وَإِذَا لَقُوا۟
And when they meet
அவர்கள் சந்தித்தால்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe[d]
நம்பிக்கை கொண்டார்கள்
qālū
قَالُوٓا۟
they say
கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
"We have believed"
நம்பிக்கைகொள்கிறோம்
wa-idhā khalā
وَإِذَا خَلَا
But when meet in private
தனித்து விட்டால்
baʿḍuhum
بَعْضُهُمْ
some of them
சிலர்/அவர்களில்
ilā baʿḍin
إِلَىٰ بَعْضٍ
with some (others)
சிலருடன்
qālū
قَالُوٓا۟
they say
கூறுகிறார்கள்
atuḥaddithūnahum
أَتُحَدِّثُونَهُم
"Do you tell them
அறிவிக்கிறீர்களா?/அவர்களுக்கு
bimā fataḥa
بِمَا فَتَحَ
what has
எதை/தெரிவித்தான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿalaykum
عَلَيْكُمْ
to you
உங்களுக்கு
liyuḥājjūkum
لِيُحَآجُّوكُم
so that they argue with you
அவர்கள் தர்க்கிப்பதற்காக/உங்களிடம்
bihi
بِهِۦ
therewith
அதைக் கொண்டு
ʿinda rabbikum
عِندَ رَبِّكُمْۚ
before your Lord?
உங்கள்இறைவன்முன்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
Then do (you) not understand?"
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Transliteration:

Wa izaa laqul lazeena aamanoo qaalooo aamannaa wa izaakhalaa ba'duhum ilaa ba'din qaalooo atuhaddisoonahum bimaa fatahal laahu 'alaikum liyuhaajjookum bihee 'inda rabbikum; afalaa ta'qiloon (QS. al-Baq̈arah:76)

English Sahih International:

And when they meet those who believe, they say, "We have believed"; but when they are alone with one another, they say, "Do you talk to them about what Allah has revealed to you so they can argue with you about it before your Lord?" Then will you not reason? (QS. Al-Baqarah, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் ("தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி "(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (ஸூரத்துல் பகரா, வசனம் ௭௬)

Jan Trust Foundation

மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, “நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, “உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால் "(நாங்களும்) நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறுகிறார்கள். அவர்களில் சிலர் சிலருடன் தனித்து விட்டால், "உங்கள் இறைவன் முன் அதைக் கொண்டு அவர்கள் உங்களிடம் தர்க்கிப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு தெரிவித்ததை அவர்களுக்கு அறிவிக்கிறீர்களா?" எனக் கூறுகிறார்கள். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?