Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௫௧

Qur'an Surah Al-Baqarah Verse 151

ஸூரத்துல் பகரா [௨]: ௧௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَمَآ اَرْسَلْنَا فِيْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ يَتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِنَا وَيُزَكِّيْكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَۗ (البقرة : ٢)

kamā arsalnā
كَمَآ أَرْسَلْنَا
As We sent
நாம் அனுப்பியதற்காக
fīkum
فِيكُمْ
among you
உங்களுக்கு
rasūlan
رَسُولًا
a Messenger
ஒரு தூதரை
minkum
مِّنكُمْ
from you
உங்களிலிருந்தே
yatlū
يَتْلُوا۟
(who) recites
அவர் ஓதுகிறார்
ʿalaykum
عَلَيْكُمْ
to you
உங்கள் மீது
āyātinā
ءَايَٰتِنَا
Our verses
நம் வசனங்களை
wayuzakkīkum
وَيُزَكِّيكُمْ
and purifies you
இன்னும் உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்
wayuʿallimukumu
وَيُعَلِّمُكُمُ
and teaches you
இன்னும் உங்களுக்குக் கற்பிக்கிறார்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
and the wisdom
இன்னும் ஞானத்தை
wayuʿallimukum mā
وَيُعَلِّمُكُم مَّا
and teaches you what
இன்னும் உங்களுக்கு கற்பிக்கிறார்/எதை
lam takūnū
لَمْ تَكُونُوا۟
not you were
நீங்கள்இருக்கவில்லை
taʿlamūna
تَعْلَمُونَ
knowing
அறிவீர்கள்

Transliteration:

kamaaa arsalnaa feekum Rasoolam minkum yatloo 'alaikum aayaatina wa yuzakkeekum wa yu'alli mukumul kitaaba wal hikmata wa yu'allimukum maa lam takoonoo ta'lamoon (QS. al-Baq̈arah:151)

English Sahih International:

Just as We have sent among you a messenger from yourselves reciting to you Our verses and purifying you and teaching you the Book and wisdom and teaching you that which you did not know. (QS. Al-Baqarah, Ayah ௧௫௧)

Abdul Hameed Baqavi:

அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் (அவைகளிலுள்ள) ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பி வைத்தோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௫௧)

Jan Trust Foundation

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு தூதரை உங்களுக்கு உங்களிலிருந்து நாம் அனுப்பியதற்காக (வும் என்னைப் பயப்படுங்கள்). அவர் உங்கள் மீது நம் வசனங்களை ஓதுகிறார்; உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்; உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார்; நீங்கள் அறிந்திருக்காதவற்றையும் உங்களுக்குக் கற்பிக்கிறார்.