குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௪௮
Qur'an Surah Al-Baqarah Verse 148
ஸூரத்துல் பகரா [௨]: ௧௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا فَاسْتَبِقُوا الْخَيْرٰتِۗ اَيْنَ مَا تَكُوْنُوْا يَأْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (البقرة : ٢)
- walikullin
- وَلِكُلٍّ
- And for everyone
- ஒவ்வொருவருக்கும்
- wij'hatun
- وِجْهَةٌ
- (is) a direction
- ஒரு திசை
- huwa muwallīhā
- هُوَ مُوَلِّيهَاۖ
- he turns towards it
- அவர் அதை முன்னோக்கக்கூடியவர்
- fa-is'tabiqū
- فَٱسْتَبِقُوا۟
- so race
- எனவே, முந்திச் செல்லுங்கள்
- l-khayrāti
- ٱلْخَيْرَٰتِۚ
- (to) the good
- நன்மைகளில்
- ayna mā
- أَيْنَ مَا
- Wherever that
- எங்கே
- takūnū
- تَكُونُوا۟
- you will be
- நீங்கள்இருந்தாலும்
- yati
- يَأْتِ
- will bring
- வருவான்
- bikumu
- بِكُمُ
- you
- உங்களைக் கொண்டு
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- jamīʿan
- جَمِيعًاۚ
- together
- அனைவரையும்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- (is) on every thing
- எல்லாப் பொருள் மீது
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful
- பேராற்றலுடையவன்
Transliteration:
Wa likullinw wijhatun huwa muwalleehaa fastabiqul khairaat; ayna maa takoonoo yaati bikumullaahu jamee'aa; innal laaha 'alaa kulli shai'in qadeer(QS. al-Baq̈arah:148)
English Sahih International:
For each [religious following] is a [prayer] direction toward which it faces. So race to [all that is] good. Wherever you may be, Allah will bring you forth [for judgement] all together. Indeed, Allah is over all things competent. (QS. Al-Baqarah, Ayah ௧௪௮)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவைகளை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௪௮)
Jan Trust Foundation
ஓவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவர் அதைத்தான் முன்னோக்கக் கூடியவர். நன்மைகளில் (நீங்கள் ஒருவரை ஒருவர்) முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.