كَمَآ اَرْسَلْنَا فِيْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ يَتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِنَا وَيُزَكِّيْكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَۗ ١٥١
- kamā arsalnā
- كَمَآ أَرْسَلْنَا
- நாம் அனுப்பியதற்காக
- fīkum
- فِيكُمْ
- உங்களுக்கு
- rasūlan
- رَسُولًا
- ஒரு தூதரை
- minkum
- مِّنكُمْ
- உங்களிலிருந்தே
- yatlū
- يَتْلُوا۟
- அவர் ஓதுகிறார்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- āyātinā
- ءَايَٰتِنَا
- நம் வசனங்களை
- wayuzakkīkum
- وَيُزَكِّيكُمْ
- இன்னும் உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்
- wayuʿallimukumu
- وَيُعَلِّمُكُمُ
- இன்னும் உங்களுக்குக் கற்பிக்கிறார்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- wal-ḥik'mata
- وَٱلْحِكْمَةَ
- இன்னும் ஞானத்தை
- wayuʿallimukum mā
- وَيُعَلِّمُكُم مَّا
- இன்னும் உங்களுக்கு கற்பிக்கிறார்/எதை
- lam takūnū
- لَمْ تَكُونُوا۟
- நீங்கள்இருக்கவில்லை
- taʿlamūna
- تَعْلَمُونَ
- அறிவீர்கள்
அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் (அவைகளிலுள்ள) ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பி வைத்தோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௧)Tafseer
فَاذْكُرُوْنِيْٓ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِيْ وَلَا تَكْفُرُوْنِ ࣖ ١٥٢
- fa-udh'kurūnī
- فَٱذْكُرُونِىٓ
- ஆகவே நினைவு கூருங்கள் என்னை
- adhkur'kum
- أَذْكُرْكُمْ
- நினைவு கூருவேன்/உங்களை
- wa-ush'kurū lī
- وَٱشْكُرُوا۟ لِى
- இன்னும் நன்றி செலுத்துங்கள்/எனக்கு
- walā takfurūni
- وَلَا تَكْفُرُونِ
- இன்னும் மாறுசெய்யாதீர்கள்/எனக்கு
நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௨)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ۗ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ ١٥٣
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- is'taʿīnū
- ٱسْتَعِينُوا۟
- உதவி கோருங்கள்
- bil-ṣabri
- بِٱلصَّبْرِ
- பொறுமையைக் கொண்டு
- wal-ṣalati
- وَٱلصَّلَوٰةِۚ
- இன்னும் தொழுகை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- maʿa
- مَعَ
- உடன்
- l-ṣābirīna
- ٱلصَّٰبِرِينَ
- பொறுமையாளர்கள்
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௩)Tafseer
وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِيْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ۗ بَلْ اَحْيَاۤءٌ وَّلٰكِنْ لَّا تَشْعُرُوْنَ ١٥٤
- walā taqūlū
- وَلَا تَقُولُوا۟
- இன்னும் கூறாதீர்கள்
- liman
- لِمَن
- எவரை
- yuq'talu
- يُقْتَلُ
- கொல்லப்படுவார்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- amwātun
- أَمْوَٰتٌۢۚ
- இறந்தவர்கள்
- bal
- بَلْ
- மாறாக
- aḥyāon
- أَحْيَآءٌ
- உயிருள்ளவர்கள்
- walākin
- وَلَٰكِن
- எனினும்
- lā tashʿurūna
- لَّا تَشْعُرُونَ
- அறிய மாட்டீர்கள்
அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரி களால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால் (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௪)Tafseer
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِۗ وَبَشِّرِ الصّٰبِرِيْنَ ١٥٥
- walanabluwannakum
- وَلَنَبْلُوَنَّكُم
- நிச்சயமாக சோதிப்போம்/உங்களை
- bishayin
- بِشَىْءٍ
- கொஞ்சத்தைக் கொண்டு
- mina l-khawfi
- مِّنَ ٱلْخَوْفِ
- பயத்திலிருந்து
- wal-jūʿi
- وَٱلْجُوعِ
- இன்னும் பசி
- wanaqṣin
- وَنَقْصٍ
- இன்னும் நஷ்டம்
- mina l-amwāli
- مِّنَ ٱلْأَمْوَٰلِ
- செல்வங்களிலிருந்து
- wal-anfusi
- وَٱلْأَنفُسِ
- இன்னும் உயிர்கள்
- wal-thamarāti
- وَٱلثَّمَرَٰتِۗ
- இன்னும் விளைச்சல்கள்
- wabashiri
- وَبَشِّرِ
- இன்னும் நற்செய்தி கூறுவீராக
- l-ṣābirīna
- ٱلصَّٰبِرِينَ
- பொறுமையாளர்களுக்கு
(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௫)Tafseer
اَلَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۗ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّآ اِلَيْهِ رٰجِعُوْنَۗ ١٥٦
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- idhā aṣābathum
- إِذَآ أَصَٰبَتْهُم
- ஏற்பட்டால்/அவர்களுக்கு
- muṣībatun
- مُّصِيبَةٌ
- ஒரு சோதனை
- qālū
- قَالُوٓا۟
- கூறுவார்கள்
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்காக
- wa-innā
- وَإِنَّآ
- இன்னும் நிச்சயமாக நாம்
- ilayhi
- إِلَيْهِ
- அவனிடமே
- rājiʿūna
- رَٰجِعُونَ
- திரும்புகிறவர்கள்
(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்" எனக் கூறுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௬)Tafseer
اُولٰۤىِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۗوَاُولٰۤىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ ١٥٧
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- ṣalawātun
- صَلَوَٰتٌ
- மன்னிப்பு
- min
- مِّن
- இருந்து
- rabbihim
- رَّبِّهِمْ
- அவர்களின் இறைவன்
- waraḥmatun
- وَرَحْمَةٌۖ
- இன்னும் கருணை
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- இன்னும் அவர்கள்தான்
- l-muh'tadūna
- ٱلْمُهْتَدُونَ
- நேர்வழி பெற்றவர்கள்
இத்தகையவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து புகழுரைகளும் கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், இவர்கள்தாம் நேரான வழியையும் அடைந்தவர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௭)Tafseer
۞ اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَاۤىِٕرِ اللّٰهِ ۚ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا ۗ وَمَنْ تَطَوَّعَ خَيْرًاۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ ١٥٨
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-ṣafā
- ٱلصَّفَا
- ஸஃபா
- wal-marwata
- وَٱلْمَرْوَةَ
- இன்னும் மர்வா
- min
- مِن
- இருந்து
- shaʿāiri
- شَعَآئِرِ
- அடையாளங்கள்
- l-lahi
- ٱللَّهِۖ
- அல்லாஹ்வுடைய
- faman
- فَمَنْ
- ஆகவே எவர்
- ḥajja
- حَجَّ
- ஹஜ்ஜு செய்தார்
- l-bayta
- ٱلْبَيْتَ
- கஅபாவை
- awi
- أَوِ
- அல்லது
- iʿ'tamara
- ٱعْتَمَرَ
- உம்றா செய்தார்
- falā junāḥa
- فَلَا جُنَاحَ
- அறவே குற்றமில்லை
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- an yaṭṭawwafa
- أَن يَطَّوَّفَ
- சுற்றி வருவது
- bihimā
- بِهِمَاۚ
- அவ்விரண்டையும்
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- taṭawwaʿa
- تَطَوَّعَ
- உபரியாகச் செய்தார்
- khayran
- خَيْرًا
- நன்மையை
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- shākirun
- شَاكِرٌ
- நன்றி பாராட்டுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
நிச்சயமாக "ஸஃபா" (மலையும்) "மர்வா" (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் எவர்கள் ("கஅபா" என்னும்) அவ்வீட்டை "ஹஜ்ஜு" அல்லது "உம்ரா" செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமல்ல. ஆகவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுபவ னாகவும் (எண்ணங்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௮)Tafseer
اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰۤىِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَيَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ ١٥٩
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- நிச்சயமாக எவர்கள்
- yaktumūna
- يَكْتُمُونَ
- மறைக்கிறார்கள்
- mā
- مَآ
- எவற்றை
- anzalnā
- أَنزَلْنَا
- இறக்கினோம்
- mina
- مِنَ
- இருந்து
- l-bayināti
- ٱلْبَيِّنَٰتِ
- தெளிவான சான்றுகள்
- wal-hudā
- وَٱلْهُدَىٰ
- இன்னும் நேர்வழி
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- mā bayyannāhu
- مَا بَيَّنَّٰهُ
- நாம் தெளிவுபடுத்தினோம்/அவற்றை
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- fī l-kitābi
- فِى ٱلْكِتَٰبِۙ
- வேதத்தில்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- yalʿanuhumu
- يَلْعَنُهُمُ
- சபிக்கிறான்/அவர்களை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- wayalʿanuhumu
- وَيَلْعَنُهُمُ
- இன்னும் சபிக்கிறார்(கள்)/அவர்களை
- l-lāʿinūna
- ٱللَّٰعِنُونَ
- சபிப்பவர்கள்
நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி(க் கூறி)ய பின்னும் எவர்கள் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கின்றான். (மற்றும்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௯)Tafseer
اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّنُوْا فَاُولٰۤىِٕكَ اَتُوْبُ عَلَيْهِمْ ۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ ١٦٠
- illā alladhīna
- إِلَّا ٱلَّذِينَ
- தவிர/எவர்கள்
- tābū
- تَابُوا۟
- மன்னிப்புக் கோரினார்கள்
- wa-aṣlaḥū
- وَأَصْلَحُوا۟
- இன்னும் சீர்திருத்தினார்கள்
- wabayyanū
- وَبَيَّنُوا۟
- இன்னும் தெளிவுபடுத்தினார்கள்
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- இன்னும் அவர்கள்
- atūbu
- أَتُوبُ
- மன்னிப்பேன்
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- அவர்களை
- wa-anā
- وَأَنَا
- நான்
- l-tawābu
- ٱلتَّوَّابُ
- மகா மன்னிப்பாளன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- மகா கருணையாளன்
ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (தங்கள் வேதங்களில் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்துவிடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௦)Tafseer