اِنَّكُمْ لَتَأْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَاۤءِۗ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ٨١
- innakum
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- latatūna
- لَتَأْتُونَ
- வருகிறீர்கள்
- l-rijāla
- ٱلرِّجَالَ
- ஆண்களிடம்
- shahwatan
- شَهْوَةً
- காமத்திற்கு
- min dūni
- مِّن دُونِ
- அன்றி
- l-nisāi
- ٱلنِّسَآءِۚ
- பெண்கள்
- bal
- بَلْ
- மாறாக
- antum
- أَنتُمْ
- நீங்கள்
- qawmun
- قَوْمٌ
- மக்கள்
- mus'rifūna
- مُّسْرِفُونَ
- வரம்பு மீறியவர்கள்
நிச்சயமாக நீங்கள் பெண்களைவிட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கின்றீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௧)Tafseer
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖٓ اِلَّآ اَنْ قَالُوْٓا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْيَتِكُمْۚ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ ٨٢
- wamā kāna
- وَمَا كَانَ
- இருக்கவில்லை
- jawāba
- جَوَابَ
- பதிலாக
- qawmihi
- قَوْمِهِۦٓ
- அவருடைய சமுதாயத்தினரின்
- illā
- إِلَّآ
- தவிர
- an qālū
- أَن قَالُوٓا۟
- என்று அவர்கள் கூறியது
- akhrijūhum
- أَخْرِجُوهُم
- வெளியேற்றுங்கள்
- min
- مِّن
- இவர்களை
- qaryatikum
- قَرْيَتِكُمْۖ
- உங்கள் ஊரிலிருந்து
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக இவர்கள்
- unāsun
- أُنَاسٌ
- மனிதர்கள்
- yataṭahharūna
- يَتَطَهَّرُونَ
- சுத்தமானவர்கள்
அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) "இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகி விடலாமெனப் பார்க்கின்றனர்" என்றுதான் பதில் கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௨)Tafseer
فَاَنْجَيْنٰهُ وَاَهْلَهٗٓ اِلَّا امْرَاَتَهٗ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ ٨٣
- fa-anjaynāhu
- فَأَنجَيْنَٰهُ
- ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
- wa-ahlahu
- وَأَهْلَهُۥٓ
- இன்னும் அவருடைய குடும்பத்தை
- illā
- إِلَّا
- தவிர
- im'ra-atahu
- ٱمْرَأَتَهُۥ
- அவருடைய மனைவியை
- kānat
- كَانَتْ
- அவள் ஆகினாள்
- mina l-ghābirīna
- مِنَ ٱلْغَٰبِرِينَ
- தங்கியவர்களில்
ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௩)Tafseer
وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًاۗ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِيْنَ ࣖ ٨٤
- wa-amṭarnā
- وَأَمْطَرْنَا
- பொழிவித்தோம்
- ʿalayhim
- عَلَيْهِم
- அவர்கள் மீது
- maṭaran
- مَّطَرًاۖ
- மழையை
- fa-unẓur
- فَٱنظُرْ
- ஆகவே கவனிப்பீராக
- kayfa
- كَيْفَ
- எவ்வாறு
- kāna
- كَانَ
- ஆகிவிட்டது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- முடிவு
- l-muj'rimīna
- ٱلْمُجْرِمِينَ
- குற்றவாளிகளின்
அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௪)Tafseer
وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًاۗ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ قَدْ جَاۤءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَاۤءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَاۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ ٨٥
- wa-ilā madyana
- وَإِلَىٰ مَدْيَنَ
- ‘மத்யன்’க்கு
- akhāhum
- أَخَاهُمْ
- சகோதரர்/அவர்களுடைய
- shuʿayban
- شُعَيْبًاۗ
- ‘ஷுஐப்’ஐ
- qāla
- قَالَ
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் சமுதாயமே
- uʿ'budū
- ٱعْبُدُوا۟
- வணங்குங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- mā lakum
- مَا لَكُم
- உங்களுக்கில்லை
- min ilāhin
- مِّنْ إِلَٰهٍ
- வணங்கப்படும் ஒரு கடவுள்
- ghayruhu
- غَيْرُهُۥۖ
- அவனையன்றி
- qad jāatkum
- قَدْ جَآءَتْكُم
- வந்துவிட்டது/உங்களுக்கு
- bayyinatun
- بَيِّنَةٌ
- ஓர் அத்தாட்சி
- min
- مِّن
- இருந்து
- rabbikum
- رَّبِّكُمْۖ
- உங்கள் இறைவன்
- fa-awfū
- فَأَوْفُوا۟
- ஆகவே முழுமையாக்குங்கள்
- l-kayla
- ٱلْكَيْلَ
- அளவை
- wal-mīzāna
- وَٱلْمِيزَانَ
- இன்னும் நிறுவையை
- walā tabkhasū
- وَلَا تَبْخَسُوا۟
- குறைக்காதீர்கள்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களுக்கு
- ashyāahum
- أَشْيَآءَهُمْ
- பொருள்களில் அவர்களுடைய
- walā tuf'sidū
- وَلَا تُفْسِدُوا۟
- கலகம் செய்யாதீர்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- iṣ'lāḥihā
- إِصْلَٰحِهَاۚ
- அது சீர்திருத்தப்பட்ட
- dhālikum
- ذَٰلِكُمْ
- இவை
- khayrun
- خَيْرٌ
- சிறந்தது
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கு
- in kuntum
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கை கொள்பவர்களாக
"மத்யன்" (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் "ஷுஐபை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது. ஆகவே அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் யாதொன்றையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௫)Tafseer
وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًاۚ وَاذْكُرُوْٓا اِذْ كُنْتُمْ قَلِيْلًا فَكَثَّرَكُمْۖ وَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ ٨٦
- walā taqʿudū
- وَلَا تَقْعُدُوا۟
- அமராதீர்கள்
- bikulli ṣirāṭin
- بِكُلِّ صِرَٰطٍ
- எல்லாப் பாதையிலும்
- tūʿidūna
- تُوعِدُونَ
- அச்சுறுத்தியவர்களாக
- wataṣuddūna
- وَتَصُدُّونَ
- இன்னும் தடுப்பவர்களாக
- ʿan sabīli
- عَن سَبِيلِ
- பாதையை விட்டு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- man āmana
- مَنْ ءَامَنَ
- எவரை/ நம்பிக்கைகொண்டார்
- bihi
- بِهِۦ
- அவனை
- watabghūnahā
- وَتَبْغُونَهَا
- இன்னும் அதில் தேடியவர்களாக
- ʿiwajan
- عِوَجًاۚ
- கோணலை
- wa-udh'kurū
- وَٱذْكُرُوٓا۟
- நினைவு கூருங்கள்
- idh
- إِذْ
- சமயம்
- kuntum
- كُنتُمْ
- இருந்தீர்கள்
- qalīlan
- قَلِيلًا
- குறைவாக
- fakatharakum
- فَكَثَّرَكُمْۖ
- அதிகமாக்கினான் உங்களை
- wa-unẓurū
- وَٱنظُرُوا۟
- இன்னும் கவனியுங்கள்
- kayfa
- كَيْفَ
- எவ்வாறு
- kāna
- كَانَ
- இருந்தது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- முடிவு
- l-muf'sidīna
- ٱلْمُفْسِدِينَ
- கலகம் செய்பவர்களின்
(அன்றி) "நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்துகொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக!" (என்றும் கூறினார்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௬)Tafseer
وَاِنْ كَانَ طَاۤىِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِيْٓ اُرْسِلْتُ بِهٖ وَطَاۤىِٕفَةٌ لَّمْ يُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰى يَحْكُمَ اللّٰهُ بَيْنَنَاۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ ۔ ٨٧
- wa-in kāna
- وَإِن كَانَ
- இருந்தால்
- ṭāifatun
- طَآئِفَةٌ
- ஒரு பிரிவினர்
- minkum
- مِّنكُمْ
- உங்களில்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்களாக
- bi-alladhī
- بِٱلَّذِىٓ
- எதைக்கொண்டு
- ur'sil'tu
- أُرْسِلْتُ
- அனுப்பப்பட்டேன்
- bihi
- بِهِۦ
- அதைக் கொண்டு
- waṭāifatun
- وَطَآئِفَةٌ
- இன்னும் ஒரு பிரிவினர்
- lam yu'minū
- لَّمْ يُؤْمِنُوا۟
- அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களாக
- fa-iṣ'birū
- فَٱصْبِرُوا۟
- பொறுங்கள்
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- yaḥkuma
- يَحْكُمَ
- தீர்ப்பளிக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- baynanā
- بَيْنَنَاۚ
- நமக்கு மத்தியில்
- wahuwa
- وَهُوَ
- அவன்
- khayru
- خَيْرُ
- மிகச் சிறந்தவன்
- l-ḥākimīna
- ٱلْحَٰكِمِينَ
- தீர்ப்பளிப்பவர்களில்
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதனை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௭)Tafseer
قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ يٰشُعَيْبُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْيَتِنَآ اَوْ لَتَعُوْدُنَّ فِيْ مِلَّتِنَاۗ قَالَ اَوَلَوْ كُنَّا كَارِهِيْنَ ٨٨
- qāla
- قَالَ
- கூறினார்(கள்)
- l-mala-u
- ٱلْمَلَأُ
- தலைவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- is'takbarū
- ٱسْتَكْبَرُوا۟
- பெருமையடித்தனர்
- min qawmihi
- مِن قَوْمِهِۦ
- அவருடைய சமுதாயத்தில்
- lanukh'rijannaka
- لَنُخْرِجَنَّكَ
- நிச்சயம் வெளியேற்றுவோம்/உம்மை
- yāshuʿaybu
- يَٰشُعَيْبُ
- ஷுஐபே
- wa-alladhīna āmanū
- وَٱلَّذِينَ ءَامَنُوا۟
- இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை
- maʿaka min
- مَعَكَ مِن
- உம்முடன்/இருந்து
- qaryatinā
- قَرْيَتِنَآ
- எங்கள் ஊர்
- aw lataʿūdunna
- أَوْ لَتَعُودُنَّ
- அல்லது/நிச்சயமாக நீங்கள் திரும்பிவிட வேண்டும்
- fī millatinā
- فِى مِلَّتِنَاۚ
- எங்கள் கொள்கைக்கு
- qāla
- قَالَ
- கூறினார்
- awalaw kunnā
- أَوَلَوْ كُنَّا
- நாங்கள் இருந்தாலுமா?
- kārihīna
- كَٰرِهِينَ
- வெறுப்பவர்களாக
(ஷுஐப் நபியை நாம் நம்முடைய தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) "ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்களுடைய மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து துரத்தி விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி "உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?" என்று கேட்டார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௮)Tafseer
قَدِ افْتَرَيْنَا عَلَى اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِيْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَاۗ وَمَا يَكُوْنُ لَنَآ اَنْ نَّعُوْدَ فِيْهَآ اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ رَبُّنَاۗ وَسِعَ رَبُّنَا كُلَّ شَيْءٍ عِلْمًاۗ عَلَى اللّٰهِ تَوَكَّلْنَاۗ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَيْرُ الْفَاتِحِيْنَ ٨٩
- qadi if'taraynā
- قَدِ ٱفْتَرَيْنَا
- நாங்கள் இட்டுக்கட்டிவிடுவோம்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- kadhiban
- كَذِبًا
- பொய்யை
- in ʿud'nā
- إِنْ عُدْنَا
- நாங்கள் திரும்பினால்
- fī millatikum
- فِى مِلَّتِكُم
- உங்கள் கொள்கைக்கு
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- idh
- إِذْ
- போது
- najjānā
- نَجَّىٰنَا
- பாதுகாத்தான்/ எங்களை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- min'hā
- مِنْهَاۚ
- அதிலிருந்து
- wamā yakūnu lanā
- وَمَا يَكُونُ لَنَآ
- ஆகாது/எங்களுக்கு
- an naʿūda
- أَن نَّعُودَ
- நாங்கள் திரும்புவது
- fīhā
- فِيهَآ
- அதில்
- illā
- إِلَّآ
- தவிர
- an yashāa
- أَن يَشَآءَ
- நாடியே
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- rabbunā
- رَبُّنَاۚ
- எங்கள் இறைவனாகிய
- wasiʿa
- وَسِعَ
- விசாலமானவன்
- rabbunā
- رَبُّنَا
- எங்கள் இறைவன்
- kulla shayin
- كُلَّ شَىْءٍ
- எல்லாவற்றையும்விட
- ʿil'man
- عِلْمًاۚ
- ஞானத்தால்
- ʿalā
- عَلَى
- மீதே
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- tawakkalnā
- تَوَكَّلْنَاۚ
- நம்பிக்கைவைத்தோம்
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- if'taḥ
- ٱفْتَحْ
- தீர்ப்பளி(முடிவுசெய்)
- baynanā
- بَيْنَنَا
- எங்களுக்கிடையில்
- wabayna
- وَبَيْنَ
- இன்னும் இடையில்
- qawminā
- قَوْمِنَا
- எங்கள் சமுதாயத்திற்கு
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- நியாயமாக
- wa-anta
- وَأَنتَ
- நீ
- khayru
- خَيْرُ
- மிகச் சிறந்தவன்
- l-fātiḥīna
- ٱلْفَٰتِحِينَ
- தீர்ப்பளிப்பவர்களில்
(அன்றி) "உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்" (என்றும் கூறி, இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்" (என்றும் பிரார்த்தித்தார்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௯)Tafseer
وَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَيْبًا ِانَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ٩٠
- waqāla
- وَقَالَ
- கூறினார்(கள்)
- l-mala-u
- ٱلْمَلَأُ
- தலைவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- min qawmihi
- مِن قَوْمِهِۦ
- அவருடைய சமுதாயத்தில்
- la-ini ittabaʿtum
- لَئِنِ ٱتَّبَعْتُمْ
- நீங்கள் பின்பற்றினால்
- shuʿayban
- شُعَيْبًا
- ஷுஐபை
- innakum
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- idhan lakhāsirūna
- إِذًا لَّخَٰسِرُونَ
- அப்போது/நஷ்டவாளிகள்தான்
(ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯௦)Tafseer