Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 15

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௪௧

تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ ࣖ ۔ ١٤١

til'ka
تِلْكَ
அது
ummatun
أُمَّةٌ
ஒரு சமுதாயம்
qad khalat
قَدْ خَلَتْۖ
சென்றுவிட்டது
lahā
لَهَا
அதற்கு
mā kasabat
مَا كَسَبَتْ
எது/செய்தது
walakum
وَلَكُم
இன்னும் உங்களுக்கு
مَّا
எது
kasabtum
كَسَبْتُمْۖ
செய்தீர்கள்
walā tus'alūna
وَلَا تُسْـَٔلُونَ
இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
ʿammā
عَمَّا
எது பற்றி
kānū yaʿmalūna
كَانُوا۟ يَعْمَلُونَ
இருந்தார்கள்/ செய்வார்கள்
(மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்.) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உங்களிடம் கேட்கப்படமாட்டாது. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௧)
Tafseer
௧௪௨

۞ سَيَقُوْلُ السُّفَهَاۤءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِيْ كَانُوْا عَلَيْهَا ۗ قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُۗ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ١٤٢

sayaqūlu
سَيَقُولُ
கூறுவார்கள்
l-sufahāu
ٱلسُّفَهَآءُ
அறிவீனர்கள்
mina l-nāsi
مِنَ ٱلنَّاسِ
மக்களில்
مَا
எது
wallāhum
وَلَّىٰهُمْ
திருப்பியது/அவர்களை
ʿan
عَن
விட்டு
qib'latihimu
قِبْلَتِهِمُ
கிப்லா/அவர்களின்
allatī
ٱلَّتِى
எது
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
ʿalayhā
عَلَيْهَاۚ
அதன் மீது
qul
قُل
கூறு(வீராக)
lillahi
لِّلَّهِ
அல்லாஹ்வுக்குரியன
l-mashriqu
ٱلْمَشْرِقُ
கிழக்கு
wal-maghribu
وَٱلْمَغْرِبُۚ
இன்னும் மேற்கு
yahdī
يَهْدِى
நேர்வழிகாட்டுகிறான்
man yashāu
مَن يَشَآءُ
எவர்/நாடுகிறான்
ilā ṣirāṭin
إِلَىٰ صِرَٰطٍ
பாதைக்கு
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான
(நபியே! "முஸ்லிம்கள் முன்னர்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது?" என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புபவர்களை நேரான வழியில் செலுத்துவான்." ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௨)
Tafseer
௧௪௩

وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَاۤءَ عَلَى النَّاسِ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدًا ۗ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِيْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِۗ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ ۗوَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ ۗ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ ١٤٣

wakadhālika
وَكَذَٰلِكَ
இன்னும் அவ்வாறுதான்
jaʿalnākum
جَعَلْنَٰكُمْ
ஆக்கினோம்/உங்களை
ummatan
أُمَّةً
சமுதாயமாக
wasaṭan
وَسَطًا
நடுநிலையான
litakūnū
لِّتَكُونُوا۟
நீங்கள் இருப்பதற்காக
shuhadāa
شُهَدَآءَ
சாட்சிகளாக
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِ
மக்களுக்கு
wayakūna
وَيَكُونَ
இன்னும் இருப்பார்
l-rasūlu
ٱلرَّسُولُ
தூதர்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
shahīdan
شَهِيدًاۗ
சாட்சியாக
wamā jaʿalnā
وَمَا جَعَلْنَا
இன்னும் நாம்ஆக்கவில்லை
l-qib'lata
ٱلْقِبْلَةَ
கிப்லாவை
allatī
ٱلَّتِى
எது
kunta
كُنتَ
நீர் இருந்தீர்
ʿalayhā
عَلَيْهَآ
அதன் மீது
illā
إِلَّا
தவிர
linaʿlama
لِنَعْلَمَ
நாம் அறிவதற்காக
man
مَن
எவர்
yattabiʿu
يَتَّبِعُ
பின்பற்றுவார்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதரை
mimman
مِمَّن
எவரிலிருந்து
yanqalibu
يَنقَلِبُ
திரும்பி விடுகிறார்
ʿalā
عَلَىٰ
மீது
ʿaqibayhi
عَقِبَيْهِۚ
அவருடைய (இரு) குதிங்கால்கள்
wa-in kānat
وَإِن كَانَتْ
இன்னும் நிச்சயமாக அது இருந்தது
lakabīratan
لَكَبِيرَةً
பெரிதாக
illā
إِلَّا
தவிர
ʿalā alladhīna
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
hadā
هَدَى
நேர்வழி நடத்தினான்
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
wamā kāna
وَمَا كَانَ
இன்னும் இருக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyuḍīʿa
لِيُضِيعَ
அவன் வீணாக்குபவனாக
īmānakum
إِيمَٰنَكُمْۚ
உங்கள் நம்பிக்கையை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
bil-nāsi
بِٱلنَّاسِ
மக்கள் மீது
laraūfun
لَرَءُوفٌ
மிக இரக்கமுடையவன்தான்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான வகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக் கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு (வழி காட்டக் கூடிய) சாட்சியாக இருப்பார். (நபியே!) நீங்கள் (இதுவரை முன்நோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீங்கள் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாது தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு)வதற்காகத்தான். ஆனால் எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகின்றானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். தவிர, (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்களுடைய நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகக் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௩)
Tafseer
௧௪௪

قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَاۤءِۚ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا ۖ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ۗ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۗ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ ١٤٤

qad narā
قَدْ نَرَىٰ
திட்டமாக காண்கிறோம்
taqalluba
تَقَلُّبَ
திரும்புவதை
wajhika
وَجْهِكَ
உம் முகம்
fī l-samāi
فِى ٱلسَّمَآءِۖ
வானத்தின் பக்கம்
falanuwalliyannaka
فَلَنُوَلِّيَنَّكَ
ஆகவே நிச்சயமாக திருப்புவோம்/உம்மை
qib'latan
قِبْلَةً
ஒரு கிப்லாவிற்கு
tarḍāhā
تَرْضَىٰهَاۚ
நீர்அதைவிரும்புகிறீர்
fawalli
فَوَلِّ
எனவே திருப்புவீராக
wajhaka
وَجْهَكَ
உம் முகத்தை
shaṭra
شَطْرَ
பக்கம்
l-masjidi
ٱلْمَسْجِدِ
அல் மஸ்ஜிது
l-ḥarāmi
ٱلْحَرَامِۚ
புனிதமான
waḥaythu mā kuntum
وَحَيْثُ مَا كُنتُمْ
நீங்கள் எங்கிருந்தாலும்
fawallū
فَوَلُّوا۟
திருப்புங்கள்
wujūhakum
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
shaṭrahu
شَطْرَهُۥۗ
அதன் பக்கம்
wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
layaʿlamūna
لَيَعْلَمُونَ
திட்டமாக அறிவார்கள்
annahu
أَنَّهُ
நிச்சயமாக அது
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மை
min
مِن
இருந்து
rabbihim
رَّبِّهِمْۗ
தங்கள் இறைவன்
wamā l-lahu
وَمَا ٱللَّهُ
இன்னும் இல்லை/அல்லாஹ்
bighāfilin
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
ʿammā
عَمَّا
எதைப்பற்றி
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
(நபியே!) உங்களுடைய முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீங்கள் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உங்களை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே, நீங்கள் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்தபோதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்த)வர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) "இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்" என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வாறே அவர்களுடைய வேதத்தில் இருக்கின்றது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௪)
Tafseer
௧௪௫

وَلَىِٕنْ اَتَيْتَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰيَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ ۚ وَمَآ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍۗ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَاۤءَهُمْ مِّنْۢ بَعْدِ مَاجَاۤءَكَ مِنَ الْعِلْمِ ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ ۘ ١٤٥

wala-in
وَلَئِنْ
atayta
أَتَيْتَ
நீர் வந்தால்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
bikulli
بِكُلِّ
எல்லாவற்றையும் கொண்டு
āyatin
ءَايَةٍ
அத்தாட்சி
mā tabiʿū
مَّا تَبِعُوا۟
அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்
qib'lataka
قِبْلَتَكَۚ
உமது கிப்லாவை
wamā anta
وَمَآ أَنتَ
இன்னும் இல்லை/நீர்
bitābiʿin
بِتَابِعٍ
பின்பற்றுபவராக
qib'latahum
قِبْلَتَهُمْۚ
அவர்களின்கிப்லாவை
wamā
وَمَا
இன்னும் இல்லை
baʿḍuhum
بَعْضُهُم
அவர்களில் சிலர்
bitābiʿin
بِتَابِعٍ
பின்பற்றுபவராக
qib'lata
قِبْلَةَ
கிப்லாவை
baʿḍin
بَعْضٍۚ
சிலரின்
wala-ini ittabaʿta
وَلَئِنِ ٱتَّبَعْتَ
நீர் பின்பற்றினால்
ahwāahum
أَهْوَآءَهُم
விருப்பங்களை அவர்களுடைய
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
مَا
எது
jāaka
جَآءَكَ
வந்தது/உமக்கு
mina l-ʿil'mi
مِنَ ٱلْعِلْمِۙ
கல்வியிலிருந்து
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
idhan
إِذًا
அப்போது
lamina
لَّمِنَ
தான்/இல்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
ஆகவே (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட அவர்களுக்குத் (திருப்தியளிப்பதற்காக) அத்தாட்சிகள் அனைத்தையும் நீங்கள் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உங்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீங்களும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. அன்றி (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உங்களுக்கு வஹீ(யின் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னும் அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்களும் அநியாயக்கரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்கள்). ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௫)
Tafseer
௧௪௬

اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَاۤءَهُمْ ۗ وَاِنَّ فَرِيْقًا مِّنْهُمْ لَيَكْتُمُوْنَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُوْنَ ١٤٦

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ātaynāhumu
ءَاتَيْنَٰهُمُ
கொடுத்தோம்/அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
yaʿrifūnahu
يَعْرِفُونَهُۥ
அறிவார்கள்/அதை
kamā
كَمَا
போன்று
yaʿrifūna
يَعْرِفُونَ
அறிகிறார்கள்
abnāahum
أَبْنَآءَهُمْۖ
பிள்ளைகளை தங்கள்
wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
farīqan
فَرِيقًا
ஒரு பிரிவினர்
min'hum
مِّنْهُمْ
அவர்களிலிருந்து
layaktumūna
لَيَكْتُمُونَ
திட்டமாக மறைக்கிறார்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
wahum
وَهُمْ
அவர்கள்
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிகிறார்கள்
எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீ ரென்ப)தை அறிவார்கள். ஆனால், அதிலொரு பிரிவினர் நிச்சயமாக நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௬)
Tafseer
௧௪௭

اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ ࣖ ١٤٧

al-ḥaqu min
ٱلْحَقُّ مِن
உண்மை/இருந்து
rabbika
رَّبِّكَۖ
உம் இறைவன்
falā takūnanna
فَلَا تَكُونَنَّ
எனவே, நீர் ஆகிவிட வேண்டாம்
mina l-mum'tarīna
مِنَ ٱلْمُمْتَرِينَ
சந்தேகிப்பவர்களில்
(நபியே! கிப்லாவைப் பற்றி) உங்கள் இறைவனிடமிருந்து வந்த இதுதான் உண்மை(யான கட்டளை.) ஆதலால், நீங்கள் சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஒரு சிறிதும் ஆகிவிட வேண்டாம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௭)
Tafseer
௧௪௮

وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا فَاسْتَبِقُوا الْخَيْرٰتِۗ اَيْنَ مَا تَكُوْنُوْا يَأْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١٤٨

walikullin
وَلِكُلٍّ
ஒவ்வொருவருக்கும்
wij'hatun
وِجْهَةٌ
ஒரு திசை
huwa muwallīhā
هُوَ مُوَلِّيهَاۖ
அவர் அதை முன்னோக்கக்கூடியவர்
fa-is'tabiqū
فَٱسْتَبِقُوا۟
எனவே, முந்திச் செல்லுங்கள்
l-khayrāti
ٱلْخَيْرَٰتِۚ
நன்மைகளில்
ayna mā
أَيْنَ مَا
எங்கே
takūnū
تَكُونُوا۟
நீங்கள்இருந்தாலும்
yati
يَأْتِ
வருவான்
bikumu
بِكُمُ
உங்களைக் கொண்டு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
jamīʿan
جَمِيعًاۚ
அனைவரையும்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள் மீது
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவைகளை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௮)
Tafseer
௧௪௯

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَاِنَّهٗ لَلْحَقُّ مِنْ رَّبِّكَ ۗ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ١٤٩

wamin ḥaythu kharajta
وَمِنْ حَيْثُ خَرَجْتَ
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்
fawalli
فَوَلِّ
திருப்புவீராக
wajhaka
وَجْهَكَ
உம் முகத்தை
shaṭra
شَطْرَ
பக்கம்
l-masjidi
ٱلْمَسْجِدِ
அல் மஸ்ஜிது
l-ḥarāmi
ٱلْحَرَامِۖ
புனிதமான
wa-innahu
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக இது
lalḥaqqu
لَلْحَقُّ
(உ) உண்மைதான்
min
مِن
இருந்து
rabbika
رَّبِّكَۗ
உம் இறைவன்
wamā
وَمَا
இன்னும் இல்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bighāfilin
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
ʿammā
عَمَّا
எது பற்றி
taʿmalūna
تَعْمَلُونَ
நீங்கள் செய்கிறீர்கள்
ஆகவே (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். நிச்சயமாக இதுதான் உங்கள் இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும். (ஆகவே, இதனைப்பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே!) உங்களுடைய செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪௯)
Tafseer
௧௫௦

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِيْ وَلِاُتِمَّ نِعْمَتِيْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَۙ ١٥٠

wamin ḥaythu kharajta
وَمِنْ حَيْثُ خَرَجْتَ
இன்னும் நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்
fawalli
فَوَلِّ
திருப்புவீராக
wajhaka
وَجْهَكَ
உம் முகத்தை
shaṭra
شَطْرَ
பக்கம்
l-masjidi
ٱلْمَسْجِدِ
அல் மஸ்ஜிது
l-ḥarāmi
ٱلْحَرَامِۚ
புனிதமான
waḥaythu mā kuntum
وَحَيْثُ مَا كُنتُمْ
நீங்கள் எங்கிருந்தாலும்
fawallū
فَوَلُّوا۟
திருப்புங்கள்
wujūhakum
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
shaṭrahu
شَطْرَهُۥ
அதன் பக்கம்
li-allā yakūna
لِئَلَّا يَكُونَ
ஆகாமல் இருப்பதற்காக
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கெதிராக
ḥujjatun
حُجَّةٌ
ஓர் ஆதாரம்
illā
إِلَّا
தவிர
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
அநியாயம் செய்தார்கள்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
falā takhshawhum
فَلَا تَخْشَوْهُمْ
ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள்
wa-ikh'shawnī
وَٱخْشَوْنِى
இன்னும் என்னைப் பயப்படுங்கள்
wali-utimma
وَلِأُتِمَّ
இன்னும் நான் முழுமைப்படுத்துவதற்காக
niʿ'matī
نِعْمَتِى
என் அருட்கொடையை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
walaʿallakum tahtadūna
وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ
இன்னும் நீங்கள் நேர்வழி அடைவதற்கு
அன்றி, (நபியே!) நீங்கள் எங்குச் சென்றாலும் தொழும் போது) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் வரம்பு மீறியவர் களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்) விவாதம் செய்ய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்த போதிலும் "அல் மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். அன்றி, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என்னுடைய அருட்கொடையை நான் உங்கள்மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்) நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫௦)
Tafseer