Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௦௮

Qur'an Surah Al-Baqarah Verse 108

ஸூரத்துல் பகரா [௨]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ تُرِيْدُوْنَ اَنْ تَسْـَٔلُوْا رَسُوْلَكُمْ كَمَا سُىِٕلَ مُوْسٰى مِنْ قَبْلُ ۗوَمَنْ يَّتَبَدَّلِ الْكُفْرَ بِالْاِيْمَانِ فَقَدْ ضَلَّ سَوَاۤءَ السَّبِيْلِ (البقرة : ٢)

am turīdūna
أَمْ تُرِيدُونَ
Or (do) you wish
நாடுகிறீர்களா?
an tasalū
أَن تَسْـَٔلُوا۟
that you ask
நீங்கள் கேள்வி கேட்க
rasūlakum
رَسُولَكُمْ
your Messenger
தூதரி டம்/உங்கள்
kamā
كَمَا
as
போல்
su-ila
سُئِلَ
was asked
கேள்வி கேட்கப்பட்டார்
mūsā
مُوسَىٰ
Musa
மூசா
min qablu
مِن قَبْلُۗ
from before?
முன்னர்
waman
وَمَن
And whoever
இன்னும் எவர்
yatabaddali
يَتَبَدَّلِ
exchanges
மாற்றுவார்
l-kuf'ra
ٱلْكُفْرَ
[the] disbelief
நிராகரிப்பை
bil-īmāni
بِٱلْإِيمَٰنِ
with [the] faith
நம்பிக்கைக்குப் பகரமாக
faqad
فَقَدْ
so certainly
திட்டமாக
ḍalla
ضَلَّ
he went astray (from)
தவறினார்
sawāa
سَوَآءَ
(the) evenness
நேர்
l-sabīli
ٱلسَّبِيلِ
(of) the way
வழி

Transliteration:

Am tureedoona an tas'aloo Rasoolakum kamaa su'ila Moosa min qabl; wa mai yatabaddalil kufra bil eemaani faqad dalla sawaaa'as sabeel (QS. al-Baq̈arah:108)

English Sahih International:

Or do you intend to ask your Messenger as Moses was asked before? And whoever exchanges faith for disbelief has certainly strayed from the soundness of the way. (QS. Al-Baqarah, Ayah ௧௦௮)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) இதற்கு முன்னர் மூஸாவிடம் (அவருடைய மக்கள் வீணான கேள்விகளைக்) கேட்டதைப் போல் நீங்களும் உங்களுக்கு அனுப்பட்ட தூதரிடம் கேட்க விரும்பு கிறீர்களா? எவர் (இத்தகைய கேள்விகளைக் கேட்டு) தன்னுடைய நம்பிக்கையை நிராகரிப்பைக் கொண்டு மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேரான வழியைவிட்டு மெய்யாகவே தவறிவிட்டார். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௦௮)

Jan Trust Foundation

இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை “குஃப்ரினால்” மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இதற்கு) முன்னர் மூசா கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க நாடுகிறீர்களா? எவர் நம்பிக்கைக்குப் பகரமாக நிராகரிப்பை மாற்றுவாரோ அவர் திட்டமாக நேர்வழியைத் தவறினார்.