Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 11

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௦௧

وَلَمَّا جَاۤءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيْقٌ مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَۙ كِتٰبَ اللّٰهِ وَرَاۤءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا يَعْلَمُوْنَۖ ١٠١

walammā jāahum
وَلَمَّا جَآءَهُمْ
போது/வந்தார்/அவர்களிடம்
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
min
مِّنْ
இருந்து
ʿindi l-lahi
عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
muṣaddiqun
مُصَدِّقٌ
உண்மைப்படுத்தக் கூடியவர்
limā maʿahum
لِّمَا مَعَهُمْ
எதை/அவர்களிடம்
nabadha
نَبَذَ
எறிந்தார்(கள்)
farīqun
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
mina alladhīna
مِّنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டனர்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
kitāba
كِتَٰبَ
வேதத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
warāa
وَرَآءَ
பின்னால்
ẓuhūrihim
ظُهُورِهِمْ
முதுகுகளுக்கு தங்கள்
ka-annahum
كَأَنَّهُمْ
போல்/அவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
அல்லாஹ்விடமிருந்து (நம்முடைய) தூதராகிய (நீங்கள்) அவர்களிடம் வந்து அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப் படுத்தியபோதிலும், (முந்திய) வேதம் வழங்கப்பட்ட அவர்களில் பலர் அல்லாஹ்வுடைய (இந்த) திருமறையையே தாங்கள் அறியாதது போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கிப்போட்டு விடுகின்றனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦௧)
Tafseer
௧௦௨

وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ ۚ وَمَا كَفَرَ سُلَيْمٰنُ وَلٰكِنَّ الشَّيٰطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ۗ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَآ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۗ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ۗ وَمَا هُمْ بِضَاۤرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ ۗ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۗ وَلَبِئْسَ مَاشَرَوْا بِهٖٓ اَنْفُسَهُمْ ۗ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ ١٠٢

wa-ittabaʿū
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினார்கள்
mā tatlū
مَا تَتْلُوا۟
எவற்றை/ஓதின
l-shayāṭīnu
ٱلشَّيَٰطِينُ
ஷைத்தான்கள்
ʿalā
عَلَىٰ
இல்
mul'ki
مُلْكِ
ஆட்சி
sulaymāna
سُلَيْمَٰنَۖ
சுலைமானுடைய
wamā kafara
وَمَا كَفَرَ
நிராகரிக்கவில்லை
sulaymānu
سُلَيْمَٰنُ
சுலைமான்
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
l-shayāṭīna
ٱلشَّيَٰطِينَ
ஷைத்தான்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
yuʿallimūna
يُعَلِّمُونَ
கற்பித்தார்கள்
l-nāsa
ٱلنَّاسَ
மனிதர்களுக்கு
l-siḥ'ra
ٱلسِّحْرَ
சூனியத்தை
wamā
وَمَآ
இன்னும் எவற்றை
unzila ʿalā
أُنزِلَ عَلَى
இறக்கப்பட்டன/மீது
l-malakayni
ٱلْمَلَكَيْنِ
இரு வானவர்கள்
bibābila
بِبَابِلَ
பாபிலோனில்
hārūta
هَٰرُوتَ
ஹறாரூத்
wamārūta
وَمَٰرُوتَۚ
இன்னும் மாரூத்
wamā yuʿallimāni
وَمَا يُعَلِّمَانِ
அவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை
min aḥadin
مِنْ أَحَدٍ
ஒருவருக்கும்
ḥattā
حَتَّىٰ
வரை
yaqūlā
يَقُولَآ
அவ்விருவரும் கூறுவார்கள்
innamā naḥnu
إِنَّمَا نَحْنُ
நாங்கள் எல்லாம்
fit'natun
فِتْنَةٌ
ஒரு சோதனை
falā takfur
فَلَا تَكْفُرْۖ
ஆகவேநிராகரிக்காதே
fayataʿallamūna
فَيَتَعَلَّمُونَ
கற்றார்கள்
min'humā
مِنْهُمَا
அவ்விருவரிடமிருந்து
مَا
எதை
yufarriqūna
يُفَرِّقُونَ
பிரிப்பார்கள்
bihi
بِهِۦ
அதன் மூலம்
bayna
بَيْنَ
இடையில்
l-mari
ٱلْمَرْءِ
ஆண்
wazawjihi
وَزَوْجِهِۦۚ
இன்னும் மனைவி/அவனுடைய
wamā
وَمَا
இல்லை
hum
هُم
அவர்கள்
biḍārrīna
بِضَآرِّينَ
தீங்கிழைப்பவர்களாக
bihi
بِهِۦ
அதன் மூலம்
min aḥadin
مِنْ أَحَدٍ
ஒருவருக்கும்
illā
إِلَّا
தவிர
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டே
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
wayataʿallamūna
وَيَتَعَلَّمُونَ
கற்றார்கள்
مَا
எவற்றை
yaḍurruhum
يَضُرُّهُمْ
தீங்கிழைக்கும்/அவர்களுக்கு
walā yanfaʿuhum
وَلَا يَنفَعُهُمْۚ
இன்னும் பலனளிக்காது/அவர்களுக்கு
walaqad
وَلَقَدْ
இன்னும் திட்டவட்டமாக
ʿalimū
عَلِمُوا۟
அறிந்தார்கள்
lamani ish'tarāhu
لَمَنِ ٱشْتَرَىٰهُ
நிச்சயமாக எவர்/விலைக்கு வாங்கினார்/அதை
mā lahu
مَا لَهُۥ
இல்லை/அவருக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
min khalāqin
مِنْ خَلَٰقٍۚ
எந்த பாக்கியமும்
walabi'sa
وَلَبِئْسَ
இன்னும் திட்டமாக கெட்டது
mā sharaw
مَا شَرَوْا۟
எது/விற்றார்கள்
bihi
بِهِۦٓ
அதற்கு பகரமாக
anfusahum
أَنفُسَهُمْۚ
தங்களையே
law kānū yaʿlamūna
لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே
மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ "நிராகரிப்பவராக" இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் "பாபிலூன்" (என்னும் ஊரில்) "ஹாரூத்" "மாரூத்" என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர் களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர் களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦௨)
Tafseer
௧௦௩

وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَيْرٌ ۗ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ ࣖ ١٠٣

walaw annahum āmanū
وَلَوْ أَنَّهُمْ ءَامَنُوا۟
நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டால்
wa-ittaqaw
وَٱتَّقَوْا۟
இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்கள்
lamathūbatun
لَمَثُوبَةٌ
திட்டமாக சன்மானம்
min ʿindi l-lahi
مِّنْ عِندِ ٱللَّهِ
இடமிருந்து/அல்லாஹ்
khayrun
خَيْرٌۖ
சிறந்தது
law kānū yaʿlamūna
لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
ஆகவே அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, (அச்சூனியங்களை விட்டு) விலகிக்கொண்டால் (அவர்களுக்கு) அல்லாஹ்விடம் கிடைக்கும் சன்மானம் நிச்சயமாக மிக மேலானதாயிருக்கும். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦௩)
Tafseer
௧௦௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَقُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ ١٠٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
lā taqūlū
لَا تَقُولُوا۟
கூறாதீர்கள்
rāʿinā
رَٰعِنَا
ராஇனா
waqūlū
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
unẓur'nā
ٱنظُرْنَا
உன்ளுர்னா (பாருங்கள்/எங்களை)
wa-is'maʿū
وَٱسْمَعُوا۟ۗ
இன்னும் செவிமடுங்கள்
walil'kāfirīna
وَلِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) "ராயினா" எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக "எங்களைப் பாருங்கள்!" என்ற பொருளைத் தரும்) "உன்ளுர்னா" எனக் கூறுங்கள். (மேலும் நபி கூறுவதை முழுமையாக) செவிமடுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦௪)
Tafseer
௧௦௫

مَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَلَا الْمُشْرِكِيْنَ اَنْ يُّنَزَّلَ عَلَيْكُمْ مِّنْ خَيْرٍ مِّنْ رَّبِّكُمْ ۗ وَاللّٰهُ يَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ يَّشَاۤءُ ۗ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ ١٠٥

mā yawaddu
مَّا يَوَدُّ
விரும்பமாட்டார்(கள்)
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
எவர்கள்/நிராகரித்தனர்
min ahli l-kitābi
مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களாகிய
walā l-mush'rikīna
وَلَا ٱلْمُشْرِكِينَ
இன்னும் இணைவைப்பவர்கள்
an yunazzala
أَن يُنَزَّلَ
இறக்கப்படுவதை
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
min khayrin
مِّنْ خَيْرٍ
சிறந்தது எதுவும்
min
مِّن
இருந்து
rabbikum
رَّبِّكُمْۗ
இறைவன்/உங்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yakhtaṣṣu
يَخْتَصُّ
சொந்தமாக்குகிறான்
biraḥmatihi
بِرَحْمَتِهِۦ
கருணையை/தன்
man
مَن
எவர்
yashāu
يَشَآءُۚ
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
dhū l-faḍli
ذُو ٱلْفَضْلِ
அருளுடையவன்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
பெரும்
(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களாயினும், இணைவைத்து வணங்குபவர்களாயினும் (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்கள் (தங்களிடம் உள்ளதைவிட) மேலானதொன்று உங்கள் இறைவனால் உங்கள்மீது அருளப்படுவதை விரும்பவே மாட்டார்கள். ஆனால் அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்குத் தன் கிருபையைச் சொந்தமாக்கி விடுகின்றான். அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦௫)
Tafseer
௧௦௬

۞ مَا نَنْسَخْ مِنْ اٰيَةٍ اَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِّنْهَآ اَوْ مِثْلِهَا ۗ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١٠٦

mā nansakh
مَا نَنسَخْ
நாம் மாற்றினால்
min
مِنْ
இருந்து
āyatin
ءَايَةٍ
ஒரு வசனம்
aw
أَوْ
அல்லது
nunsihā
نُنسِهَا
மறக்கடித்தால்/அதை
nati
نَأْتِ
வருவோம்
bikhayrin
بِخَيْرٍ
சிறந்ததைக் கொண்டு
min'hā
مِّنْهَآ
அதைவிட
aw
أَوْ
அல்லது
mith'lihā
مِثْلِهَآۗ
அது போன்றதை
alam taʿlam
أَلَمْ تَعْلَمْ
நீர் அறியவில்லையா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்கள் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நபியே!) யாதொரு வசனத்தை நாம் மாற்றினாலும் அல்லது அதை மறக்கடித்தாலும் அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிடச் சிறந்ததை நாம் கொண்டு வருவோம். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் நிச்சயமாக ஆற்றலுடையவன் என்பதை நீங்கள் அறியவில்லையா? ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦௬)
Tafseer
௧௦௭

اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۗ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ ١٠٧

alam taʿlam
أَلَمْ تَعْلَمْ
நீர் அறியவில்லையா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lahu
لَهُۥ
அவனுக்கு உரியது
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமி
wamā
وَمَا
இன்னும் இல்லை
lakum
لَكُم
உங்களுக்கு
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வைத் தவிர
min
مِن
அறவே
waliyyin
وَلِىٍّ
பொறுப்பாளர்
walā naṣīrin
وَلَا نَصِيرٍ
இன்னும் உதவியாளர் இல்லை
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதென்பதையும் நீங்கள் அறியவில்லையா? (நம்பிக்கை யாளர்களே!) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனும் இல்லை; உதவி செய்பவனுமில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦௭)
Tafseer
௧௦௮

اَمْ تُرِيْدُوْنَ اَنْ تَسْـَٔلُوْا رَسُوْلَكُمْ كَمَا سُىِٕلَ مُوْسٰى مِنْ قَبْلُ ۗوَمَنْ يَّتَبَدَّلِ الْكُفْرَ بِالْاِيْمَانِ فَقَدْ ضَلَّ سَوَاۤءَ السَّبِيْلِ ١٠٨

am turīdūna
أَمْ تُرِيدُونَ
நாடுகிறீர்களா?
an tasalū
أَن تَسْـَٔلُوا۟
நீங்கள் கேள்வி கேட்க
rasūlakum
رَسُولَكُمْ
தூதரி டம்/உங்கள்
kamā
كَمَا
போல்
su-ila
سُئِلَ
கேள்வி கேட்கப்பட்டார்
mūsā
مُوسَىٰ
மூசா
min qablu
مِن قَبْلُۗ
முன்னர்
waman
وَمَن
இன்னும் எவர்
yatabaddali
يَتَبَدَّلِ
மாற்றுவார்
l-kuf'ra
ٱلْكُفْرَ
நிராகரிப்பை
bil-īmāni
بِٱلْإِيمَٰنِ
நம்பிக்கைக்குப் பகரமாக
faqad
فَقَدْ
திட்டமாக
ḍalla
ضَلَّ
தவறினார்
sawāa
سَوَآءَ
நேர்
l-sabīli
ٱلسَّبِيلِ
வழி
(நம்பிக்கையாளர்களே!) இதற்கு முன்னர் மூஸாவிடம் (அவருடைய மக்கள் வீணான கேள்விகளைக்) கேட்டதைப் போல் நீங்களும் உங்களுக்கு அனுப்பட்ட தூதரிடம் கேட்க விரும்பு கிறீர்களா? எவர் (இத்தகைய கேள்விகளைக் கேட்டு) தன்னுடைய நம்பிக்கையை நிராகரிப்பைக் கொண்டு மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேரான வழியைவிட்டு மெய்யாகவே தவறிவிட்டார். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦௮)
Tafseer
௧௦௯

وَدَّ كَثِيْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يَرُدُّوْنَكُمْ مِّنْۢ بَعْدِ اِيْمَانِكُمْ كُفَّارًاۚ حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ ۚ فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰى يَأْتِيَ اللّٰهُ بِاَمْرِهٖ ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١٠٩

wadda
وَدَّ
விரும்பினார்(கள்)
kathīrun
كَثِيرٌ
அதிகமானவர்கள்
min ahli l-kitābi
مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
law yaruddūnakum
لَوْ يَرُدُّونَكُم
அவர்கள் திருப்பிவிடவேண்டுமே/உங்களை
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
īmānikum
إِيمَٰنِكُمْ
நம்பிக்கை/உங்கள்
kuffāran
كُفَّارًا
நிராகரிப்பாளர்களாக
ḥasadan
حَسَدًا
பொறாமையினால்
min ʿindi anfusihim
مِّنْ عِندِ أَنفُسِهِم
அவர்களின் உள்ளங்களில்
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
mā tabayyana
مَا تَبَيَّنَ
தெளிவானதற்கு
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-ḥaqu
ٱلْحَقُّۖ
உண்மை
fa-iʿ'fū
فَٱعْفُوا۟
ஆகவே மன்னியுங்கள்
wa-iṣ'faḥū
وَٱصْفَحُوا۟
இன்னும் புறக்கணியுங்கள்
ḥattā yatiya
حَتَّىٰ يَأْتِىَ
வரும் வரை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bi-amrihi
بِأَمْرِهِۦٓۗ
கட்டளையைக் கொண்டு/தன்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
kulli
كُلِّ
எல்லா
shayin
شَىْءٍ
பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் இவ்வாறு அவர்கள் விரும்புவதன் காரணமெல்லாம் அவர்களுக்கு (உங்கள் மீது)ள்ள பொறாமைதான். ஆகவே, அல்லாஹ்வுடைய (மற்றொரு) கட்டளை வரும் வரையில் (அவர்களை) நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிகவும் ஆற்றலுடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦௯)
Tafseer
௧௧௦

وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ۗ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ١١٠

wa-aqīmū
وَأَقِيمُوا۟
நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَۚ
ஸகாத்தை
wamā
وَمَا
இன்னும் எதை
tuqaddimū
تُقَدِّمُوا۟
முற்படுத்துவீர்கள்
li-anfusikum
لِأَنفُسِكُم
உங்களுக்காக
min khayrin
مِّنْ خَيْرٍ
நன்மையில்
tajidūhu
تَجِدُوهُ
அதை பெறுவீர்கள்
ʿinda
عِندَ
இடத்தில்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
bimā
بِمَا
எவற்றை
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
அன்றி, நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தும், "ஜகாத்" (மார்க்கவரி) கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் (மரணத்திற்கு) முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டி அனுப்பி வைப்பீர்களோ அதனையே அல்லாஹ்விடம் (மறுமையில்) பெற்றுக்கொள்வீர்கள். (ஆதலால் இறப்பதற்கு முன்னரே இயன்றளவு நன்மை செய்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧௦)
Tafseer